எதிரிகளின் வாயை ஒரு நொடிப்பொழுதில் அடக்கிவிடலாம். ஒரு கைப்பிடி கடுகு இருந்தால் போதும்.

enemy
- Advertisement -

மனிதர்களாக பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுபாவம் இருக்கும். அந்த வரிசையில், சில பேர் தங்களுக்கு எதிரிகளாகவே இருந்தாலும் அந்த நபரை இழிவாக நடத்த மாட்டார்கள். ஆனால், சில பேர் தங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் போதும். அந்த நபரை திட்டி தீர்த்து, சண்டைக்கு இழுத்து, தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி, அவமான படுத்தி விடுவார்கள். அமைதியாக எதிராளிகளை எதிர்கொண்டு சத்தமே இல்லாமல் மறைமுகமாக தாக்குபவர்கள் ஒரு ரகம் என்றால், சத்தம் போட்டு சண்டை போட்டு பிரச்சனை செய்யக் கூடிய மனிதர்கள் ஒரு ரகம்.

Kadugu

இதில், எப்போது பார்த்தாலும் நம்மிடம் சண்டைக்கு வரக்கூடிய, நம்மைப் பற்றி இழிவாக பேசக் கொண்டே இருக்கக்கூடிய, எதிரியின் வாயை ஒரு நொடிப்பொழுதில் எப்படி அடக்குவது, என்பது பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரே ஒரு கைப்பிடி கடுகு போதும். வாய்பேசும் எதிரியின் பேச்சுக்களை அடக்குவதற்கு.

- Advertisement -

சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் கடுகை புதியதாக கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த கடுகை கருப்பு நிற துணியில் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய மண் அகல் விளக்கில், கட்டி கற்பூரத்தை ஏற்றி, கருப்பு நிறத் துணியில் முடிந்து வைத்திருக்கும் இந்த முடிச்சை, அந்த நெருப்பில் போட்டு எரித்து விடவேண்டும். வீட்டிற்குள் இந்த பரிகாரத்தை செய்ய கூடாது. வீட்டிற்கு வெளியில் தான் செய்ய வேண்டும்.

neruppu

யார் உங்களை இழிவாக நடத்துகிறார்களோ, யார் உங்களை இழிவாகப் பேசக்கூடியவர்களோ அவர்களின் பெயரை உச்சரித்து, அந்த நபர் இனி உங்கள் பேச்சுக்கு வரக்கூடாது, உங்களிடம் சண்டை போடக்கூடாது, என்று சொல்லி முடிச்சை அந்த நெருப்பில் போட்டு விட வேண்டும். கடுகு படபடவென நெருப்பில் பொரிய தொடங்கும். அந்த நிமிடமே அந்த எதிராளி உங்களை பற்றி இழிவாக பேசுவதை நிறுத்தி விடுவார்கள்.

- Advertisement -

நிறைய பேர் வீடுகளில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் கூட எதிராளி ஆக இருப்பார்கள். நம் வீட்டிலிருந்து ஒரு சிறிய தூசி, பக்கத்து வீட்டிற்கு காற்றில் பறந்து சென்றால் கூட, அவர்கள் நம்மை தகாத வார்த்தை கொண்டு திட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். மறுநாளில் இருந்தே அந்த நபர் உங்கள் பேச்சுக்கு வராமல் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

enemy1

இதனால் எதிரிகளுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் நமக்கு தேவை கிடையாது. எதிரிகள் நம் பக்கம் வர மாட்டார்கள். அவர்களுக்கு நம்முடைய நினைப்பு வராமல் இருக்கும். அவ்வளவு தான். மற்றபடி எதிரியின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது என்ற விஷயத்தையும் இந்த இடத்தில் நாம் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். சுயநலத்தோடு அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைத்து யாரும் இந்த கடுகை பிரயோகபடுத்த முடியாது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -