இங்கு சென்று வழிபட்டால் நீங்கள் வேண்டியது கிடைக்கும் தெரியுமா?

murugan
- Advertisement -

மனிதர்களின் தனி சிறப்பே ஒருவருக்கொருவர் தேவையான காலத்தில் உதவுவது தான். ஆனால் இக்காலத்தில் நெருங்கிய உறவுகள் கூட நமது கஷ்ட காலங்களில் உதவுவது இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தெய்வமே துணை. அதிலும் தமிழ் கடவுளான முருகப்பெருமான் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவர் ஆவார். அந்த முருகன் குடிகொண்டிருக்கும் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் பற்றிய சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Lord Murugan

அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது இந்த உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான முருகப்பெருமான் முத்து வேலாயுத சுவாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

kantha sasti kavasam lyrics

கற்கள் கொண்டு கட்டப்படும் பழமையான கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது இக்கோயில். அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒரே நேர்கோட்டில் தூண்கள், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்னி, வாயு உள்ளிட்ட பஞ்ச லிங்கங்களும் ஒரே மண்டபத்தில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், திருமண மண்டபம், வாகன மண்டபம், அமுத மண்டபம் என ஒரு ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

அருள்மிகு முத்து வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் சிறப்புக்கள்

- Advertisement -

இங்கு ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலபைரவர் தனி சந்நிதியிலும், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், லிங்கோத்பவர் ஆகியோர்களுக்கு தனி சந்நிதிகள் இருக்கின்றன. சித்திரை மாதத்தில் இங்குள்ள மூலவர் மீது சூரியனின் கதிர்கள் படுவதால் இந்த முருகன் அருள்மிகு உதயகிரி வேலாயுத சுவாமி என அழைக்கப்படுகிறார்.

Murugan

இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக இங்கு பக்தர்கள் தியானம் செய்யும் வகையில் தியான மண்டபம் இருக்கிறது. இது நிலமட்டத்திற்கு கீழாக குகை போன்ற அமைப்பில் இருக்கிறது. அதே நேரத்தில் காற்றோட்டமான, அமைதி தவழும் சூழல் கொண்டதாக இருக்கிறது. கோயிலுக்கு அருகில் மலை மீது வற்றாத ஊற்றுடன் தாமரை குளம் ஒன்று உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த குளத்தில் நீர் வற்றாது என்பது சிறப்பம்சமாகும். இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள முருகனை மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரத்தை முருகப்பெருமான் தருவதாக அனுபவம் வாய்ந்த பக்தர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

கோயில் அமைவிடம்

அருள்மிகு முத்து வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் ஈரோடு மாவட்டத்திலிருக்கும் கோபி வட்டத்தில் இருக்கும் உதயகிரி என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு முத்து வேலாயுத ஸ்வாமி திருக்கோயில்
உதயகிரி, மலைப்பாளையம் உலக கோயில் கிராமம்
கோபி வட்டம்
ஈரோடு மாவட்டம் – 638452

தொலைபேசி எண்

9750467504

இதையும் படிக்கலாமே:
கஷ்டங்கள் தீர இங்கே வழிபடுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Erode Udayagiri murugan temple in Tamil. It is also called as Muthu velayutha swami kovil in Tamil or Udayagiri murugan kovil in Temple in Tamil or Erode temples in Tamil or Muthu velayutha murugan in Tamil.

- Advertisement -