தேவையில்லை என்று தூக்கி எறியும் இந்த ஒரு பொருளை வைத்து வெள்ளை முடியை கருமையாக்கும் இன்ஸ்டன்ட் ஹேர் டையை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்

hairdai
- Advertisement -

இப்பொழுதெல்லாம் சிறிய வயதிலேயே முடி நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. வேலை பளு, சுற்றுப்புற சூழல், வேதியல் பொருட்கள் நிறைந்த ஷாம்பூ போன்றவற்றினால் முடி விரைவாக வெள்ளை நிறமாக மாற ஆரம்பிக்கிறது. எனவே தங்களை இளமையாக காண்பித்துக் கொள்ளவும், வெள்ளை நிற முடியை கருமை நிறமாக மாற்றவும் வேதியல் பொருட்கள் நிறைந்த ஹேர் டையை பலரும் உபயோகித்து வருகிறார்கள். ஆனால் திடீரென ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்தால் இந்த டையை உடனடியாக உபயோகிக்க முடியாது. அவற்றை முடியில் தடவி காயவைத்து அதற்குப் பின்னர் குளித்து கிளம்புவதென்பது மிகுந்த நேரத்தை செலவழிப்பதாக இருக்கும். எனவே இந்த இன்ஸ்டன்ட் ஹேர்டடை பவுடரை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுதெல்லாம் உடனடியாக உபயோகித்துக் கொள்ளலாம். வாருங்கள் இதனை எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

white hair

முடி கருமை நிறமாக மாறுவதற்கு பல ஆயுர்வேத பொருட்களை சேர்த்து எண்ணெய் தயார் செய்து தடவி வருகிறோம். அவுரி இலை, மருதாணி இலை சேர்த்து ஒரு பேஸ்ட் தயாரித்து அதனை உபயோகித்தும் வெள்ளை முடியை கருமையாக மாற்ற முடியும். ஆனால் இதற்காக நேரம் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும். இவற்றை செய்வதற்கும் பலவித முறைகள் இருக்கின்றன. ஆனால் அன்றாடம் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பூண்டின் தோலை வைத்து செய்யக்கூடிய இந்த ஹேர்டை பவுடரை மிகவும் சுலபமாக செய்திடலாம். இதனை பயன்படுத்து முறையும் மிகவும் சுலபமாக தான் இருக்கும்.

- Advertisement -

அதற்காக முதலில் இரண்டு கைப்பிடி அளவு பூண்டு தோலை எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு இரும்பு கடாய் வைத்து, கடாய் நன்றாக சூடானதும் பூண்டு தோலை அதில் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அடுப்பைஅததிக தீயில் வைத்து பூண்டு தோலை வதக்கிகொண்டே இருக்க வேண்டும்.

poondu2

பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் பூண்டு தோல் முழுவதுமாக கருகிவிடும். கொஞ்சம் கூட வெள்ளை நிறம் இல்லாமல் பூண்டு தோல் முழுவதும் கருமை நிறமாக மாறி இருக்க வேண்டும். சரியாக சொல்லப்போனால் கருப்பு நிற துகள்களாக மாறி இருக்க வேண்டும். பின்னர் இவற்றை சிறிது நேரம் அப்படியே ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இந்த பவுடரை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

பயன்படுத்தும் முறை:
இந்த ஹேர்டை பவுடரிலிருந்து இரண்டு ஸ்பூன் பவுடரை ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் நாம் வீட்டில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒரு பிரஷ்ஷை பயன்படுத்தி வெள்ளை நிற முடிகளின் மீது வேர் கால்களில் படுமாறு தடவி விட வேண்டும்.

பின்னர் முடி முழுவதும் கருமை நிறமாக மாறிவிடும். அவ்வளவு தான் தலையை வாரி சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவசரத்திற்கு உடனடியாக இந்த ஹேர்டை பவுடரை பயன்படுத்தி வெள்ளை நிற முடிகளை கருமை நிறமாக மாற்ற முடியும்.

- Advertisement -