எவ்வளவு அடிப் பிடித்த, கறை படிந்த பாத்திரங்களாக இருந்தாலும் நிமிசத்துல கிளீன் பண்ண இதை ட்ரை பண்ணுங்க, அப்புறம் என்ன கறை எல்லாம் போயே போச்சு தான்

- Advertisement -

வீட்டில் நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் எல்லாம் எப்போதும் சுத்தமாக பார்க்க பளிச்சென்று இருந்தாலே அது ஒரு தனி அழகு தான். என்ன?அப்படி வைத்திருக்கத் தான் நாம் அதிகம் மெனக்கிட வேண்டி இருக்கும். என்ன தான் பார்த்து பார்த்து சமைத்தாலும் கூட சில நேரங்களில் பாத்திரம் அடி பிடித்து விடும் அல்லது சமைக்கும் பொருள்கள் கருகி பாத்திரங்கள் வீணாகி விடும். அது போன்ற சமயங்களில் அந்த பாத்திரங்களை தூக்கித் தான் போட்டு விடுவோம். இனி அப்படி எதுவும் செய்யாமல் எவ்வளவு அடிபிடித்த கறையாக இருந்தாலும் கூட சுலபத்தில் நீக்கிவிட இந்த வீட்டு குறிப்பு பதிவில் நிறைய டிப்ஸ் இருக்கு வாங்க பார்க்கலாம்.

இட்லி பாத்திரத்தை பொறுத்த வரையில் அடியில் தண்ணீர் ஊற்றும் இடம் வரை எப்போதுமே கருத்து போய் தான் இருக்கும். அதை சுத்தம் செய்ய பாத்திரம் எந்த அளவிற்கு கறை படிந்து இருக்கிறதோ, அதை விட கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீருடன் கூடிய இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

அத்துடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு, லிக்விட் (பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது துணி துவைக்கும் லிக்விட் இரண்டில் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் )இரண்டையும் சேர்த்து ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைத்த பிறகு தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். கொதிக்க வைத்த பிறகு இந்த பாத்திரத்தை தேய்க்க வேண்டிய அவசியம் கூட இல்லை பாத்திரம் நிறம் மாறி பளிச்சென்று இருக்கும்.

அதே போல் சமைக்கும் போது சமயத்தில் கவனிக்காமல் விட்டு விடுவோம். அந்த நேரத்தில் பாத்திரம் முழுவதுமே அடிபிடித்து விடும் திரும்பவும் பயன்படுத்தவே முடியாது என்கிற அளவிற்கு கூட சில நேரங்களில் மோசமாகி விடும். இது போன்ற சமயங்களில் எது வரை அடிபிடித்து இருக்கிறதோ, அது வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பாத்திரத்தையும் அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். அதில் கொஞ்சம் துணி துவைக்கும் பவுடர் உப்பு ( கல் உப்பு, தூள் உப்பு எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்) சேர்த்து நன்றாக கொதி வந்தவுடன் தண்ணீரை ஊற்றி விட்டு, சூடாக இருக்கும் போது ஸ்கிரப்பர் வைத்து ஏதாவது கரண்டியின்( பாத்திரம் சூடாக இருக்கும்) உதவியுடன் தேய்த்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் கறைகள் எல்லாம் நீங்கி பளிச்சென்று ஆகி விடும். இதற்காக பாத்திரத்தை வீணாக தூக்கி போட வேண்டாம்.

இதே போல் காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் எண்ணெய் கறை படிந்திருக்கும் இடத்தில் கொஞ்சம் உப்பு தேய்த்த பிறகு, அதன் மேல் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சை பழத்தை அதன் மேல் லேசாக தேய்த்தாலே போதும் காப்பர் பாட்டம் பகுதியில் உள்ள கறை எல்லாமே சுத்தமாக நீங்கி விடும். இதை நீங்கள் சோப்பு போட்டு தேய்த்தால் கூட முழுவதுமாக போகாது.

- Advertisement -

வீட்டில் எண்ணெய் சட்டியை பொறுத்த வரையில் எப்படி தேய்த்தாலும் அதை சுற்றிலும் அந்த எண்ணெய் கறை போகவே செய்யாது. இந்த பாத்திரத்தையும் இதே போல் உப்பு, லெமன் இத்துடன் கொஞ்சம் வினிகர் சேர்த்து தேய்த்தால் பாத்திரத்தை சுற்றியுள்ள எண்ணெய் கறைகள் முழுவதுமாக நீங்கி விடும்.

செம்பு பாத்திரங்களை பயன்படுத்துபவர்கள் அதை அடிக்கடி சுத்தம் செய்து தான் ஆக வேண்டும். அப்போது தான் அது பார்க்கவே நன்றாக இருக்கும். இனி அதையும் சுலபமாக சுத்தம் செய்து விடலாம். கொஞ்சம் புளித்த தயிர் எடுத்து அந்த பாத்திரத்தின் மேல் தேய்த்து விட்டு, சிறிது நேரம் கழித்து வெறும் கையாலே தேய்த்தாலே போதும் செப்புப் பாத்திரம் பளிச்சென்று மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: இதையெல்லாம் வைத்து கூடவா உப்பு கரை படிந்த பாத்ரூம், டைல்ஸ் சிங்க் எல்லாம் சுத்தம் செய்வாங்க ? கேட்கவே ஆச்சரியமா இருக்கு. இதை படிச்ச பிறகு உங்களுக்கும் இப்படி தான் தோணும். வாங்க அது என்னன்னு பாத்துரலாம்.

வீட்டில் எண்ணெய் ஊற்றி வைக்கும் பாத்திரம் அது சில்வர் பிளாஸ்டிக், கண்ணாடி என்று எதுவாக இருந்தாலும், அதை சுத்தம் செய்ய கொஞ்சம் கோதுமை மாவை பாத்திரத்தின் அனைத்து பக்கத்திலும் தூவி தேய்த்து விடுங்கள் பாத்திரம் பளிச்சென்று மாறி விடும். இந்தப் பதிவில் உள்ள குறிப்புகள் அனைத்தும் கட்டாயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இனி உங்கள் வீட்டில் கறை படிந்த அடிப்பிடித்த பாத்திரங்களை எல்லாம் சுலபமாக சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -