பூஜை பாத்திரங்களை 10 நிமிடத்தில் கை வலிக்காமல் பளபளக்க இத செஞ்சாலே போதுமா? இதை விட வேறென்ன வேண்டும்?

pooja-items-cleaning
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்கள் எப்பொழுதும் ரொம்பவும் பளிச்சுனு இருந்தா வாழ்க்கையும் பளிச்சுன்னு இருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்குள் நமக்கு இடுப்பு உடைந்து விடும். அந்த அளவிற்கு சிரமமாக இருக்கக் கூடிய கடினமான பூஜை பாத்திரங்களையும் ரொம்ப சுலபமாக கை வலிக்காமல் பத்து நிமிடத்தில் எப்படி பளபளக்க செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பூஜை பாத்திரங்கள் பெரும்பாலும் பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களாக இருக்கக்கூடும். இந்த பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களை வாரம் ஒரு முறை தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டே வந்தால், நமக்கு நேரம் மிச்சமாகும், வேலையும் சுலபமாக முடியும். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் நீங்கள் அப்படியே பூஜை அறையில் வைத்து விட்டால் அதை சுத்தம் செய்வது கடினம் ஆகிவிடும். மேலும் அதில் எண்ணெய் மற்றும் மஞ்சள் குங்குமம் போன்றவை அப்படியே இருந்தால் ஆங்காங்கே கருமை அல்லது பச்சை நிற திட்டுக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

- Advertisement -

இப்படி இருக்கும் பொழுது தேய்க்க ரொம்பவே கஷ்டமாக இருக்கும். ஆனால் கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல், கை வலிக்காமல் இந்த ஒரு பேஸ்ட்டை நீங்கள் தயார் செய்து வைத்துக் கொண்டால் சுலபமாக தேய்த்து விடலாம். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படும் இந்த எளிய பேஸ்ட் எப்படி செய்வது? அப்படின்னு இனி பார்ப்போம்.

முதலில் ஒரு எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த பிறகு பேஸ்ட் போல அதை கரைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து பேஸ்ட் போல தண்ணீரில் முழுமையாக கரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த புளி பேஸ்ட் சற்று கெட்டியாக இருக்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை கப் அளவிற்கு சபீனா பவுடர் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

புளி பேஸ்ட் உடன் சபீனா சேரும் பொழுது நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். பின் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு தூள் உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நீங்கள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் லிக்வீட் அல்லது சோப் ஏதாவது இருந்தால் அதை சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த பிராண்ட் ஆக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் இதை நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து அதில் இருக்கும் எண்ணெய் பசை மற்றும் மஞ்சள் குங்குமத்தை ஒரு நியூஸ் பேப்பரால் நன்கு துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த பேஸ்ட்டை முழுவதுமாக எல்லா இடங்களிலும் படும்படி தேய்த்து ஊற விட்டு விடுங்கள். ஒரு பத்து நிமிடம் ஊற வைத்தால் போதும், அதிக நேரம் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு கொஞ்சம் தேங்காய் நார் கொண்டு லேசாக தேய்த்தால் போதும், பளபளன்னு எல்லா பாத்திரமும் மின்ன ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு எபக்ட்டிவ்வான இந்த பேஸ்ட்டை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பூஜை பாத்திரங்களை கழுவி பாருங்க, இனி உங்கள் கையும் வலிக்கவே வலிக்காது. மேலும் பூஜை பாத்திரங்களை கழுவி முடித்தவுடன் கண்டிப்பாக கவிழ்த்து வைத்து விடக் கூடாது. உடனே சுத்தமான காட்டன் துணியால் துடைத்து வைத்து விட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -