50 பூரி சுட்டு எடுத்தாலும், இனி கடாயில் இருக்கும் எண்ணெய் ஒரு சொட்டு கூட குறையாது. எண்ணெயே குடிக்காமல் பூரி, பஜ்ஜி, வடை சுடுவது எப்படி?

poori4
- Advertisement -

நம்முடைய சமையலறைக்கு தேவையான மிக முக்கியமான பத்து குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்புகளை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால் அவசியம் நீங்கள் ஸ்மார்ட் இல்ல தரிசிகளாக மாறி விடுவீர்கள். பத்து குறிப்புகளையும் தெரிந்து கொள்ளுங்கள். தேவைப்படும் போது ஒவ்வொன்றாக எடுத்து விடுங்கள் பார்ப்பவர்கள் அப்படியே அசந்து போவார்கள். பெண்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய 10 பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

Tip 1:
நிறைய எண்ணெய் ஊற்றி, எந்த உணவை பொரித்தெடுக்க வேண்டும் என்றாலும் சரி, அந்த எண்ணெய் சூடானதும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு விட்டு, அதன் பின்பு பூரி பொறித்தாலும், வடை சுட்டாலும், பஜ்ஜி சுட்டாலும், அதிகமாக எண்ணெய் குடிக்கவே குடிக்காது.

- Advertisement -

Tip 2:
சப்பாத்தி தேய்க்கும் போது மாவை உருட்டும் கட்டையில், மாவு ஒட்டி கொள்கிறதா. அந்த உருட்டு கட்டையை 30 செகண்ட் நெருப்பில் காட்டிவிட்டு, பிறகு சப்பாத்தி தேய்த்து பாருங்கள். அதில் சப்பாத்தி மாவு ஒட்டவே ஒட்டாது.

Tip 3:
சப்பாத்தியை வட்டமாக தேய்த்து விட்டு அதன் உள்ளே ஒரு சொட்டு நல்லெண்ணெய் ஊற்றி, தடவி நான்காக மடித்து மீண்டும் சப்பாத்தியை தேய்த்து, பிறகு கல்லில் போட்டு சுட்டு எடுத்தால் சப்பாத்தி ஆறிய பின்பு கூட சாஃப்ட்டாக வரும்.

- Advertisement -

Tip 4:
வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் பெரிய வெங்காயத்தை 30 செகண்ட் வரை போட்டு எடுத்து பிறகு வெட்டினால் கண்களில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.

Tip 5:
பால், குழம்பு, டீ, என்று எந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்தாலும் மறந்து பொங்க விடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா. அந்த பாத்திரத்திற்கு உள்ளே ஒரு கரண்டியை போட்டு வையுங்கள். உணவுப் பொருட்கள் எல்லாம் பொங்கி ஸ்டவ்வை அடிக்கடி துடைக்க வேண்டிய வேலையை இருக்காது.

- Advertisement -

Tip 6:
உங்க வீட்டு பாத்ரூம், ட்ரெஸ்ஸிங் டேபிள் வாஷ்பேஷன் பக்கத்தில் இருக்கும் கண்ணாடி எல்லாம் அழுக்காக இருக்குமா. கொஞ்சம் பேஸ்ட்டை அந்த கண்ணாடியில் நன்றாக தடவி அதன் பின்பு ஒரு காய்ந்த துணியை வைத்து துடைத்து எடுத்தால் கண்ணாடி நிமிடத்தில் பளிச் பளிச்சென மாறும்.

Tip 7:
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி பொட்டு கடலை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை, வர மிளகாய் 4, போட்டு அரைத்து பொடித்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பீட்ரூட் பொரியல், கேரட் பொரியல், கீரை பொரியலுக்கெல்லாம் இறுதியாக இதை தூவி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Tip 8:
உங்க வீட்டு கிரைண்டரில் இட்லி மாவு சரியாக அரைக்காதா. உளுந்து அரைக்க அதிக நேரம் எடுக்குமா. அரிசி அரைக்க அதிக நேரம் எடுக்குமா. வெந்தயத்தை சுத்தமாக அரைக்காதா. காய்ந்த கிரைண்டரில் ஒரு பாக்கெட் கல் உப்பை பிரித்துக் கொட்டி, கிரைண்டரை நன்றாக ஓட விடுங்கள். அதன் பின்பு அந்த கல்லுப்பை எல்லாம் எடுத்துவிட்டு கிரைண்டரை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, பிறகு மாவு அரைத்து பாருங்கள். அரைக்காத கிரைண்டர் கூட அரை மணி நேரத்தில் உளுந்தையும் அரிசியையும் ஆட்டி கொடுத்து விடும்.

Tip 9:
நிறைய பேர் வீட்டில் இப்போது வெஜிடபிள் சாப்பர் பயன்படுத்துகின்றோம். அதை இழுத்து விடும் போது சில சமயம் ஸ்ட்ரக் ஆகும். நாம் இழுக்கும் கைப்பிடிக்கு நடுவே ஒரு ஒயர் இருக்கிறது அல்லவா, அதில் லேசாக வேஸ்லினை தடவி விட்டு இரண்டு மூன்று முறை இழுத்துப் பாருங்கள். பிறகு சுலபமாக ஸ்டக் ஆகாமல் சாப் செய்யலாம்.

Tip 10:
இஞ்சியை வெறும் ஈரத் துணியில் மடித்து ஃப்ரிட்ஜ் இல்லாமல், வெளியில் வைத்தாலே இஞ்ச் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் சூப்பராக இருக்கும்.

- Advertisement -