உங்கள் டாய்லெட் மஞ்சள் கறை படிந்து பார்ப்பதற்கே படு மோசமாக இருக்குமா? எவ்வளவு கறை படிந்த டாய்லெட்டையும் சுலபமாக சுத்தம் செய்ய இந்த 1 சோப் போதும்.

toilet
- Advertisement -

நிறையபேர் வீட்ல டாய்லெட் சுத்தமாக தான் இருக்கும். அடிக்கடி தேய்த்து கழுவி கொண்டு இருப்பார்கள். ஆனால், அதில் படிந்திருக்கும் கறைகளை சுத்தமாக நீக்க முடியாது. நீண்ட நாட்களாக படிந்த மஞ்சள் கறை உப்பு கறையை சுலபமாக நீக்குவதற்கு ஒரு ஐடியாவை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே குறைந்த செலவில் டாய்லெட்டை பளிச் பளிச்சென மாற்றுவது எப்படி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பாத்திரம் தேய்க்க கூடிய விம் சோப் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். 5 ரூபாய் வின்சோப் ஒன்று இருந்தால் போதும். அந்த விம் சோப்பை துருவிக் கொள்ளவேண்டும். பீட்ரூட் கேரட் துருவலில் இந்த சோப்பைப் துருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முழு சோப்பையும் துருவி எடுத்துக் கொண்டால் நமக்கு சரியாக இருக்கும்.

- Advertisement -

ஒரு பிளாஸ்டிக் ஜக்கில் துருவிய விம் சோப், வினிகர் – 1/4 கப், சுடு தண்ணீர் – 1/4 கப், பேக்கிங் சோடா – 1 டேபிள்ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக போட்டு, சோப்பை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். சோப்பில் கட்டிகள் இருக்கக்கூடாது. பழைய பிளாஸ்டிக் ஸ்பூன் ஏதாவது இருந்தால் அதை பயன்படுத்தி எல்லா பொருட்களையும் நன்றாக கரைத்து விடுங்கள். இந்த கலவை நமக்கு பார்ப்பதற்கு ஹார்பிக் போல கெட்டி கலவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் டாய்லெட்டில் ஊற்றும்போது அப்படியே நிற்கும்.

நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த கலவையை டாய்லெட்டில் அப்படியே பரவும்படி ஊற்றி விடவேண்டும். டாய்லெட் கிளீன் செய்யும் பிரஷ்ஷால் லேசாக இந்த லிக்விட்டை எல்லா இடங்களிலும் பரவும் படி தேய்த்து அப்படியே 1 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

ஒரு மணிநேரம் ஊறிய பின்பு உப்பு காகிதத்தை வைத்து கறை படிந்த இடத்தை லேசாக தேய்த்து கொடுத்தாலே கறை நீங்கிவிடும். கையில் ஒரு கிளவுஸ் கட்டாயம் நமக்கு தேவை. உங்கள் கையை கொண்டு தேய்த்து தான் நீண்டநாள் படிந்த மஞ்சள் கறை, உப்பு கறையை நீக்க முடியும். உங்கள் வீட்டில் ஓரளவுக்கு குறைந்த அளவில் கறை இருந்தால் டாய்லெட் கிளீன் செய்யும் பிரஷ் வைத்தே தேய்த்து பாருங்கள். அதில் கறைகள் நீங்கி விட்டால் கையை கொண்டு தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது.

உங்கள் டாய்லெட்டை நன்றாக உலர வைத்து விட்டு, அதன் பின்பு நீங்கள் தயார் செய்த இந்த ஹோம் மேட் லிக்விடை, டாய்லெட்டில் ஊற்றி ஊற வைப்பதால் இன்னும் பளிச் பளிச்சென்று டாய்லெட் மாறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. அழுக்கு படிந்த உங்கள் வீட்டு டாய்லெட்டை ஒருமுறை இந்த டிப்ஸை ட்ரை பண்ணி சுத்தம் செய்து தான் பாருங்களேன். என்ன ரிசல்ட் வருகிறது என்று உங்களுக்கே தெரியும்.

- Advertisement -