எகிப்திய ஜோதிடம் உங்களை பற்றி கூறும் சில சுவாரஸ்ய தகவல்கள்

astrology

எகிப்திய நாகரிகம் என்பது மிகவும் பழமை வாய்ந்த நாகரிகம் என்பது நாம் அறிந்ததே. அதே போல பழங்காலம் முதல் அவர்கள் ஜாதகம் கணிப்பதில் மிக சிறந்தவர்களாக விளங்குகின்றனர் என்கிறது சில நூல் குறிப்புக்கள். அந்த வகையில் எகிப்திய ஜோதிட ரீதியாக எந்த மாதத்தில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

ஜனவரி 8 முதல் 21 வரை மற்றும் பிப்ரவரி 1 முதல் 11 வரை பிறந்தவர்கள்

astrology

இந்த தேதியில் பிறந்தவர்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக திகழ்வார்கள். பிறர் கூறும் கருத்துக்களை கேட்டு அதில் உள்ள சாதக பாதகங்களை தெளிவாக ஆராயும் திறன் இவர்களிடம் இருக்கும். இக்கட்டான சூழல் ஏற்படும் சமயங்களில் இவர்கள் தங்கள் பொறுமையை இழுந்துவிடுவார்கள். தன்னுள் இருக்கும் ரகசியங்களை அவ்வளவு எளிதில் யாரிடமும் பகிரமாட்டார்கள். சில நேரங்களில் இவர்கள் தனிமையை அதிகம் நாடுவார்கள். நிதி சார்ந்த தொழில்கள் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மே 9 முதல் 27 வரை மற்றும் ஜூன் 29 முதல் ஜூலை 13 வரை பிறந்தவர்கள்

astrology gold

- Advertisement -

இவர்கள் எதையும் புதுவிதமாக யோசிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை பொறுத்தவரை தங்களை சுற்றி எது நடந்தாலும் அது தங்களுக்கு சாதகமே என்று என்னும் நேர்மறை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதை செய்ய முடியாது, இது கஷ்டம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் இவர்களிடம் அவ்வளவு எளிதில் உதிக்காது. எதையும் அடைய இவர்கள் கடுமையாக போட்டி போடுவார்கள். ஆலோசனை கொடுப்பது சம்மந்தமான தொழில் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ஜூலை 14 முதல் 28 வரை, செப்டம்பர் 23 முதல் 27 வரை மற்றும் அக்டோபர் 3 முதல் 17 வரை பிறந்தவர்கள்

astrology

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு கூட்டம் என்றாலே சற்று அலர்ஜியாக இருக்கும். தனிமையான சூழலையே இவர்கள் பெரும்பாலும் விரும்புவர். அதனாலேயே இவர்களிடம் கூச்ச சுபாவம் சற்று அதிகமாக இருக்கும். வாழ்க்கையை பற்றிய சிந்தனை இவர்களிடம் அதிகம் இருக்கும். தனக்கு பிடித்தவர்களை எப்போதும் விட்டு தரமாட்டார்கள். அதே நேரம் தனக்கு பிடித்தவர்களுக்கு தன்னை தான் அதிகம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். எழுத்தாளர் போன்ற பனி இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

பெப்ரவரி 12 முதல் 29 வரை மற்றும் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை பிறந்தவர்கள்

astrology

இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்கள் நண்பர்கள் மீதும் குடும்பத்தார் மீதும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள். புதிய நபர்களோடு இவர்கள் அவ்வளவு எளிதில் பழக மாட்டார்கள். எதிலும் முடிந்தவரை நியாயமாக நடக்க எண்ணுவார்கள். சில நேரங்களில் ஆர்வ கோளாறாக செயல்பட்டு முழிப்பார்கள். கிண்டல் கேலி போன்றவை இவர்களுக்கு பிடிக்காது. நீதி துறை இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ஏப்ரல் 20 முதல் மே 8 வரை மற்றும் ஆகஸ்ட் 12 முதல் 19 வரை பிறந்தவர்கள்

astrology

இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கை என்பது சற்று அதிகமாகவே இருக்கும். தங்களது இலட்சியத்தை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியம் இவர்களிடம் மேலோங்கி இருக்கும். குடும்பத்தார் மீது அளவுகடந்த பாசம் கொண்டிருப்பார்கள். எந்த வேலையையும் இவர்களை நம்பி ஒப்படைக்கலாம். எப்போதும் பிறரின் நம்பிக்கை நட்சத்திரமாக இவர்கள் இருப்பார்கள். அரசியல் சார்ந்த வேலைகள் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மார்ச்சு 11 முதல் 31 வரை, அக்டோபர் 18 முதல் 29 வரை மற்றும் டிசம்பர் 19 முதல் 31 வரை பிறந்தவர்கள்

