வடித்த சாதம் இருந்தால் அடுத்த 10 நிமிடத்தில் நாக்கில் எச்சில் ஊறும் ‘எக் தவா புலாவ்’ தயார். வெரைட்டி ரைஸ் பிரியர்கள் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க.

egg-rice
- Advertisement -

முட்டையை வைத்து செய்யக்கூடிய சூப்பரான லஞ்ச் பாக்ஸ் வெரைட்டி ரைஸ் ரெசிபி இது. சுலபமாக செய்து முடித்து விடலாம். சாதத்தை மட்டும் வடித்து முதலில் ஆற வைத்து விட்டால், இந்த சாதம் செய்வது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் கிடையாது. டாப் டக்கரான சுவை 100% கேரன்டி. முட்டை பிரியர்கள், வெரைட்டி ரைஸ் பிரியர்கள் இந்த ரெசிபியை கட்டாயம் மிஸ் பண்ண கூடாது. வாங்க ரெசிபிக்கு போகலாம்.

இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவு சாதத்தை வடித்து ஆற வைத்து தயாராக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய கப் அளவு சாதத்திற்கு பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும்.

- Advertisement -

முதலில் 6 வரமிளகாய்களை கொஞ்சமாக சுடுதண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊறிய வர மிளகாய்களை மிக்ஸி ஜாரில் போட்டு ஊற வைத்த தண்ணீரை கொஞ்சமாக ஊற்றி பேஸ்ட் போல அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி அரைத்து வைத்திருக்கும் மிளகாய் பேஸ்டிலிருந்து 1 பெரிய ஸ்பூன் அளவு மட்டும் எடுத்து இந்த முட்டையில் போட்டு, முட்டைக்கு தேவையான அளவு உப்பு போட்டு, இந்த முட்டையை நன்றாக கலந்தால் ஒரு முட்டை மசாலா கிடைக்கும். அதையும் எடுத்து தனியாக அப்படியே ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது தவா புலாவ் செய்வதற்கு ஒரு அகலமான கடாயை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 2 ஸ்பூன், ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம் – 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கொடை மிளகாய் – 1 கைப்பிடி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு வதக்கிய பின்பு பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் – 1, மசாலாவுக்கு தேவையான அளவு – உப்பு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், தனியாத்தூள் – 1 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக எண்ணெயில் வதக்கி விட்டு, மிக்ஸி ஜாரில் மீதம் இருக்கக்கூடிய வர மிளகாய் பேஸ்டை இதில் ஊற்றி, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, இந்த மசாலா பொருட்களை எல்லாம் நன்றாக வேக வைத்து விடுங்கள்.

நிறைய தண்ணீர் ஊற்றக்கூடாது. இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றினால் போதும். தண்ணீர் நன்றாக சுண்டி மசாலா, தொக்கு பதத்திற்கு வந்ததும் வடித்து வைத்திருக்கும் சாதத்தை உதிரி உதிரியாக இதில் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். மசாலா வெள்ளை சாதத்தில் நன்றாக கலந்த பின்பு, முதலில் செய்து வைத்த முட்டை மசாலாவை இதன் மேலே தூவி, 1/2 எலுமிச்சம் பழச்சாறை இதன் மேலே பிழிந்து கொஞ்சமாக கொத்தமல்லி தழையை தூவி நன்றாக கலந்து விட்டால், அட்டகாசமான சுவையில் சூப்பரான ரைஸ் தயார்.

இதை பரிமாறும் போது வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி இதன் மேலே அழகு படுத்திக் கொள்ளலாம். படிக்கும்போதே சில பேருக்கு நாட்டில் எச்சி ஊறி இருக்கும். மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணுங்க. லஞ்ச் பாக்ஸுக்கு கட்டிக் கொடுத்தா அவ்வளவு ருசியா இருக்கும்.

- Advertisement -