தோட்டம் மற்றும் வீட்டில் எலி தொல்லை தாங்க முடியவில்லையா? இந்த ஒரு பாலை எலிக்கு வைத்து பாருங்கள், பிறகு உங்கள் வீட்டு பக்கம் அது எட்டிக் கூட பார்க்காது!

erukkan-poo-rat
- Advertisement -

சிலருடைய வீடுகளில் எலி புகுந்து விட்டு வெளியே போக மாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பிக்கும். வீட்டில் தான் இந்த தொந்தரவு என்று பார்த்தால், தோட்டத்திலும் எலிகளின் நடமாட்டம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். சதா இந்த எலியுடன் போராட வேண்டிய நிலை உங்களுக்கு இனி தேவை இல்லை! எலியை ஓட ஓட விரட்டி அடிக்க கூடிய இந்த அற்புதமான பாலை எப்படி பயன்படுத்தலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எலி தானே என்று அலட்சியமாக எப்பொழுதும் இருந்து விடக்கூடாது. எலியின் எச்சம் மற்றும் எலியால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. எலியின் வாய் பட்ட உணவு பண்டங்களை சாப்பிடுவதால் காய்ச்சல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. எலியால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை இனியும் சகித்துக் கொள்ள வேண்டாம்.

- Advertisement -

வீட்டில் எலி தொல்லை இருந்தால் ராட் கில்லர் போன்றவற்றை பயன்படுத்துவது உண்டு. இது மிகவும் அபாயகரமான ஒரு விஷயம் ஆகும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் இல்லங்களில் ஜாக்கிரதையாகவே இதை கையாள வேண்டும். இதை தவிர்த்து வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எலியை விரட்டுவதற்கு நீங்கள் நிறையவே செய்திருக்கலாம், ஆனால் எலி தொல்லை மட்டும் தீர்ந்த பாடில்லை என்று புலம்புபவர்களுக்கு எந்த குறிப்பு நிச்சயம் இரட்டிப்பு பலன்களை கொடுக்கப் போகிறது.

எலி எங்கெல்லாம் வருமோ, அந்த இடங்களில் எல்லாம் இதை வைத்து விட்டால் போதும். இதை சாப்பிடும் எலிக்கு மூச்சு திணறல் ஏற்படும். அது எங்காவது ஓடி வெளியே செல்ல துடிக்கும். வெளியில் சென்றாலும் அதனால் மூச்சு விட முடியாமல், எங்காவது போய் இறந்து விடக்கூடும். எனவே இனி உங்கள் வீட்டு பக்கம் அந்த எலி திரும்பி வராது. இதற்கு எருக்கம் இலை செடியை முதலில் தேடி கண்டுபிடியுங்கள்.

- Advertisement -

காலி இடங்கள் அல்லது குப்பை கூழங்களில் சர்வ சாதாரணமாக வளரக்கூடிய இந்த எருக்கன் செடியின் பால், எலிக்கு விஷமாக இருக்கக்கூடும். எனவே எருக்கஞ்செடியின் பாலை ஒரு சிறு தக்காளி துண்டில் நன்கு தடவி விடுங்கள். அதன் பிறகு எலி வரக்கூடிய எல்லா இடங்களிலும் இதை வைத்து விடுங்கள். இதை சாப்பிடும் எலிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அது வெளியில் எங்காவது ஓடி சென்று தண்ணீர் கிடைக்காமல் அலைந்து இறந்து விடும். மீண்டும் உங்கள் வீட்டு பக்கம் திரும்பாது.

நீங்கள் எலி பிடிப்பான் வைத்தாலும் அதில் எல்லா எலிகளும் சரியாக மாட்டுவது கிடையாது. அதன் அளவுகளுக்கு ஏற்ப எலி தப்பித்துக் கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு. எனவே எலி தொல்லை நிரந்தரமாக ஒழிய தக்காளி பழத்தில் எருக்கம் பாலை ஊற்றி வைத்துவிட்டால் போதும். இதையும் குழந்தைகளிடமிருந்து கண்டிப்பாக எச்சரிக்கையாக தள்ளி வைக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எருக்கம் பால் விஷத்தன்மை கொண்டது எனவே சிறு குழந்தைகளின் கைகளில் எட்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -