கோவிலை தவிர வேறு எங்கும் இந்த பொருளை கையால் தெரியாமல் கூட வாங்கவே கூடாது. இதனால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து வருவதோடு, வாழ்க்கையில் சரிவை சந்திக்கும் நிலை கூட வர கூடும்.

- Advertisement -

நாம் தினமும் பல்வேறு மனிதர்களை சந்திக்கின்றோம் பல்வேறு விஷயங்களை பார்க்கின்றோம் அதில் நல்லது கெட்டது என அனைத்தையும் கடந்து நாம் தினமும் நம் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படியான இந்த வாழ்க்கை பயணத்தில் சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது என்று ஆன்மீகத்திலும் நம் முன்னோர்களும் கடைப்பிடித்த ஒன்றைப் பற்றி தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்தப் பதிவில் நான் தெரிந்து கொள்ள போவது எலுமிச்சை பழம் தான். எலுமிச்சை பழத்திற்கு தேவகனி, தெய்வக் கனி என்றும் எலுமிச்சை பழத்தை கூறுவார்கள். இந்த எலுமிச்சை பழத்திற்கு தெய்வ சக்தி அதிகம் உண்டு. இந்த பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தியும் உண்டு, இது சக்தி மாவிலைக்கும் உண்டு. அத்தகைய இந்த எலுமிச்சை பழத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதன் நிச்சயமாக இன்னொரு மனிதரை சார்ந்து, தொடர்பிலிருந்து தான் பயணிக்க வேண்டி இருக்கிறது. இப்படி வாழும் இந்த சூழலில் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் என்று நமக்கு தெரியாது. அதே நேரத்தில் நல்ல முறையில் பழகிக் கொண்டு நமக்கு கெடுதல் செய்பவர்களையும் நாம் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதனால் சில விஷயங்களை நாம் தவிர்த்துக் கொள்வது தான் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி. அந்த வகையில் இந்த எலுமிச்சை பழத்தை மட்டும் நாம் யார் கையில் இருந்தும் வாங்கவே கூடாது என்று ஒரு ஐதீகம் உள்ளது.

இதற்கு இன்னொரு காரணமும் ஒன்று என்று எலுமிச்சை பழமானது தீய சக்திகளை தன்னுள் ஈர்த்து நல்ல சக்திகளை வெளியிடும் தன்மை உடையது. அதனால் தான் இந்த பழத்தை கோவிலில் இருந்து வாங்கி வந்து நம் வீட்டில் வைக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி வைக்கும் போது நம் வீட்டில் இருக்கும் தீய சக்திகளை எலுமிச்சை தன்னுள் வாங்கி கொண்டு நல்ல சக்திகளை வெளியிடும். இது எல்லோருக்கும் தெரிந்த தகவல் தான். இந்த எலுமிச்சை பழமானது வீட்டில் வைத்து அழுகி விட்டால் வீட்டிற்கு நல்லதல்ல என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது அப்படி அல்ல, வீட்டில் வைத்த பிறகு அந்த எலுமிச்சை பழம் அப்படி ஆகிவிட்டால் நம் வீட்டில் எதிர்மறை சக்திகளை எலுமிச்சை பழம் தன்னூள் இழுத்துக் கொண்டது என்று அர்த்தம். அப்படி ஆன பழத்தை எடுத்துப் போட்டு விட்டு அருகில் உள்ள அம்மன் ஆலயத்திலிருந்து வேறொரு பழத்தை வாங்கிக் கொண்டு வந்து வைத்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த எலுமிச்சை பழத்தை இன்னொருவர் கையில் இருந்து வாங்கும் போது அவர் எந்த ஒரு எண்ணத்தில் உங்களுடன் பழகுகிறார் என்று உங்களுக்கு தெரியாது. நல்ல முறையில் பழகி இருந்தால் அந்தப் பழம் உங்கள் கையில் வரும் போது நல்ல அதிர்வலைகளை கொடுத்து உங்களுக்கு முன்னேற்றத்தையும், உயர்வையும் தரும். இதையே மனதில் கெட்ட எண்ணத்தோடும், நீங்கள் நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு இருப்பவர் கையில் இருந்து உங்களுக்கு அந்தப் பழம் வந்து விட்டால் கண்டிப்பாக அந்த அதிர்வலைகள் உங்களை தாக்கும். இதே எலுமிச்சை பழத்தை நீங்கள் உங்கள் கையால் மற்றவர்களுக்கு கொடுக்கும் போது உங்களின் நல்ல ஆற்றலானது உங்களைவிட்டு செல்லும் வாய்ப்பும் உண்டு. எனவே தான் இந்த எலுமிச்சை பழத்தை பொறுத்த வரையில் கோவிலில் பிரசாதமாகவும், நமக்கு குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் கையில் இருந்தும் மட்டுமே வாங்கலாம்.

கடைகளில் கூட இந்த எலுமிச்சை பழத்தை ஒரு சின்ன கூடையில் வைத்து வெளியே தான் வைத்திருப்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் கூட பழத்தைச் சட்டென்று எடுத்து கையில் கொடுக்க மாட்டார்கள் கூடையில் இருந்து தான் எடுத்துக் கொள்ள சொல்வார்கள். இனி நீங்களும் எந்த சூழ்நிலையிலும் எலுமிச்சை பழத்தை எவர் கையில் இருந்தும் வாங்கி பயன்படுத்தாதீர்கள். கடைகளுக்கே சென்றால் கூட அவர்களை எடுத்துக் கொடுக்க சொல்லாமல் நீங்களே பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு கெடுதல் வராமல் உங்களை காத்துக் கொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பொருள் எங்கிருந்து நமக்கு வருகிறது என்பதை பொறுத்து அதற்கான பலன் உண்டு. கோவிலிலிருந்து வரும் போது பிரசாதமாக இருக்கும் இந்த பொருள். இன்னொருவர் கையில் இருந்து வரும் போது நமக்கு தீமை தரும் பொருளாக மாறி விடுகிறது. இனி நீங்கள் இது போல விஷயங்களில் கவனமாக இருந்து உங்களை நீங்களே துயரத்தில் அழுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -