ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சூப்பரானா எக் மஞ்சூரியனை ரொம்ப ஈஸியா வீட்ல செய்யலாம். டேஸ்ட் வேற லெவெல இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க

- Advertisement -

இப்போதெல்லாம் குழந்தைகள் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் என சீன உணவுகளின் மீது அதிகமான ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த உணவுகளை கடையில் வாங்கி கொடுப்பது ஒன்றும் அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. இதை முடிந்த அளவிற்கு நாம் வீட்டிலே செய்து கொடுக்கும் போது அவர்களுக்கு நன்றாகவே செய்து கொடுக்கலாம். அந்த வகையில் எக் மஞ்சூரியனை வீட்டில் எப்படி சுலபமாகவும் அதே நேரத்தில் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செய்து கொடுப்பது என்பதை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

எக் மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 6, மிளகுத்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு -1 ஸ்பூன், மைதா மாவு – 1 கப், கான் பிளவர் – 1/4 கப், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது ), இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், டொமேட்டோ சாஸ் – 2 ஸ்பூன், சோயா சாஸ் – 2 ஸ்பூன், சில்லி சாஸ் – 1 ஸ்பூன், குடை மிளகாய் (நறுக்கியது ) – 1/4 கப், எண்ணெய் – 200 கிராம்.

- Advertisement -

செய்முறை

இந்த எக் மஞ்சிரியன் செய்வதற்கு முதலில் முட்டையைகளை ஒரு பவுலில் உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள், கால் ஸ்பூன் உப்பு, சேர்த்து நன்றாக அடித்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பேனை எடுத்து அதன் உட்புறம் எண்ணெய் தேய்த்த பிறகு அடித்து வைத்த முட்டையை அதில் ஊற்றி அடுப்பை லோ ஃப்லேமில் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக விடுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் ஊற்றி வைத்து, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்தும் வேக வைக்கலாம்.

10 நிமிடம் கழித்து வேக வைத்த இந்த முட்டை கலவை தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் வர வேண்டும். இப்படி இருந்தால் அது சரியான பதத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அடுப்பை அணைத்து விட்டு கொஞ்சம் ஆறிய பிறகு இதை தனியாக எடுத்து சின்ன சின்னதாக ஸ்லைஸ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு பௌலில் மைதா மாவு, கான்பிளவர் மாவு, மிளகாய்த் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்ந்து நன்றாக கலந்த பிறகு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்த பின் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், ஏற்கனவே நாம் எடுத்து வைத்த முட்டை துண்டுகளை இந்த மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது எக் மஞ்சிரியன் மசாலாவை தயார் செய்து விடலாம்.
அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து இத்துடன் நறுக்கி வைத்த குடைமிளகாயும் சேர்த்து நன்றாக வதங்க விடுங்கள்.

இதில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொண்டால் வெங்காயம் சீக்கிரம் வதங்கி விடும். வெங்காயம் வதங்கிய பிறகு டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் மூன்றையும் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்த பிறகு அடுப்பை ஐ பிளேமில் வைத்து வதக்கி கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கப்பில் ரெண்டு டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு எடுத்து தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொண்டு அதையும் இந்த மசாலா கலவையில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விடுங்கள். அதன் பிறகு ஏற்கனவே நாம் பொரித்து வைத்து முட்டைகளை இதில் சேர்த்து ஒரு நிமிடம் வரை ஹ பிளேமில் வைத்து வதக்கிய பிறகு, அடுப்பை அணைத்து விட்டு வெங்காய தால் இருந்தால் கடைசியாக அதையும் மேலே தூவி விடுங்கள் இல்லை என்றால் அப்படியே கூட பரிமாறலாம்.

இதையும் படிக்கலாமே: 2 விசிலில் அசத்தலான சுவையில் சாதம், இட்லி, தோசை, சப்பாத்திக்கு இந்த ஸ்டைலில் ஒரு முறை குருமா செஞ்சு பாருங்க இனி அடிக்கடி இப்படித்தான் செய்வீங்க!

இந்த எக் மஞ்சூரியன் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இதை சப்பாத்தி நாண் போன்ற உணவுகளுடன் சைடிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -