- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஏகாதசி பெருமாள் மந்திரம்

ஏகாதசி பெருமாள் மந்திரம்

- Advertisement -

இது புரட்டாசி மாதம். இன்று புரட்டாசி மாதத்தில் வந்திருக்கக்கூடிய இரண்டாவது சனிக்கிழமையானது மகாளய பட்சத்தோடு சேர்ந்து, ஏகாதசி திதியுடன் இருக்கிறது. இத்தனை விசேஷ அம்சங்கள் கொண்ட இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்யக்கூடிய எளிமையான ஒரு முறையைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதோடு நமக்கு வேதனைகளை தீர்க்கப் போகும் சுலபமான பெருமாள் மந்திரத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முடிந்தவர்கள் இன்று பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தாயாரையும் பெருமாளையும் வழிபாடு செய்து கோவிலை 11 முறை வளம் வந்து, பெருமாள் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை படித்தால் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் பெருமாள் தீர்த்து வைப்பார்.

- Advertisement -

கோவிலுக்கு செல்ல முடியாது என்பவர்கள் வீட்டிலேயே பெருமாள் முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மனதார பெருமாளை நினைத்து வேண்டி உங்கள் பிரச்சனைகள் தீர, பிரார்த்தனை செய்து இந்த மந்திரத்தை சொன்னாலும் உங்களுக்கு உண்டான பலன் கிடைக்கும். கட்டாயம் இன்று பெருமாளின் முன்பாக பஞ்ச பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில் துளசி இலை, பச்சை கற்பூரம் சேர்த்த தீர்த்தம் வைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள் மிகவும் நல்லது.

பெருமாள் மந்திரம்

ஓம் கேசவாயநம,
ஓம் நாராயணாயநம,
ஓம் மாதவாயநம,
ஓம் கோவிந்தாயநம,

- Advertisement -

ஓம் விஷ்ணுவேநம,
ஓம் மதுசூதனாயநம,
ஓம் த்ரிவிக்ரமாயநம,
ஓம் வாமனாயநம,

ஓம் புருஷோத்தமாயநம,
ஓம் ஸ்ரீதாராய நம,
ஓம் அதோஷஜாயநம,
ஓம் ஹ்ருஷீகோசய நம,

- Advertisement -

ஓம் நரசிம்ஹாயநம,
ஓம் பத்மனாபாயநம,
ஓம் அச்யுதாயநம,
ஓம் தாமோதராயநம,

ஓம் ஜனார்த்தனாயநம,
ஓம் ஸ்ங்கர்ஷணாயநம,
ஓம் உபேந்த்ராயநம,
ஓம் வாஸூதேவாயநம,

ஓம் ஹரயேநம,
ஓம் ப்ரதுய்ம்னாயநம,
ஓம் க்ருஷ்ணாயநம

கொஞ்சமாக துளசி இலைகளையும் உதிரி புஷ்பங்களையும் ஒரு தட்டில் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாமமாக சொல்லும் போது கொஞ்சம் புஷ்பத்தையும் துளசி இலைகளையும் பெருமாளின் பாதத்தில் போட்டு இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள். மன கஷ்டம் வேதனைகள் அனைத்தும் பரந்து போய், மன நிம்மதியானது உங்கள் வீட்டிலும் உங்கள் மனதிலும் குடிகொள்ளும்.

அந்த பெருமாளும் தாயாரும் சேர்ந்து உங்கள் குடும்பத்திற்கு பரிபூரண ஆசிகளை வழங்குவார்கள். இன்று ஏகாதசி விரதம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, பெருமாளை நினைத்து இந்த வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய பாவங்கள் தீர்க்கப்படும். புண்ணியங்கள் சேர்க்கப்படும். இந்த பூமியில் நீங்கள் வாழ்ந்து மறைந்த பிறகு உங்களுடைய ஆத்மா அந்த வைகுண்டத்தை அடையும்.

இதையும் படிக்கலாமே: அடகு நகையை மீட்க எளிமையான வழிபாட்டு முறை

புண்ணியத்தை தேடுவதற்கு எந்த அளவுக்கு நாம் மந்திர ஜெபங்களை உச்சரிக்கின்றோமோ, எந்த அளவுக்கு இறை வழிபாடை செய்கின்றோமோ, அதே அளவுக்கு இயலாதவர்களுக்கு அன்னதானமும் உதவியும் செய்ய வேண்டும். உங்களால் முடிந்தால் இன்று ஒருவருக்கேனும் பசியோடு இருப்பவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள். உங்கள் பரம்பரைக்கே அந்த புண்ணியம் போய் சேரும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்