சகல பிரச்சனைகளை தீர்க்கும் சகஸ்ரபோஜனை

sahasrabhojanai
- Advertisement -

நம் வாழ்வில் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணமாக திகழ்வது நம்முடைய கர்ம வினைகளே. கர்ம வினைகளை தீர்ப்பதற்கு நாம் புண்ணியங்கள் பல செய்ய வேண்டியதாக இருக்கும். அந்த புண்ணியங்களை சேர்ப்பதற்கு தான தர்மங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சிவன் கோவிலில் எந்த பொருளை தானமாக தந்தால் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது என்றால் நம்மால் இயன்ற அளவு பிறருக்கு உணவு அளிக்க வேண்டும். அப்படி உணவு அளிக்கும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் குறைய ஆரம்பிக்கும். அதன் மூலம் நம்முடைய பிரச்சனைகள் தீரும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சகஸ்ர போஜனை செய்தால் அதன் பலன் விரைவிலேயே நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

சகஸ்ர போஜனை என்பது ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவது என்று பொருள்படும். வறுமையில் இருக்கக்கூடிய நபர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க முடியாது அல்லவா? அதற்காகவே காஞ்சி பெரியவர் ஒரு எளிய வழியை கூறி இருக்கிறார். இந்த தானத்தை நாம் சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமைகள் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பழமையான சிவாலயத்திற்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும் பொழுது ஒரு கிலோ அரிசி குருணை வாங்க வேண்டும். அடுத்ததாக 100 வெல்லம் அல்லது சர்க்கரை வாங்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்தில் இருக்கும் எறும்பு புற்றுக்கு போட வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ஒன்பது சிவாலயங்களுக்கு சென்று அரிசி குருணையை வெல்லத்தையும் வாங்கி எறும்பு புற்றிற்கு தானமாக தரவேண்டும். இதுவே மிகவும் எளிமையான சகஸ்ர போஜனை ஆகும்.

- Advertisement -

மனிதர்களுக்கு உணவளிப்பது மட்டும் அன்னதானம் கிடையாது. வாயில்லா ஜீவன்களின் பசியை ஆற்றுவதும் அன்னதானமே. அதிலும் குறிப்பாக எறும்புகளுக்கு நாம் தானம் செய்வதன் மூலம் கண்டிப்பான முறையில் நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் நமக்கு கஷ்டங்களை தரக்கூடிய கிரகமாக திகழக்கூடியவர் சனி பகவான் என்பதால் சனிக்கிழமை அன்று இந்த தானத்தை நாம் செய்ய வேண்டும்.

மேலும் நம்முடைய கர்ம வினைகளை நீக்கி முக்தி பேறு அளிக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் சிவபெருமான் என்பதால் சிவபெருமானின் ஆலயத்தில் செய்ய வேண்டும். ஒன்பது வாரங்கள் நிறைவு செய்த பிறகு தங்களால் இயலும் பட்சத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இந்த அன்னதானத்தை செய்வதன் மூலம் தங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: புதன்கிழமை ஏற்ற வேண்டிய விளக்கு

எந்த ஒரு தானத்தை நாம் செய்வதாக இருந்தாலும் மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் செய்ய வேண்டும். இவ்வளவு செலவாகிறதா என்ற எண்ணம் துளி கூட மனதில் வரக்கூடாது. அந்த வகையில் இந்த தானத்தை நாம் செய்வதற்கு பெரிதும் செலவுகள் ஏற்படாது என்பதால் மகிழ்ச்சியுடன் இந்த அன்னதானத்தை செய்து கர்ம வினைகளை நீக்கி நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

- Advertisement -