வெறும் தக்காளியை வைத்து பிரியாணி சுவையில் தக்காளி சாதத்தை 10 நிமிடத்தில் எப்படி செய்வது?

thakkali-satham-tomato

தக்காளி சாதம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் ஒரு டிஷ் ஆகும். அதிலும் குக்கரில் தக்காளி சாதம் செய்து கொடுத்தால் எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தேவையான அதிக பொருட்கள் இல்லாத பட்சத்தில் பிரியாணி சுவையில் மிகவும் எளிமையாக எப்படி வெறும் தக்காளியை வைத்து தக்காளி சாதம் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Thakkali sadam

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி – 4
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா – கால் டீஸ்பூன்
பட்டை, கிராம்பு – தலா 1
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
அரிசி – 2 கப்

Thakkali sadam

சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
புதினா தழை – ஒரு கைப்பிடி
மல்லித் தழை – ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்

- Advertisement -

எளிதான தக்காளி சாதம் செய்வது எப்படி?
முதலில் 2 கப் அளவிற்கு சாப்பாட்டு அரிசியை நன்கு சுத்தம் செய்து அலசி ஊற வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது அரை மணி நேரமாவது அரிசியை ஊற வேண்டும். பின்னர் தக்காளி பழங்களை சுத்தம் செய்து நீள நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பச்சை மிளகாய்களை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். புதினா, கொத்தமல்லி தழைகளை நன்கு தண்ணீரில் அலசி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைத்துக் கொள்ளுங்கள்.

Thakkali sadam

குக்கரில் தேவையான அளவிற்கு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பச்சை மிளகாய்களை அப்படியே முழுதாக சேர்த்துக் கொள்ளுங்கள். இவைகள் லேசாக வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு மசாலா வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

thakkali-satham

பின்னர் நறுக்கி வைத்துள்ள புதினா தழை மற்றும் மல்லித்தழை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள். 2 கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்தால் அது சரியாக இருக்கும். தேவையான அளவிற்கு உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். அதன் பிறகு மூடியை எடுத்து மூடி சிறிது நேரம் கழித்து இரண்டு விசில் வரும் வரை விட்டு விடுங்கள். இரண்டே விசிலில் சுவையான அற்புதமான தக்காளி சாதம் எளிதாக தயாராகி விட்டிருக்கும்.

thakkali-satham1

அதிகமான எந்த பொருட்களும் இல்லாமல் பிரியாணி சுவையில் அசத்தலான தக்காளி சாதம் 10 நிமிடத்தில் செய்து விடலாம். இதில் வெங்காயம் சேர்க்க நினைப்பவர்கள் ஒரு வெங்காயம் மற்றும் நறுக்கி சேர்த்தும் செய்யலாம் கூடுதல் சுவையாக இருக்கும். வெங்காய பச்சடி அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்து சாப்பிட்டால் அலாதியான சுவையில் தக்காளி சாதம் அன்றைய நாளை இனிமையாக்கும்.