10 நிமிடம் கூட ஆகாது பரோட்டா இருந்தால் கொத்து பரோட்டா ஈசியாக வீட்டிலேயே இப்படி தயார் செய்து பாருங்கள்!

- Advertisement -

கொத்து பரோட்டா என்றால் எல்லோருக்கும் ரொம்பவும் பிடித்தமான ஒரு டிஷ் ஆக இருக்கும் ஆனால் பரோட்டா செய்யும் கடைகளில் அதை பார்க்கும் பொழுதே நமக்கு சாப்பிட பிடிக்காமல் போய்விடும் எனவே வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் பரோட்டா தயாரித்து வைத்திருந்தால், இது போல கொத்து பரோட்டா ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கும் ரொம்பவே பிடித்து போய்விடும். முட்டை சேர்த்து செய்யப்படும் இந்த கொத்து பரோட்டா அதன் சுவையில் அனைவரையும் சுண்டி இழுக்கும். அத்தகைய அற்புதமான டேஸ்ட்டில் இருக்கக்கூடிய இந்த கொத்து பரோட்டா வீட்டில் எப்படி சுலபமாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்.

கொத்து பரோட்டா செய்ய தேவையான பொருட்கள்:
பரோட்டா – 6, பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – இரண்டு, முட்டை – நான்கு, கருவேப்பிலை – ஒரு கொத்து, மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூன், சால்னா – மூன்று டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி தழை – சிறிதளவு, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

கொத்து பரோட்டா செய்முறை விளக்கம்:
வீட்டில் பரோட்டா செய்பவர்கள் அதை கொத்து பரோட்டா போல சுவையான டேஸ்ட்டில் செய்வதற்கு முதலில் நீங்கள் செய்த பரோட்டாக்களில் ஆறு பரோட்டாக்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை கொத்து பரோட்டாவிற்கு தேவையான அளவிற்கு கைகளால் சிறு சிறு துண்டுகளாக பிச்சு போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வெங்காயம், தக்காளி போன்றவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தேவையான எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

பின் அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தோல் உரித்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கண்ணாடி பதம் வர நன்கு வெங்காயம் வதங்கி வரும் பொழுது, பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம், தக்காளி ஆகியவை மசிந்து வரும் பொழுது, நீங்கள் பிச்சி போட்டு வைத்துள்ள பரோட்டா துண்டுகளை சேர்த்து பிரட்டி விட வேண்டும். ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்த பின்பு, ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றுங்கள். முட்டை நன்கு பிரட்டி விட்ட பின்பு கொஞ்சம் உப்பு போட்டு கொள்ளுங்கள். பரோட்டாவில் உப்பு இருக்கும் எனவே குறைவாக சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம். பின்னர் அடிப்பிடிக்காமல் நன்கு கலந்து விடுங்கள். முட்டை வேக வேண்டும் அந்த அளவிற்கு கலந்து விட்ட பின்பு நீங்கள் பரோட்டாவுக்கு தயார் செய்த சால்னா அல்லது குருமா ஏதாவது ஒன்றை மூன்று கரண்டி அளவிற்கு சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள்.

பரோட்டாவிற்கு நீங்கள் எந்த சைட் டிஷும் செய்யவில்லை என்றால் பரவாயில்லை அதற்கு பதிலாக தண்ணீர் கொஞ்சம் தெளித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிளகுத்தூள், பொடி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விட்டு, அடுப்பை அணைத்து பொடிப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி ஒருமுறை கலந்து பின் பரிமாறிப் பாருங்கள். சூப்பரான ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த கொத்து பரோட்டாவிற்கு நீங்களும் அடிமையாகி விடுவீர்கள், நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -