3 பொருட்களை வைத்து தக்காளி சாதம் இப்படி ஒருமுறை சுவையாக செஞ்சு பாருங்க 10 நிமிஷத்தில் லஞ்ச் பேக் ரெடி!

tomato-rice-recipe
- Advertisement -

ஒரு சில பொருட்களை வைத்தே ரொம்பவே சுவையான சாதத்தை தயாரிக்க முடியும். நிறையப் பொருட்களை பயன்படுத்தி தான் சுவையான உணவை தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக குறைந்த பொருட்களை வைத்து ரொம்பவே சுலபமான முறையில் தக்காளி சாதம் செய்ய பத்து நிமிடம் கூட ஆகாது. ஈஸியான டேஸ்டியான தக்காளி சாதம் எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பழுத்த பெரிய தக்காளி பழங்கள் – 5, பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 4, கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, உப்பு – தேவையான அளவு, அரிசி – 1 ஆழாக்கு.

- Advertisement -

தக்காளி சாதம் செய்முறை விளக்கம்:
1 ஆழாக்கு அரிசியை உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தக்காளி சாதத்திற்கு கால் கிலோ அரிசி சரியாக இருக்கும். உதிரி உதிரியாக சாதம் வடித்த பின்பு நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தேவையான எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி போன்றவற்றை நன்கு சுத்தம் செய்து தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும், வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கடுகு, கறிவேப்பிலை இல்லாமல் கூட இந்த தக்காளி சாதத்தை தயாரிக்கலாம். முதலில் ஒரு வாயகன்ற வானலியி ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் 4 டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

- Advertisement -

கடுகு பொரிந்து வந்ததும் கருவேப்பிலை ஒரு இணுக்கு உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காய துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடி பிடிக்காமல், கருகி விடாமல் லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்தால் வெங்காயம் சீக்கிரம் வதங்கும். பிறகு பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி மற்றும் வெங்காயம் குழைய, மசிய வதங்கும் வரை வதக்கி விடுங்கள்.

5 நிமிடம் மூடி வைத்தால் தக்காளி சீக்கிரம் வேகும். வேறு எந்த மசாலா பொருட்களையும் இதனுடன் சேர்க்கக்கூடாது. தக்காளி, வெங்காயம் மற்றும் காரத்திற்கு பச்சைமிளகாய் அவ்வளவுதான்! தொக்கு போல நன்கு எண்ணெயிலேயே வதக்கி விட்டால் எண்ணெய் பிரிந்து மேலே தெளிந்து வரும். பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். ஆறிய சாதத்துடன் இவற்றை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பை சரி பார்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் சாப்பிட்டுப் பாருங்கள், அவ்வளவு டேஸ்ட்டான தக்காளி சாதமாக இது நிச்சயம் இருக்கும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர்களுக்கு டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுத்து அனுப்ப சூப்பரான ரெசிபியாக இருக்கும், நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -