இந்த ராகு கால பூஜையை முறையாக செய்தால் உங்களுக்கு பிரச்சனை கொடுக்கும் எதிரிகளின் தொல்லை நீங்கி நல்ல பலன் உண்டாகும்

rahu
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நல்லவராக இருந்தாலும், கெட்டவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரிகள் என்று சிலர் இருக்கத்தான் செய்வார்கள். இவ்வாறான எதிரிகளின் தொல்லையால் குடும்பத்தில் பல பிரச்சனைகளும், வியாபாரத்தில் சிக்கல்களும் வந்துகொண்டிருக்கும். எப்பொழுதும் நமக்கு தொல்லை கொடுத்து கொண்டு தான் இருப்பார்கள். நமது குடும்பத்தை பழி வாங்குவதற்காகவே பல தீய காரியங்களை செய்திடுவார்கள். இவ்வாறு ஒருவருக்கு பிரச்சனை கொடுக்கும் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட ராகு கால நேரத்தில் சிறப்பு வழிபாடு செய்வதன் மூலம் நல்ல பலனை பெற முடியும். வாருங்கள் ராகுகால பூஜையை எவ்வாறு முறையாக செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

enemy1

ராகு என்றால் நாகத்தின் தலைப் பகுதியைக் குறிக்கும். கேது என்றால் வால் பகுதியை குறிக்கும். இவ்வாறு சிறப்புமிக்க ராகுகால பூஜை செய்வதால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான சூழ்நிலையை பெற முடியும். செவ்வாய்க்கிழமை தோறும் மூன்று மணியிலிருந்து நான்கரை மணிக்குள் வரும் ராகு கால நேரத்தில் அம்மனுக்கு இந்த சிறப்பு வழிபாடு செய்திட வேண்டும்.

- Advertisement -

காலை எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் அம்மன் படங்களுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, வாசனை மலர்கள் கொண்டு அலங்காரம் செய்திட வேண்டும். அதன் பின் வேப்பிலை மாலை அணிவித்து, பிறகு தாம்பூலத் தட்டு முழுவதும் வேப்பிலையால் நிரப்பி வைத்து, அதன் மீது ஆறு மண் விளக்குகளை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற தயாராக வைக்க வேண்டும்.

poojai

பிறகு மூன்று சிறிய மண் பானைகளை எடுத்துக்கொண்டு அதில் ஒன்றில் தண்ணீரும், மற்றொன்றில் சிறிதளவு பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி போன்றவற்றை சேர்த்தும், மீதமிருக்கும் பானையில் மோர் கலந்து வைத்தும் நெய்வேதியமாக அம்மன் அருகில் வைத்து விடவேண்டும். பிறகு எப்பொழுதும் போல பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி, அதன் பின் வேப்பிலையின் மீது வைத்திருக்கும் 6 அகல் விளக்குகளையும் ஏற்றி விட வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு பூஜை அறையின் முன் அமர்ந்து, ஒரு கண்ணாடி குடுவையில் சிறிதளவு தண்ணீர்,சிறிதளவு பன்னீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நிரப்பிக் கொண்டு, அதனுள் எலுமிச்சை பழத்தை நான்காக அரிந்து சேர்க்க வேண்டும். பிறகு அதனுள் ஒரு ரூபாய் நாணயத்தை சேர்த்து அதன் மீது மல்லிகை பூவை சிறிதளவு வைத்துவிட வேண்டும்.

lemon-glass

அதன் பின் வலது கையை தண்ணீர்க் குடுவையின்மீது மூடியவாறு வைத்து, கண்களை மூடி எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் எதிரிகள் எனது வழியிலிருந்து விலகி எனது குடும்பமும் எனது தொழிலும் சிறப்பாக அமைந்து எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்து மன அமைதி கிடைக்க வேண்டும். ஓம் சக்தி வசி நசி மசி, ஓம்சக்தி வசி வசி வசி, ஓம் சக்தி மசி மசி மசி இவ்வாறு மூன்று முறை சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். வாரந்தோறும் இந்த ராகு கால பூஜையை முறையாக செய்து வாருங்கள், உங்களுக்கு பிரச்சனையாக இருக்கும் உங்கள் எதிரிகள் உங்களை விட்டு விலகி ஓடிவிடுவார்கள்.

- Advertisement -