உங்களின் கஷ்டங்கள், குறைகள் அனைத்தும் இங்கு வழிபட்டால் நீங்கும் தெரியுமா?

sivan

சுகங்கள் மட்டுமே நிறைந்ததாக வாழ்க்கை இருந்தால் நாம் இறைவனை பற்றியோ அல்லது வாழ்வின் உயரிய நோக்கங்களையோ அறிந்து கொள்வதில்லை. கஷ்டங்களும், பிரச்சனைகளும் வாழ்வில் தொடர்ந்து ஏற்படும் போது தான் பலருக்கும் இறைவனை பற்றிய ஞாபகம் வருகிறது. வேண்டுவோர்களின் கஷ்டங்களை போக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். அந்த சிவபெருமான் மஞ்சுநாதராக இருக்கும் மங்களூரு அருள்மிகு மஞ்சுநாத சுவாமி கோயில் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

siva-thandavam

அருள்மிகு மஞ்சுநாதர் கோயில் வரலாறு

சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது மஞ்சுநாதர் கோயில். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் மஞ்சுநாதர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். 10 ஆம் நூற்றாண்டு வரை மஞ்சுநாதர் கோயில் இருக்கும் இந்த கத்ரி பகுதியில் புத்த மதம் தழைத்தோங்கியது.

தல புராணங்கள் படி காச்யப்ப முனிவரிடம் சத்திரியர்கள் எனப்படும் அரச பரம்பரையினர் அனைவரும் மிகுந்த மரியாதை செலுத்தினர். ஏற்கனவே சத்திரியர்கள் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்த பரசுராமருக்கு இந்த அரசர்களின் இந்த செயல் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் வெறிகொண்டு கண்ணில் பட்ட சத்திரியர்கள் அனைவரையும் வெட்டி வீழ்த்தினார் பரசுராமர். பிறகு சிவபெருமானை தவமிருந்த போது சிவன் அவருக்கு தான் கத்ரி பகுதியில் காட்சி தருவதாக கூறி மறைந்தார். பிறகு இங்கு வந்து தவம் செய்த பரசுராமருக்கு சிவன் பார்வதி சமேதமாக பரசுராமருக்கு காட்சி தந்து அருளினார். இன்றும் பரசுராமர் இந்த தலத்தில் அருவமாக தவம் இயற்றிக்கொண்டிருப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர்.

அருள்மிகு மஞ்சுநாதர் கோயில் சிறப்புகள்

தென்னிந்தியாவிலேயே மிக பழமையான உலோகத்தால் செய்யப்பட்ட விக்கிரகமாக இருக்கும் மூலவர் என்கிற சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. இந்த விக்கிரகத்தை பொது ஆண்டு 968 ல் இப்பகுதியை ஆண்ட குந்திவர்மன் என்கிற மன்னன் பிரதிஷ்டை செய்தான் என்று வரலாறு கூறுகிறது. கோயிலின் தெற்கு பகுதியில் மத்ஸ்யேந்திரநாதர் மடித்த கால்களின் மீது இரு கைகளையும் சேர்த்து வைத்து அற்புதமாக காட்சி தருகிறார். இதே போல் கோயிலின் வடக்கு பகுதியில் நான்கு திருக்கரங்களோடு, ஏராளமான நகைகளுடன் சௌரங்கிநாதர் காட்சி தருகிறார்.

- Advertisement -

kadri manju sivan

ஒரு காலத்தில் வாழை மர வனமாக இருந்ததால் இப்பகுதி சமஸ்கிருதத்தில் வாழை எனும் பொருள் படும் கதலி என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கத்ரி என பெயர் மருவியதாக கூறுகிறார்கள். விஜயநகர கால கல்வெட்டுகளில் இப்பகுதி கதலி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் பின்புறம் 7 தீர்த்தக்குளங்கள் உள்ளன அருகிலேயே கோமுகம் என்கிற நீரூற்று இருக்கிறது. இந்த நீரால் கை, கால், முகம் கழுவிய பின்பே பக்தர்கள் கோயிலுக்குள் நுழைகிறார்கள். கோயிலின் நுழைவாயிலில் உயரமான தீபஸ்தம்பம் உள்ளது. உற்சவ காலத்தில் மிக அதிகளவில் இங்கு தீபங்கள் ஏற்றப்படுகிறது. வாழ்வில் எத்தகைய கஷ்டங்களும், குறைகளும் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் அவை தீர்ந்து வாழ்வில் சந்தோஷம் மலரச் செய்வார் மஞ்சுநாதர் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு மஞ்சுநாதர் கோயில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மங்களூரு நகரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6.30 மணி முதல் இரவு 1.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு மஞ்சுநாதர் கோயில்
மங்களூரு
கர்நாடக மாநிலம்

இதையும் படிக்கலாமே:
ராகு – கேது தோஷம் நீங்க இங்கு வழிபடுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mangalore manjunatha temple in Tamil. It is also called as Kadri manjunath temple history in Tamil or Kadri manjunatheshwara temple in Tamil or Karnataka temples in Tamil or Karnataka Kovilgal in Tamil