ஒருவர் செய்யும் எந்தெந்த பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு கிடையாது தெரியுமா ?

Sivan
- Advertisement -

சிவனை நாம் எப்போதும் ருத்திரனாக கோபம் கொண்டவராக பார்க்கிறோம். அனால் உண்மையில் சிவன் மிகவும் மென்மையானவர். தன் அங்கத்தில் சரிபாதியாக பார்வதி தேவியை ஏற்ற தயாளன் அவர். உடலை விட்டு உயிர் பிறந்த பிறகு ஆத்மவிக்கு அடைக்கலம் கொடுக்கும் அற்புத சக்தி அவர். இப்படி மென்மயிலும் மென்மையான சிவன் சில பாவங்களை மணிப்பதே இல்லை. அவை என்னவென்பதை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

sivan

பாவம் 1 :
திருமணமான ஒரு பெண்ணின் மீதோ அல்லது ஆணின் மீதோ ஆசை கொண்டு அவர்களை எப்படியாவது கவர நினைப்போரை சிவன் மன்னிப்பது கிடையாது.

- Advertisement -

பாவம் 2 :
வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் கர்ப்பிணி பெண்களை தகாத வார்த்தையால் திட்டுவது, அவர்கள் மனம் நோகும்படி நடந்துகொள்வது, கொடுமை செய்வது போன்ற விடயங்களை சிவன் சகித்துக்கொள்வதில்லை. அதற்கான தண்டனையை அவர் நிச்சயம் அளிப்பார்.

sivan

பாவம் 3 :
அடுத்தவர் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை அபகரிக்க திட்டம் தீட்டி அதை முழுவதுமாக அபகரிக்க நினைப்பவர்கள் மகா பாவியாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை.

- Advertisement -

பாவம் 4 :
தாய், தந்தையர் மற்றும் குருவை அவமதிப்பது அவர்களை துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை.

sivan

பாவம் 5 :
தன்னுடைய சுயநலத்திற்காக தனுக்கு கீழ் உள்ளோர்களை அழிக்க நினைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பது, தேவை இல்லாத பழியை அவர்கள் மீது சுமத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை.

- Advertisement -

பாவம் 6 :
வஞ்சம் தீர்க்க குழந்தைகளை கொடுமை செய்வது, குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வது, பெண்களை தாக்குவது போன்ற செயல்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை.

Sivan God

பாவம் 7 :
செய்யாத தவறை செய்ததாக சொல்லி அடுத்தவரின் வாழ்வை சீர்குலைப்போருக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை.

பாவம் 8 :
குறுக்கு வழியில் பலரை ஏமாற்றி சொத்து சேர்ப்பது, ஒருவருக்கு தானமாக கொடுத்ததை திரும்ப பெறுவது போன்ற செயல்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை.

பாவம் 9 :
தெய்வமாக போற்றப்படும் சில உயிரினங்களின் இறைச்சியை உண்பது பாவமாகும். அதற்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை.

இதையும் பார்க்கலாமே:
சபரிமலையில் ஐயப்பன் இன்றும் அடிக்கடி விளையாட வரும் இடம் எது தெரியுமா ?

பாவம் 10 :
பகை காரணமாகவோ, அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ பிறரை கொலை செய்து ஒரு குடும்பத்தையே நிர்கதி ஆக்குவோருக்கு சிவனிடம் மன்னிப்பு கிடையாது.

- Advertisement -