பெரிய பெரிய பணக்காரங்க, யாருக்கும் தெரியாம செய்யும் ஒரு ரகசிய பரிகாரம். 21 நாட்களில் பலன் தெரிந்து விடும். ஒருமுறை நீங்களும் செய்து பார்க்கலாம்!

temple-elakkai

பொதுவாகவே, அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கவும், கண்திருஷ்டி படாமல் இருக்கவும், கடனாளிகள் ஆகாமல் இருக்கவும், சில வித்தைகள், பரிகாரங்கள் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், இதை செய்ததால் தான் எனக்கு, இந்த பலன் கிடைத்தது என்று மட்டும் யாரிடமும் சொல்லிவிட மாட்டார்கள். அப்படி வடமாநிலத்தவர்கள் செய்யக்கூடிய ஒரு சிறிய பரிகார முறையை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். 21 நாட்களில் உங்களுக்கு பலன் நிச்சயம் தெரியும். அப்படி பலன் தெரிந்தாலும், இந்த பரிகாரத்தை செய்ததன் மூலமாகத்தான், எனக்கு பலன் கிடைத்தது என்று மட்டும் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம். பரிகாரத்தை சொல்லுவதில் தவறு இல்லை. இப்படி பரிகாரம் செய்ததால் தான், எனக்கு பலன் கிடைத்தது என்று சொல்லுவது தான் தவறு. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!

இதற்கு தேவையான பொருட்கள் 3 ஏலக்காயும், ஒரு சதுர வடிவ சிவப்பு துணியும் மட்டும்தான். உங்களது வலது உள்ளங் கைகளில் மூன்று ஏலக்காயை எடுத்து வைத்து, மூடி கொள்ள வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு, வடக்கு பக்கம் பார்த்தவாறு அமர்ந்து, உள்ளங்கைகளில் மூன்று ஏலக்காயை வைத்துக் கொண்டே, 108 முறை ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ’ என்ற மகாலட்சுமியின் மந்திரத்தை உச்சரித்து, உங்கள் வீட்டில் எத்தனை அறைகள் இருக்கின்றதோ, அத்தனை அறைகளுக்கும் சென்று, கையில் ஏலக்காயோடு, வலது பக்கமாக ஏழு முறை சுற்றி, மீண்டும் பூஜை அறைக்கு வந்து, உங்கள் உள்ளங்கையில் இருக்கும் ஏலக்காயை சிவப்புத் துணியில் வைத்து, சிவப்பு நூலால் கட்டி உங்கள் வீட்டில் யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

Elakkai

இந்த பரிகாரத்தை இந்த நாளில் தான், இந்தக் கிழமை தான், இந்த நேரத்தில் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. காலை நேரம் அல்லது மாலை நேரம் இதில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். உச்சிப் பொழுதில் மட்டும் செய்ய வேண்டாம்.

- Advertisement -

21 நாட்கள் கழித்து நீங்கள் கட்டிவைத்திருக்கும் அந்த முடிசினை ஓடும் ஆற்றில் போட்டு விடலாம். அப்படி உங்கள் வீட்டு அருகில் நீர்நிலைகள் இல்லாமல் இருந்தால், ஆலமரத்தடியிலோ, அரசமரத்தடியிலோ, மருதாணி செடியின் அடியிலோ, வேப்ப மரத்தின் அடியிலோ லேசாக மண்ணை தோண்டி புதைத்து விடுங்கள். யார் காலிலும் படக்கூடாது என்பதற்காக தான் இப்படி.

இந்த 21 நாட்கள் முடிந்த பிறகு,  நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு நல்ல காரியம் கட்டாயம் வெற்றியில் முடியும். சில பேருக்கு தாங்கள் செய்து கொண்டிருக்கும் சொந்தத் தொழிலில் கோர்ட், கேஸ் போன்ற வழக்கு பிரச்சினைகள் இருந்தாலும், அது ஒரு நல்ல தீர்வுக்கு வரும். உங்களது தொழில் தீராத நஷ்டத்தில் உள்ளது என்றால், அதற்கான தீர்வு கிடைக்கும். அதாவது பணம் வருவதில் எந்த தடைகள் உண்டோ, அந்த தடைகள் எல்லாம் தகர்க்கப்படும்.

இதனால்தான் இந்த பரிகாரத்தை வடமாநிலத்தவர்கள் பிரச்சினை என்று வரும்போது, கட்டாயம் ஒரு முறை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கும் தீர்க்கமுடியாத பணவரவிற்கு பிரச்சினைகள் ஏதாவது இருந்தால், ஒரே ஒரு முறை செய்துதான் பாருங்களேன்! பிரச்சனை தீர்ந்தது என்றால் லாபம். பிரச்சனை தீரவில்லை என்றால், நஷ்டம் அடைவதற்கு எதுவுமே இல்லை என்ற இந்தக் கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எல்லா நோய்களும் நீங்கி ஆரோக்கியம் காக்க வைக்கும் அபிராமி அந்தாதி பாடல்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kariya thadai neenga Tamil. Kariyam vetri pera Tamil. Elakkai nanmaigal Tamil. Elakkai payangal Tamil.