இன்ஸ்டன்ட் புளியோதரை மிக்ஸ் இனி கடையில் வாங்க வேண்டிய அவசியமே இல்லை! இப்படி ஒருமுறை செஞ்சு வச்சுக்கிட்டா கோவில் புளியோதரை கூட தோற்று போய்விடும்.

instant-puliyodharai-mix1
- Advertisement -

அவசரமாக புளியோதரை செய்வது என்பது முடியாத காரியம். ஏற்கெனவே புளியை காய்ச்சி வைத்திருந்தால் தான் இன்ஸ்டன்ட் ஆக புளியோதரை செய்ய முடியும். அதற்கு பதிலாக கடையில் விற்கும் பொடியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதை நம் வீட்டிலேயே ரொம்பவே சுலபமாக இப்படி செஞ்சு வச்சுக்கிட்டா, எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகவே செய்யாது. தேவைப்படும் பொழுது சட்டென ஐந்தே நிமிடத்தில் கோவில் புளியோதரை சுவையை மிஞ்சும் அளவிற்கு செய்யக்கூடிய இந்த புளியோதரை இன்ஸ்டன்ட் மிக்ஸ் எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் காணவிருக்கிறோம்.

puli-tamarind

இன்ஸ்டன்ட் புளியோதரை மிக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
புளி – 50 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், உளுத்தம் பருப்பு – 50 கிராம், தனியா விதை – 2 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 11/2 டீஸ்பூன், கருவேப்பிலை – 3 கொத்து, எள் – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 20, நல்லெண்ணெய் – தேவையான அளவு, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காத்தூள் – 1 ஸ்பூன்.

- Advertisement -

இன்ஸ்டன்ட் புளியோதரை மிக்ஸ் செய்முறை விளக்கம்:
இன்ஸ்டன்ட் புளியோதரை மிக்ஸ் செய்வதற்கு முதலில் 50 கிராம் அளவிற்கு புளியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் விதைகள், நார்கள் எதுவுமே இல்லாமல் நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வெறும் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் கடலைப்பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வாசம் வர கருக விடாமல் வதக்கி எடுக்க வேண்டும். அதுப்போல உளுந்து பொன்னிறமாக கருகி விடாமல் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.

instant-puliyodharai-mix

பின்னர் தனியா விதைகளை சேர்த்து லேசாக வாசம் வர வறுத்து எடுங்கள். இந்த எல்லாப் பொருட்களையும் வறுக்கும் பொழுது அடுப்பை மீடியமாக வைத்து இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள தவறாதீர்கள். ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகு படபடவென பொரியும் வரை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சீரகம் சேர்த்து இதே போல லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வெந்தயம், எள் ஆகியவற்றை லேசாக வறுத்தால் போதும். இந்த எல்லாப் பொருட்களையும் தனி தனியாக தான் வறுக்க வேண்டும். பின்னர் 3 கொத்து கருவேப்பிலைகளை நன்கு பச்சையாக இருப்பதாக பார்த்து எடுத்து மொறுமொறுவென வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்களை காம்பு நீக்காமல் சேர்த்து லேசாக உப்பி வரும் அளவிற்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அப்படியே ஆற விட்டுவிடுங்கள். பின்னர் இறுதியாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு புளியை நன்கு மொறுமொறுவென வறுத்து எடுக்க வேண்டும். புளியின் ஈரத்தன்மை முழுவதுமாக நீங்கி இருக்க வேண்டும். அப்போது தான் மிக்ஸியில் அது நன்றாக பொடியாக அரைக்க வரும். கடைகளில் விற்கும் இன்ஸ்டன்ட் மிக்ஸ் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது. பின்னர் மிக்ஸி ஜாரில் முதலில் காய்ந்த மிளகாய் மற்றும் புளியை மட்டும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

Puliyotharai

பின்னர் எல்லா பொருட்களையும் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காய தூள் சேர்த்து ஒரு முறை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த புளியோதரை மிக்ஸ் பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை. இன்ஸ்டன்ட் ஆக புளியோதரை மிக்ஸ் செய்ய ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தலா அரை ஸ்பூன் சேர்த்து தாளியுங்கள். ஒரு வர மிளகாயை கிள்ளி சேருங்கள், கொஞ்சம் கருவேப்பிலை போட்டு, இந்த புளியோதரை மிக்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கலந்து ஒரு கப் உதிரியான சாதத்துடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விட்டால் போதும், சுவையான கோவில் புளியோதரை தயார். இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -