வேணான்னு தூக்கி எறிக்கூடிய முட்டை ஓடில் இருந்து இவ்வளவு நன்மைகளா? இது தெரிஞ்சா இனிமே முட்டை ஓட தூக்கி போடவே மாட்டீங்க.

muttai odu
- Advertisement -

சாதாரணமாக நமது வீடுகளில் முட்டை வாங்கினால் அதை சமைத்து சாப்பிட்டுவிட்டு அதன் ஓடுகளை குப்பையில் போடுவது தான் வழக்கம். ஆனால் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு முட்டை ஓடில் பலவிதமான பயன்கள் உள்ளன. அதில் சிலவற்றை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

egg-shell

பயன் 1:
பொதுவாக சில வீடுகளில் பல்லி தொல்லை அதிகம் இருக்கும். சிலருக்கு பல்லியை கண்டாலே அலர்ஜியாக கூட இருக்கும். பல்லியை வீட்டில் இருந்து விரட்டுவதற்கு முட்டை ஓடு சிறந்த பங்காற்றுகிறது. முட்டை ஓடை எடுத்து ஒரு நாள் வெளியில் காயவைத்து விட்டு அதன் பிறகு பல்லி அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் அந்த பக்கம் பல்லி வராது.

- Advertisement -

பயன் 2:
அதிக நேரம் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு கண்களின் கீழ் கருவளையம் வருவதை நாம் காண முடியும். இந்த கருவளையத்தை அகற்ற முட்டை ஓடு உதவுகிறது. முட்டை ஓடை மிக்சியில் போட்டு நன்றாக மைய பொடியாக அரைத்துக்கொண்டு அதில் சிறிதளவு தேன் கலந்து நன்றாக கொழைத்துக்கொண்டு கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் அதை பச்சை தண்ணீரில் கழுவ வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்வதன் மூலம் கருவளையம் படிப்படியாக குறையும்.

Muttai odu

பயம் 3:
முட்டை ஓடு சிறந்த உரமாகவும் பயன்படுகிறது. வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் முட்டை ஓடை தூக்கி குப்பையில் போடுவதற்கு பதிலாக செடிகளுக்கு உரமாக போடலாம்.

- Advertisement -

பயன் 4:
பலரது வீடுகளில் கிச்சனில் உள்ள தவாவின் பின்புறத்தில் கருப்பு கரை படிந்திருக்கும். அந்த கரையை நீக்குவதற்கு முட்டை ஓடு பயன்படுகிறது. முட்டை ஓடை மிக்சியில் போட்டு அரைத்துக்கொண்டு(மைய அரைக்கக் கூடாது) அதை கருப்பு கரை இருக்கும் தவாவின் பின்புறத்தில் நீரோடு கலந்து தேய்த்து விட்டு, 10 நிமிடங்கள் கழித்து பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு கழுவினால் கரை காணாமல் போகும்.

பயன் 5:
மிக்சி ஜாரில் உள்ள பிளேடு நாள்பட தேய்ந்து போகும். அதை மீதும் கூறுமையாக்க முட்டை ஓடு உதவுகிறது. சிறிதளவு முட்டை ஓடை எடுத்து மிக்சி ஜாரில் அரைப்பதன் மூலம் பிளேடு மீண்டும் கூர்மை அடையும்.

egg-shell-mixie-jar

இப்படி முட்டை ஓடு மூலம் நாம் ஏராளமான பல நன்மைகளை பெறலாம்.

- Advertisement -