தானம் செய்யும் அளவிற்கு உங்களிடம் செல்வம் இல்லையா? வசதி படைத்தவர்கள் செய்யும் தானத்திற்கு சமமாக அதே பலனை தரக்கூடிய மிக எளிமையான தானத்தை இப்படி செய்து வாழ்வில் வளர்ச்சி பெறலாம்.

dhaanam in Tamil
- Advertisement -

பொதுவாகவே தானம் என்பது மிக உன்னதமான ஒரு செயலாக பார்க்கப்படுகிறது. நாம் செய்யும் சிறு தானம் கூட நமது தலைமுறையையே காக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. வசதி படைத்தவர்கள் தங்களிடம் உள்ள செல்வத்தை கொண்டு பல்வேறு தானங்களை எளிதாக செய்ய இயலும். ஆனால் விசதி இல்லாதவர்களுக்கு தானம் செய்ய மனம் இருந்தாலும் பணம் இல்லாத நிலை இருக்கும். அது போன்றவர்கள் எப்படி மிக எளிமையான தானம் செய்து, மிகப்பெரிய பலனை பெறலாம் என்பதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

பசுமாடு தானம் என்பது மிக சிறந்த ஒரு தானமாக பார்க்கப்படுகிறது. அதிலும் அந்தணர்களுக்கு பசுமாட்டை தானமாக வழங்குவது பல வகையில் சிறப்பு சேர்க்கும். அதனால் வசதி படைத்த செல்வந்தர்கள் தங்கள் வாழ்வில் மகாலட்சுமியின் கடாட்சம் எப்போதும் இருக்கவேண்டும் என்பதற்காக பசுமாடுகளை தானமாக வழங்குவார்கள். ஆனால் ஏழை எளிய மக்களால் இந்த தானத்தை செய்ய இயலாது.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் அவர்கள் மட்டை தேங்காயை தானமாக வழங்கலாம். ஒரு தாம்பாள தட்டில் மட்டை தேங்காய், வேஷ்டி, துண்டு, வெற்றிலை பாக்கு, தட்சனை சிறிய தொகை வைத்து யாரேனும் ஒருவருக்கு தானம் செய்வதன் மூலம் நாம் பலனை அடைய முடியும். யாகம் செய்வதால் பல நற்பலன்கள் நமக்கு கிடைக்கும். ஆனால் அதற்கு பொருளாதார பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் யாகங்களுக்கும், வேள்விகளுக்கும் பசு நெய்யை தானமாக தருவதன் மூலம் அந்த யாகம் வளர்த்த பலனை அடைய முடியும்.

நம் முன்னோர்கள் இறந்த பிறகு மேலோகத்தில் நலமாக இருப்பதற்காக அவர்களை நினைத்து நாம் போர்வை, மெத்தை மற்றும் குடை போன்றவற்றை தானமாக தர வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த தானத்திற்கு சமமாக நாம் காக்கைக்கு தினமும் சாதம் வைப்பதன் மூலம் நம் முன்னோர்களின் நலனும், ஆசியும் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறப்படுகிறது. ஆனால் அனைவராலும் அன்னதானம் வழங்குவது என்பது சாத்தியமற்ற நிலையாகும். அன்னதானம் செய்ய பொருளாதார வசதி இல்லை என்று நினைப்பவர்கள், மனிதர்களுக்கு அன்னதானம் தருவதற்கு பதிலாக சிறு சிறு பூச்சிகளுக்கு அன்னதானம் வழங்கலாம். அதாவது காலையில் எழுந்து அரிசி மாவினால் கோலம் போடுவதன் மூலம் அந்த மாவை எறும்புகளும், சிறு சிறு பூச்சிகளும் சாப்பிடுவதால் அதற்கு நாம் தானம் செய்ததாக கருதப்படுகிறது. இதுவும் ஒரு வகையில் அன்னதானம் ஆகும்.

இவ்வாறு நாம் செய்யக்கூடிய சிறு சிறு தான தர்மத்திலும், நமக்கு நல்ல அற்புதமான பல பலன்கள் கிடைக்கும் என்பதால் நம்மால் இயன்ற தான தர்மத்தை நம் மனதார செய்து நம் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் ஏற்பட செய்வோம்.

- Advertisement -