குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸிற்க்கு கட்டிக்கொடுக்க, மிகவும் சுவையான முட்டை சாதத்தை ஒரு முறை இவ்வாறு செய்து பாருங்கள்

egg
- Advertisement -

இப்பொழுது பள்ளிகள் துவங்கப்பட்டு, குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனவே அவர்களுக்கு மதிய உணவை செய்து கொடுக்க வேண்டிய வேலை வீட்டில் உள்ள பெண்களுக்கு துவங்கிவிட்டது. இரண்டு வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் இல்லாததால், பெண்களுக்கு இந்த வேலை இல்லாமல் இருந்தது. இப்பொழுது காலையில் சீக்கிரம் எழுந்து லஞ்ச் பாக்ஸில் விரைவாக உணவு தயார் செய்ய வேண்டும். அப்படி குழந்தைகளுக்கு சமைக்கும் பொழுது காரம் குறைவான உணவுகளை தான் அதிகமாக செய்வதுண்டு. எனவே முடிந்தவரை காய்கறிகளை பொரியலாகச் செய்து அவற்றுடன் சாதத்தை சேர்த்து கிளறி கொடுத்தால், குழந்தைகள் மதியம் அவற்றை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். அவ்வாறு காலையில் நேரம் குறைவாக இருந்தால் சாதத்தை வடித்து விட்டு, இரண்டு முட்டை இருந்தால் போதும், அதனை உடனே பொறித்து அதனுடன் சாதத்தை சேர்த்து முட்டை சாதம் செய்திடலாம். வாருங்கள் இந்த சிம்பிளான முட்டை சாதத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு டம்ளர், முட்டை – 4, பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – ஒன்று, மிளகு தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு டம்ளர் அரிசியைக் கழுவி, அதில் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசியை சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட்டு, சாதம் நன்றாக வெந்ததும் அதனை வடித்துவிட வேண்டும்.

பிறகு ஒரு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் ஒரு குத்து கொத்தமல்லித் தழையையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, அதனுடன் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து கண்ணாடி பதத்தில் வதக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் இவற்றுடன் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து நன்றாக வேக வைக்கவேண்டும். வெங்காயத்துடன் முட்டையை ஊற்றியதும் நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் முட்டை வெந்து பொரியல் உதிரியாக வந்துவிடும். பிறகு இவற்றுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலந்து விட வேண்டும். இறுதியாக இவற்றுடன் கொத்தமல்லி தழை சேர்த்து, ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -