கை, கால், முகம் போன்ற இடங்களில் தேவையற்ற முடி வளர்ச்சி இருக்கிறதா? அவற்றை எளிமையாக அகற்றவும், மீண்டும் வராமல் தடுக்கவும் இந்த எளிய வழிமுறையை பின்பற்றினால் போதும்

wax
- Advertisement -

சிறு பிள்ளைகள், பெரியவர்கள் போன்று தோற்றம் அளிப்பதும், பத்து வயதிற்கு மேல் ஆனவுடன் பெண் குழந்தைகள் பெரியவர்களாவதுமென, இவ்வாறு வளர்ச்சி மாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவின் மூலம் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சனை என்று பல வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வாறு ஹார்மோன் பிரச்சனை காரணமாக முகத்தில் தேவையில்லாத முடி வளர்ச்சி ஏற்படுகிறது. அதேபோல் கை, கால் பகுதிகளிலும் அதிகப்படியான முடி வளர ஆரம்பிக்கிறது. இவை பெண்களுக்கு ஒரு மன உளைச்சலாக மாறிவிடுகிறது. இவற்றை என்ன தான் அடிக்கடி வெட்டி விட்டாலும், ஷேவிங் செய்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே இவற்றை எளிமையாக அகற்றுவதற்கு வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும். வாருங்கள் எவ்வாறு உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

செய்முறை:
முதலில் இரண்டு விரல் நீள அளவு இஞ்சியை எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை சுத்தமாக கழுவிக் கொண்டு அதன் மேற்புறத்தில் இருக்கும் தோலை அகற்றி கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு காய்கறிகளை பயன்படுத்தி அதை வைத்து பொடியாக துருவிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் துருவிய இஞ்சி விழுதை ஒரு வடிகட்டியில் வைத்து அழுத்தும் பொழுது அதிலிருந்து சாறு வர ஆரம்பிக்கும். இந்த இஞ்சி சாரை தனியாக வைத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இதனுடன் ஒரு டீஸ்பூன் தூள் உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை ஒரு காட்டன் துணியில் நனைத்து, கொஞ்சம் கொஞ்சமாக முடி உள்ள இடங்களில் தேய்த்து விட வேண்டும். பத்து நிமிடத்திற்கு கடிகார சுழற்சி முறையில் தொடர்ந்து தேய்த்து விடவேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு 15 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். முதல் முறை செய்யும் பொழுது சில முடிகள் மட்டுமே உதிர ஆரம்பிக்கும். ஆனால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்துவர அனைத்து முடியுமே முழுவதுமாக அகன்று விடும்.

இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து பின்பற்றி வர உதிர்ந்த முடிகள் சிறிது நாட்களுக்குப் பிறகு நிரந்தரமாக வளராமல் மறைந்து விடும். அதன் பின்னர் இந்த முடி வளர்ச்சி பற்றிய கவலையே உங்களுக்கு இருக்காது.

- Advertisement -