astrology

இவர்களிடம் நகைச்சுவை உணர்வு சற்று மேலோங்கி இருக்கும். எதையும் பளிச்சென்று நேருக்கு நேர் பேசிவிடுவார்கள். எதிலும் சுருசுருப்போடு செயல்படுவார்கள். விளையாட்டு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதையும் உணர்ச்சிபூர்வமாக அணுகுவார்கள். எதை செய்யவும் மற்றவர்களின் துணை இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும். கலை துறை மற்றும் பேஷன் டிசைனிங் சம்மந்தமான துறை இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ஜனவரி 1 – 7 வரை, ஜூன் 19 – 28 வரை, செப்டம்பர் 1 – 7 வரை மற்றும் நவம்பர் 18 – 26 வரை பிறந்தவர்கள்

astrology
இந்த தேதியில் பிறந்தவர்கள் சற்று அமைதியானவர்களாக இருப்பார்கள். பிறர் மீது எப்போதும் அன்பு பாராட்டுவார்கள். தங்களுக்கு பிடித்தவர்களை எக்காரணம் கொண்டும் விட்டு தர மாட்டார்கள். எதிலும் சற்று ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற குணம் இவர்களிடம் சற்று இருக்கும். ஆசிரியர் சம்மந்தமான பணி இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ஜனவரி 22 முதல் 31 வரை மற்றும் செப்டம்பர் 8 முதல் 22 வரை பிறந்தவர்கள்

astrology-wheel

எந்த ஒரு செயலையும் கவனத்தோடு செய்யும் குணம் இவர்களிடம் இருக்கும். எதை சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை சாதிக்கும் வரை ஓயமாட்டார்கள். தன்னம்பிக்கையே இவர்களின் அழியாத சொத்து. எதையும் பொறுமையோடு அணுகுவார்கள். பார்ப்பதற்கு அமைதியானவர்கள் போல் தெரிவார்கள். சில நேரங்களில் மன சோர்வு கொள்வர். பின் மீண்டும் வெகுண்டெழுவார்கள். கணக்காளர் போன்ற வேலைகள் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மார்ச் 1 முதல் 10 வரை மற்றும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 18 வரை பிறந்தவர்கள்

astrology-wheel

இந்த தேதியில் பிறந்தவர்கள் தலைமை பண்பு கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் அன்பாக பேசுவார்கள். அமைதியாக நடந்துகொள்வார்கள். எதையும் தன்னம்பிக்கையோடு செய்வார்கள். சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றி அனுசரித்து நடந்துகொள்வார்கள். சில சமயம் அதிகார குணம் இவர்களிடம் தலை தூக்கும். ஆசிரியர் சம்மந்தமான பனி இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை மற்றும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரை

astrology

இந்த தேதியில் பிறந்தவர்கள் அனைவரிடத்திலும் எளிதில் பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் முடிந்தவரை நேர்மையாக நடக்க முயற்சிப்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். சில நேரங்களில் சற்று பொறுமை இல்லாமல் நடட்னத்துக்கொண்டு பிறரை எடுத்தெறிந்து பேசிவிடுவார்கள். பிறரை மகிழ்விக்கும் எந்த தொழிலும் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மே 28 முதல் ஜூன் 18 வரை மற்றும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை பிறந்தவர்கள்

astrology

இந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த ஒரு கருத்தையோ அல்லது செய்தியையோ பிறரிடம் தெளிவாக புரியும்படி கூறும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். சமுதாய உயர்விற்காக சிந்திப்பார்கள். சமூக நலனிற்காக பாடுபடுவார்கள். சில நேரங்களில் பிறர் தனுக்கு அடிபணித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் வரும். ஆசிரியர் சம்மந்தமான வேலை இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ஏப்ரல் 1 முதல் 9 வரை மற்றும் நவம்பர் 8 முதல் 17 வரை பிறந்தவர்கள்

astrology

இந்த தேதியில் பிறந்தவர்கள் ஒரு வேலையை கையில் எடுத்தால் அது முடியும் வரை பொறுமை காக்க மாட்டார்கள் அதற்குள் மற்றொரு வேலையை செய்ய எண்ணுவார்கள். அனைவரிடத்தில் அன்பு பாராட்டுவார்கள். எளிதில் இவர்கள் பிறர் மனதை கவர்ந்து விடுவார்கள். இதனால பல நேரங்களில் இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். வழக்கறிஞ்சர் போன்ற தொழில்கள் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

ஜோதிடம் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் பெற எங்களுடைய முக நூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.