வீட்டில் சாரை சாரையாய் எறும்புகள் படையெடுக்க இப்படி ஒரு காரணமா? இந்த ஸ்பிரே நமக்கு மட்டுமல்ல எறும்புக்கு கூட உபயோகிக்கலாமா? ஆச்சரியமா இருக்கே!

erumbu-ant-spray
- Advertisement -

நம்முடைய வீட்டில் எறும்புத் தொல்லை என்பதே இல்லாமல் இருக்கும். திடீரென பார்த்தால் எங்கிருந்து வருகிறது என்றே தெரியாது. சாரை சாரையாய் எறும்புகள் படை எடுக்கத் துவங்கும். நாமும் என்னவெல்லாமோ செய்து பார்ப்போம்! ஆனாலும் பலன் ஒன்றும் இருக்காது. எறும்பை கொல்ல நவீன வகை சாக்பீஸ்கள் கொண்டு ஆங்காங்கே கோடுகள் கிழித்து வைத்தாலும் அந்தக் கோட்டின் மேலும் எறும்புகள் ஊர்ந்து செல்வதைப் பார்க்கும் பொழுது வயிறு பற்றி எரிய தான் செய்யும். இதற்கு வீட்டில் இருக்கும் இந்த ஒரு பொருள் உபயோகித்தாலே ஒரு எறும்பு கூட வராது! ஆனால் அந்த பொருளை கேட்டால் நீங்களே ஷாக் ஆகி விடுவீர்கள்! அப்படி என்ன தான் அது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ant-erumbu

வீட்டில் திடீரென முளைக்கும் எறும்புகளுக்கு பொது பலன் ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா? திடீரென காக்கை வீட்டின் ஜன்னல்களில் உட்கார்ந்து தொடர்ந்து கரைந்து கொண்டே இருப்பதும், வாசல் கதவில் உட்கார்ந்து கரைவதும் உறவினர்கள் வருகையை தெரிவிப்பதாக சகுன சாஸ்திரம் எடுத்துக் கூறுகிறது. அல்லது நம் முன்னோர்கள் பசியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காக்கை கரையும் பொழுது சிறிதளவு சாப்பாட்டை வைத்து விட்டால் போதும்! தினமும் வந்து உட்கார ஆரம்பித்துவிடும்.

- Advertisement -

தினமும் இல்லாமல் திடீரென இதுபோன்ற ஒரு விஷயங்கள் நடக்கும் பொழுது நம்முடைய மனதிற்குள் விசித்திரமான ஒரு உணர்வு தோன்ற ஆரம்பிக்கும். எதற்காக இப்படி எல்லாம் நடக்கிறது? என்று யோசிக்க தொடங்குவோம். அந்த வகையில் எறும்புகள் திடீரென வீட்டில் சாரை சாரையாய் படையெடுக்கும் பொழுது, உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகுமாம். நன்றாக இருந்தவர்கள் கூட சண்டை போட்டு பிரிந்து விடுவார்களாம். இது அந்த வீட்டில் இருக்கும் உறவுகளுக்குள் நடப்பது அல்ல! ரத்த சம்பந்தப்பட்ட எந்த உறவாக இருந்தாலும், இந்த பிரச்சனைகள் எப்படியாவது வந்து விடுமாம். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை!

ant2

அறிவியல் ரீதியாக ஒரு வீட்டில் எறும்புகள் படை எடுப்பதற்கு அந்த வீட்டின் குளிர்ச்சி தன்மை காரணமாக இருக்கிறது. வீட்டின் தரை பகுதி உலர்வாக இருந்தால் எறும்புகள் வராது. அது போல் தரையில் டைல்ஸ் போட்டு இருந்தால் அதில் இருக்கும் ஏதாவது ஒரு சின்ன ஓட்டை கூட எறும்புகளை வரவழைக்கும். ஆகவே எங்கிருந்து வருகிறது? என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். அந்த ஓட்டையை சிமெண்ட் போட்டு அடைத்து விட்டால் போதும்! எறும்புகள் வரவே செய்யாது.

- Advertisement -

இந்த எறும்புகள் கூட பரவாயில்லை. சமையல் கட்டில் ஒரு பொருள் கூட வைக்க விடாமல் நம்மை பாடாய் படுத்தி எடுக்கும் எறும்புகளை எப்படி ஒழித்துக் கட்டுவது தெரியுமா? நாம் குளித்து முடித்து விட்டு வாசனைக்காக பயன்படுத்தும் பாடி ஸ்பிரே எறும்பை கொல்லவும் பயன்படும் தெரியுமா? ஆச்சரியமா இருக்குல்ல! எறும்பை கொல்ல பயன்படுத்தும் ரசாயன ஸ்ப்ரே வகைகள் ஒருவிதமான மூச்சுத் திணறலை உண்டாக்கி விடுகிறது. ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கும். குறிப்பாக குழந்தைகள் இடத்திலிருந்து இவற்றை பாதுகாப்பாக வைப்பது என்பதும் கடினமான காரியமாக இருக்கும்.

body-spray

ஆனால் நம் உடலுக்கு பயன்படுத்தும் பாடி ஸ்பிரே சமையல் கட்டில் ஒரு எறும்பு கூட வர விடாமல் செய்து விடும். நீங்கள் எறும்பு சாக்பீஸ் போட்டு வைத்தால்! ஒரு மாதம் வரை தான் அதனுடைய சக்தி இருக்கும். அதன் பிறகு மீண்டும் எறும்புகள் படை எடுக்கத் துவங்கும். ஆனால் பாடி ஸ்பிரே உபயோகிக்கும் பொழுது அதிகபட்சம் மூன்று மாதம் வரை சமையல் கட்டு பக்கமே எறும்புகள் எட்டிப் பார்க்காது. சமையல் கட்டு, படுக்கையறை அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கும் பொருட்களை எடுத்து விட்டு பாடி ஸ்ப்ரே அடித்து விட்டு மீண்டும் அடுக்கி வையுங்கள்! அவ்வளவு தான். அந்த வாசனைக்கு ஒரு எறும்பு எட்டிக் கூட பார்க்காது. கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் இது அனுபவத்தில் கண்ட உண்மையாகும். ஒரு முறை முயன்று பார்த்து பயன் பெறுங்கள்.

- Advertisement -