தினசரி சமையலறை வேலைகளுக்கு இந்த ஐடியா எல்லாமே சூப்பரா இருக்குதே! இத்தனை நாட்களாக இந்த சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் தெரியாமல் மிஸ் பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ற அளவுக்கு 10 சூப்பரான ஐடியாக்கள் இதோ உங்களுக்காக.

kitchen1
- Advertisement -

சமையலறையில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சின்ன சின்ன குறிப்புகள் தான். ஆனால் இந்த குறிப்புகளை எல்லாம் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் சூப்பராக சமையல் அறையில் வரக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கலாம். அப்படிப்பட்ட எளிய வீட்டு குறிப்புகள் தான் இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இல்லத்தரசிகளுக்கு தேவையான எளிமையான 10 வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

எளிய 10 வீட்டு குறிப்புகள்:
ஹோட்டலில் வெஜிடபிள் குருமாவில் பீட்ரூட் இருக்கும். ஆனால் குருமாவின் நிறம் சிவப்பு நிறமாக மாறி இருக்காது. அது எப்படி தெரியுமா. பீட்ரூட்டை துண்டு துண்டாக நறுக்கி எண்ணெயில் இரண்டு நிமிடம் வதக்கி அதை எடுத்து வெஜிடபிள் குருமாவில் போட்டால் குருமாவின் கலர் சிவப்பு நிறமாக மாறாது.

- Advertisement -

Tip 2:
இட்லி சட்டியில் தண்ணீரை ஊற்றிவிட்டு அதில் 1 ரூபாய் நாணயத்தை போடுங்கள். பிறகு மாவு ஊற்றி இட்லி தட்டுகளை அடுக்கி வையுங்கள். தண்ணீர் தீரும் சமயத்தில் உள்ளே போட்டிருக்கும் நாணயம் சத்தம் எழுப்பும். அப்போது இட்லி சட்டியில் தண்ணீர் தீர போகிறது என்று உடனடியாக அடுப்பை அணைக்கலாம். இதை செய்தால் அடிக்கடி தண்ணீர் தீர்ந்து உங்கள் வீட்டு இட்லி பாத்திரம் கருகிப் போகாமல் இருக்கும். இட்லியில் கருகிய வாடையும் வீசாது.

Tip 3:
ஒருவேளை உங்கள் இட்லி பாத்திரத்திற்கு அடியில் கருகிப் போய்விட்டது என்ன செய்வது. அப்படி இல்லை என்றால் பொரியல் செய்யும்போது, குழம்பு செய்யும்போது, குழம்பு சூடு படுத்தும்போது, அடியில் பாத்திரம் கருகிவிட்டது என்ன செய்வது. அந்த கருகிய பாத்திரத்தில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு, கொஞ்சம் தண்ணீரை ஊற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து, அந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்துவிட்டு, அந்த பாத்திரம் சூடாக இருக்கும் போதே ஒரு ஸ்டீல் நாரை கொண்டு தேய்த்தால் பாத்திரம் உடனடியாக பளபளக்கும்.

- Advertisement -

Tip 4:
காலையில் அவசரமாக வேலை செய்யும்போது முட்டையை 15 நிமிடங்கள் வேக வைக்க சிரமமாக இருக்கிறதா. குக்கரில் முட்டையை போட்டு தண்ணீரை ஊற்றி இரண்டிலிருந்து மூன்று விசில் விட்டால் போதும். ஐந்தே நிமிடத்தில் முட்டை சூப்பராக வெந்து கிடைக்கும்.

Tip 5:
பெருசாக பச்சை நிறத்தில் இருக்கும் வெள்ளரிக்காயை தோல் சீவி தான் சமையலுக்கு பயன்படுத்துவோம் அல்லவா. அந்த தோலை வெயிலில் காய வைத்து விட்டு சமையலறை அலமாரியில் வையுங்கள். எறும்பு தொல்லை இருக்கவே இருக்காது.

- Advertisement -

Tip 6:
முந்திரி பருப்பு டப்பாவில் அடிக்கடி எறும்பு வருதா. அதில் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தால் எறும்பு வராது. பச்சை கற்பூரத்தை இனிப்பு பலகாரங்களிலும் சேர்ப்போம். அதனால் இதனுடைய வாசம் முந்திரிப் பருப்பை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் செய்யாது. (பச்சைக் கற்பூரத்தை தான் இனிப்பு பலகாரம் செய்ய பயன்படுத்துவார்கள். சாதாரண கற்பூரத்தை எடுத்து முந்திரிப் பருப்பில் போடாதீங்க.)

Tip 7:
பூசணிக்காய்க்கு உள்ளே இருக்கும் ஜவ்வை தூக்கி குப்பையில் தானே போடுவோம். அதை அப்படி பண்ணாதீங்க. அதை எடுத்து தோசை மாவு அரைக்கும் போது அதில் சேர்த்து அரைத்து பாருங்க. தோசை சாஃப்ட்டாக வரும். 4 டம்ளர் அரிசிக்கு 1 டம்ளர் உளுந்து போடும் இடத்தில், பூசணிக்காய் ஜவ்வு சேர்த்தால் 1 டம்ளர் உளுந்துக்கு பதிலாக 1/2 டம்ளர் உளுந்து சேர்த்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tip 8:
இட்லி பொடி அரைக்கும்போது அதில் வர மல்லி சிறிதளவு வறுத்து சேர்த்து அரைத்தால் இட்லி பொடி ரொம்ப ரொம்ப வாசமாக இருக்கும். ரொம்பவும் சேர்த்து விடக்கூடாது. சாம்பார் பொடி வாசம் வீசும். ஒரு டம்ளர் அளவு பருப்பு வகைகளை எடுத்தால், வெறும் 1 ஸ்பூன் அளவு வர மல்லியை சேர்த்தால் போதும்.

Tip 9:
சமையலறையில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் சீக்கிரம் உருளைக்கிழங்கில் முளை வரும். அது மட்டும் இல்லாமல் உருளைக்கிழங்குடன் ஒரு ஆப்பிள் பழத்தை வைத்தால் சீக்கிரம் முளை வராமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஒரு ரூபாய் ஷாம்பு இருந்தா பல வருடங்களாக பயன்படுத்தாமல் பாழடைந்த பூஜை பாத்திரங்களை கூட பத்து நிமிஷத்தில் பல பளப்பளவென்று ஜொலிக்க வைக்கலாம். இதுவரை யாரும் சொல்லாத ஒரு புது ஐடியா.

Tip 10:
பருப்பை குக்கரில் வேகவைக்கும் போது அதோடு ஒரு வரமிளகாய் காம்போடு போட்டு வேகவைத்து பாருங்களேன். பருப்பு சீக்கிரமாக வெந்து மசிந்து கிடைக்கும்.

- Advertisement -