எல்லா விதமான தலைமுடி பிரச்சனைக்கும் நிரந்தரமாக ஒரு முடிவு கட்ட மாதத்தில் 1 முறை இந்த ஹேர் பேக்கை போட்டால் கூட போதும். முடி கொட்டுவது நிச்சயம் உடனே குறையும்ன்னா பாத்துக்கோங்க.

hair30
- Advertisement -

முடி உதிர்வு பிரச்சனைக்கு கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த ஒரு ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. இந்த ஹேர் பேக் போட்டால் முடி உதிர்வு சீக்கிரம் நிற்குமா நிற்காதா என்ற சந்தேகத்திற்கு எல்லாம் இடமே கிடையாது. இந்த ஹேர் பேக்கை போட்டு தலைக்கு குளித்து பாருங்கள். முடி உதிர்வு நிச்சயம் குறைந்து இருக்கும். மாதத்தில் ஒரு நாள் மட்டும் இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து போட்டு வந்தாலும் உங்களுடைய முடி அடர்த்தியாக வளரும். திக்காக மாறும். அந்த எளிமையான ஹேர் பேக் என்ன. பதிவுகள் சென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முடி உதிர்வை உடனே நிறுத்தும் ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக்கை மறுநாள் காலை போடுவதாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஒரு டம்ளர், தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 2 வெங்காயத்தின் தோல், பெரிய வெங்காயத்தின் தோல் அதில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை வெங்காயத்தின் தோலை மட்டும் எடுத்து பிழிந்து கீழே போட்டு விடுங்கள். ஊறிய வெந்தயம் அந்த ஊற வைத்த தண்ணீர் மட்டும் நமக்கு தேவை.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் வெந்தயம், ஊற வைத்த தண்ணீரோடு ஊற்றிக் கொள்ளவும். இதோடு செம்பருத்தி பூ இலை 10, செம்பருத்தி பூ 10, போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக இதில் ஒரு முழு முட்டையை உடைத்து ஊற்றி அரைக்க வேண்டும். முட்டையை தவிர்க்கக்கூடாது. ஒரு முட்டையை மாதம் ஒரு நாள் உங்களுடைய தலையில் இப்படி ஹேர் பேக்கோடு சேர்த்து போட்டு வந்தால் தலைமுடி வலிமையாக சூப்பராக வளரும். சில பேருக்கு முட்டையின் வாடை பிடிக்கவில்லை என்று சொல்லுவார்கள். மஞ்சள் கருவை நீக்கிவிடலாம். ஆனால் மஞ்சள் கருவோடு சேர்த்து ஒரு முழு முட்டையை ஹேர் பேக்காக போட்டால் அதில் கிடைக்கும் பலமே தனிதான்.

ஹேர் பேக் இப்போது தயார். இதை தலைக்கு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே உங்களுடைய தலையில் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை வைத்துக் கொள்ளுங்கள்‌. பிறகு இந்த ஹேர் பேக்கை வேர்க்கால்கள் முழுவதும் படும்படி கவனமாக போட்டுவிட்டு, பிறகு மீதம் இருக்கும் ஹேர் பேக்கை நுனி முடி வரை போட்டு ஒரு கொண்டை கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

20 நிமிடம் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடலாம். முட்டையின் வாடை பாத்ரூம் முழுவதும் வீசத்தான் செய்யும். தேவைப்பட்டால் ரோஸ்மேரி எசென்சியல் ஆயில், லாவண்டர் எசன்ஷியல் ஆயில் எல்லாம் கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி ஹேர் பேக்கில் இரண்டு சொட்டு விட்டு கொள்ளுங்கள். இந்த முட்டையின் வாடை அவ்வளவாக தெரியாது.

இதையும் படிக்கலாமே: கஷ்டப்படாமல் வெள்ளை முடியை எல்லாம் கருகருன்னு மாற்ற இந்த 1 பொருள் போதும். தலைவலி வராது. சளி பிடிக்காது. சைனஸ் பிரச்சனை உள்ளவர்களும் இதை பயன்படுத்தலாம்.

மாதத்தில் ஒரு முறை மூக்கை கட்டிக் கொண்டாவது இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி வர நிச்சயமாக உங்கள் முடி வளர்ச்சி வேறு அளவில் இருக்கும். இதோடு சேர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கீரை வகைகள் காய்கறி வகைகள் பழ வகைகளை எல்லாம் உணவில் மாற்றி மாற்றி சேர்த்து கொள்ளவும். நிச்சயமாக உங்களுக்கு அழகான முடி சீக்கிரத்தில் கிடைக்கும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -