வீட்டில், பெண்களின் கைகளால் 3 ஏலக்காய்களை இப்படி வைத்தாலே போதும். அந்தக் குடும்பத்தில், சகல சௌபாக்கியங்களும் நிரம்பி வழியத் தொடங்கும்.

mahalashmi

ஒரு வீட்டில் நம்பிக்கையோடு பெண்கள் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளும், பரிகார முறைகளும் பல மடங்கு பலனை கொடுக்கும். அந்த வரிசையில் வீட்டில் இருக்கக்கூடிய, நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய ஏலக்காய்க்கு நிறைய மகத்துவம் உள்ளது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இந்த ஏலக்காய்களை வைத்து ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 27 நாட்கள் உங்களுடைய வீட்டில், 3 ஏலக்காய்களை இப்படி வைத்து பாருங்கள். நிச்சயமாக 27ஆவது நாள் முடியும் போது உங்களை அறியாமலேயே உங்கள் வீட்டிற்கு ஒரு நல்லது நடந்துவிடும்.

வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்ய வேண்டும். எப்போதும் போல காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். முடியாதவர்கள் அடுத்தடுத்து வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்துகொள்ளலாம். தவறொன்றும் கிடையாது.

பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, பூஜையறையில் மகாலட்சுமியின் பாதங்களில், 3 ஏலக்காய்களை வைத்துவிட்டு, வழக்கம் போல உங்களது வெள்ளிக்கிழமை பூஜையை தீப தூப ஆராதனை காண்பித்து நிறைவு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு சிவப்பு நிறத்தில் இருக்கும், சிறிய சதுர வடிவிலான துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை முடிச்சு போட சிவப்பு நிற நூல் கட்டாயம் தேவை. நூல் கிடைக்கவில்லை என்றால், அந்த சிவப்பு நிற துணியை மெலிசாக வெட்டி நூலாக கட்டிக்கொள்ளலாம்.

red-cloth

சிவப்பு நிறத் துணியில் 3 ஏலகாய்களை வைத்து, சிவப்பு நிற நூலால் முடிச்சுப்போட்டு, பூஜை அறையில் அமர்ந்து இந்த முடிச்சினை, பெண்கள் தங்களுடைய வலது உள்ளங் கைகளில் வைத்துக் கொண்டு, அவர்களுடைய தலையை 27 முறை சுற்றிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு முடிச்சை உங்களது வலது கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமியின் மந்திரத்தை உச்சரித்து, உங்கள் கையில் இருக்கும் முடிச்சுக்கு சக்தியூட்ட வேண்டும் ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி!’ ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ இப்படியாக உங்களுக்கு மகாலட்சுமியின் மந்திரம் எது தெரிந்தாலும் அதை சொல்லி மகாலட்சுமியை மனதாற வேண்டி இந்த முடிச்சினை உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மந்திரத்தை ஒற்றைப்படையில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் சொல்லலாம். அது உங்களுடைய இஷ்டம்.

27 நாட்கள் இந்த முடிச்சு உங்களுடைய வீட்டில் அப்படியே இருக்கட்டும். 27 ஆவது நாள் முடிச்சை அவிழ்த்து இதன் உள்ளே இருக்கும் ஏலக்காய்களை எடுத்து ஏதாவது ஒரு செடிகளின் அடியில் போட்டுவிட வேண்டும். அந்த செடி உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய செடியாக இருப்பது சிறப்பு. உங்களுடைய வீட்டில் செடி இல்லை என்றால் உங்களுடைய வீட்டின் அருகிலேயே இருக்கக்கூடிய மண்ணில் யார் கண்ணுக்கும் தெரியாமல் லேசாக புதைத்து விடுங்கள்.

poojai1

இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய நாளிலிருந்தே உங்களுடைய வீட்டில் நிம்மதி நிலவுவதை உங்களால் உணர முடியும்‌. இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பு வரக்கூடிய நாட்களில் உங்களுடைய வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கும். ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் உங்கள் இல்லத்தில் இருப்பதை உங்களால் உணரமுடியும். நம்பிக்கையோடு செய்தால் சகல சவுபாக்கியங்களும் உங்கள் வீடு தேடி வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையுடன் முயற்சி செய்து பாருங்கள்.