வாடகை வீட்டிலேயே நிம்மதியாக தான் இருந்தேன்! சொந்த வீடு கட்டி இப்படி ஆயிடுச்சே! என்று புலம்புபவர்களா நீங்கள்? இந்த எளிய பரிகாரத்தை செய்து உங்கள் பிரச்சனையை தீர்க்கலாமே!

vastu-soil

பல பேருடைய கனவு தனக்கென ஒரு வீடு சொந்தமாக இருக்க வேண்டும் என்பது ஆகும். பலருக்கும் பல நாள் கனவாகவே அது இருந்து விடுகிறது. ஆனால் ஒரு சிலருக்கோ சொந்த வீடு கட்டிக் கொண்டு போகும் பாக்கியம் அமைந்திருக்கும். எவ்வளவோ தடைகளையும், இடையூறுகளையும் தாண்டி சொந்த வீட்டில் வசிக்கும் பொழுது அங்கு இருக்கும் வாஸ்து குறைகள் தொடர் பிரச்சனைகளை கொடுத்து வந்தால் என்ன ஆகும்? இதற்கான எளிய தீர்வு தரும் பரிகாரம் இது! அதனை தெரிந்து கொள்ள இந்த பதிவை மேலும் தொடருங்கள்.

home

சொந்த வீட்டில் வசிக்கும் பலருக்கு நிம்மதி இருந்தாலும் ஒரு சிலருக்கு, ‘நான் வாடகை வீட்டில் இருக்கும் பொழுதே நிம்மதியாக தான் இருந்தேன், எப்போது சொந்தமாக வீடுகட்டி வந்தேனோ! அப்போது இருந்து எனக்கு பிரச்சனை ஆரம்பம் ஆகிவிட்டது’ என்று புலம்ப கேட்டிருப்போம். ‘வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார்’ என்று முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. அதில் இருக்கும் பாரத்தை சுமக்க மனதில் தெம்பு, தைரியம் இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் சமாளித்து சொந்தமாக வீட்டை கட்டிக் கொண்டு வந்தால் அந்த வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றால் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவோம். சிறுசிறு வாஸ்து குறைபாடுகள் இருந்தால் கூட புதிய வீட்டில் நமக்கு நிம்மதி தடைபடும். இப்படி சிறு சிறு வாஸ்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக்கூடிய எளிய பரிகாரம் இந்த பரிகாரம். ஒரு நாள் இதை செய்து பார்த்தால் உங்கள் பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்.

vasthu-vastu

பெரிய பெரிய வாஸ்து தோஷ நிவர்த்திக்கு வீட்டை சுற்றிலும் பசுமையான மரங்களை வளர்த்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. சிறு சிறு பிரச்சனைகளுக்கு நீங்கள் வசிக்கும் வீட்டிலிருந்து ஒரு கைப்பிடி அளவிற்கு மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் மண் ஆனது ஈசானிய மூலையாக இருக்கும் வடகிழக்கு மூலையில் இருந்து எடுத்து இருப்பது உத்தமம்.

- Advertisement -

அங்கிருந்து எடுக்கப்பட்ட இந்த மணலை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு சிறிய கண்ணாடி பாத்திரத்தில் பாதி அளவிற்கு கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். அதனுடன் நீங்கள் எடுத்து வந்த மண்ணை கலந்து ஒருநாள் முழுவதும் பூஜை அறையில் வைக்க வேண்டும். வாஸ்து செய்ய நல்ல நாள் என்று காலண்டரில் குறிப்பிட்டிருக்கும் விஷயத்தை என்றாவது நம் கண்களில் பட்டு இருக்கும் அல்லவா? இத்தகைய பரிகாரங்கள் செய்யவும், அந்த வாஸ்து நாட்கள் நல்ல நாட்களாக அமையும். எனவே அத்தகைய நாட்களில் இந்த பரிகாரத்தை செய்ய தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

salt

அன்று அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து நீராடி முடித்து விட்டு பூஜை அறையில் இந்த கல் உப்பும், மண்ணும் சேர்ந்த கண்ணாடி பாத்திரத்தை வைக்க வேண்டும். மாலை 6 மணி வரை அதை அப்படியே பூஜையில் வைத்து வாஸ்து பகவானையும், இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் வேண்டி வணங்கிக் கொள்ள வேண்டும். வாஸ்து குறைபாடுகள் நீங்கவும், உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் ஒழியவும், புது வீட்டில் நல்லபடியாக வாழ்க்கை அமையவும் மனதார பிரார்த்திக்க வேண்டும். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் அந்த பௌலில் இருந்து ஒரு கைப்பிடி அளவிற்கு உப்பையும், மண்ணையும் கலந்து கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

store-room-vastu

உங்கள் வீட்டை சுற்றி ஐந்து முறை வலம் வாருங்கள். பின்னர் அதனை ஒரு பக்கெட் தண்ணீரில் கரைத்து விடுங்கள். பூஜை அறையில் மீதமிருக்கும் உப்பையும் தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இவ்வாறு ஒரு முறை செய்து பார்த்தால் போதும் உங்கள் சிறு சிறு வாஸ்து தோஷ பிரச்சினைகள் நிவர்த்தி அடைந்து, குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளும் படிப்படியாக நீங்கும். எதற்கும் உங்களுடைய ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் ஒருமுறை காண்பித்து மனத் தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.