உடல் எடையைக் கூட்ட வேண்டுமா அல்லது குறைக்க வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்கள் போதும்.

kollu
- Advertisement -

இன்றைய சூழலில் இரண்டு விதமான பிரச்சனைகள் பலரையும் பாதிக்கின்றது. அதில் ஒன்று உடல் எடையை கூட்டுவது, மற்றொன்று உடல் எடையை குறைப்பது. இந்த பிரச்சினைகளில் இருப்பவர்கள் இதற்காக பணம் செலவழித்து தகுந்த வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்வதும், கட்டுக்கோப்பான உணவுகளை சாப்பிடுவதும் என்று பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால் நம் வீடுகளில் பயன்படுத்த கூடிய உணவுப் பொருட்களிலேயே இதற்கான தீர்வுகள் உள்ளன. அவை என்ன பொருட்கள் அவற்றிற்கான பலன்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

kollu

“கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு” என்ற இந்த வாக்கியத்திலேயே நமக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கான விடை உள்ளது. இந்த கொள்ளு மற்றும் எள்ளை நம் முன்னோர்களின் கூற்றுப்படி முறையாக பயன்படுத்தினால் உடல் பருமனை குறைக்கவும் முடியும் கூட்டவும் முடியும்.

- Advertisement -

கொள்ளு:
ஆயுர்வேத மருத்துவத்தில் கொள்ளு பெருமளவில் பயன் படுகிறது. இதில் வைட்டமின்கள், புரதச்சத்துகள் இரும்புச்சத்துகள் ஆகியவை பெருமளவில் நிறைந்துள்ளன. நம் முன்னோர்கள் கடினமாக உழைக்கும் குதிரைக்கு உணவாக கொள்ளை கொடுத்தனர். இதனால் தான் குதிரையின் உடலில் கொழுப்பு சேராமல் சிக்கென்று இருக்கும்.

kollu1

கொள்ளை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடையை குறைக்க முடியும். முதல் நாள் இரவு ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து கொண்டு அதனை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாகக் குறையும். கொள்ளை வறுத்து அதனை பொடி செய்து வைத்துக்கொண்டு ரசம் வைத்தோ அல்லது சூப் செய்தோ சாப்பிட்டு வர உடல் எடையை எளிதில் குறைக்க முடியும்.

- Advertisement -

கொள்ளு சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்:
கொள்ளு – ஒரு கப், எண்ணெய் – 2 ஸ்பூன், துருவிய தேங்காய் – 2 ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

ellu

செய்முறை:
கொள்ளை சுத்தம் செய்து அதில் தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை குக்கரில் சேர்த்து அதனுடன் மூன்று கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கர் 5 விசில் வரும் வரை வேக வைக்கவேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனை வேக வைத்துள்ள கொள்ளுடன் சேர்த்து கலந்து விட்டு இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

எள்ளு:
எள்ளில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எள் உலகிலேயே ஆரோக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதனை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு கடாயில் எள்ளை நன்றாக வறுத்துக் கொண்டு அதனை பொடி செய்து அதனுடன் வெல்லத்தை சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து தினமும் சாப்பிட்டு வர உடல் எடையை விரைவாக கூட்ட முடியும்.

ellu-podi-images5

எள்ளு பொடி செய்ய தேவையான பொருட்கள்:
எள் – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வரமிளகாய் – 10, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

செய்முறை:
எள், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் இவை நான்கையும் தனித்தனியாக வறுத்து கொண்டு அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத் தூளையும் சேர்ந்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எள்ளு பொடியை சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை விரைவாக உயரும்.

- Advertisement -