நாளை, விநாயகருக்கு ரொம்பவும் பிடித்த இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றினாலே போதும். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் இந்த தீப ஒளியில் பொசுங்கி விடும்.

vetri deepam

பொதுவாகவே விநாயகரது வழிபாடு தடைகளை தகர்க்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நமக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய சங்கடங்களாக இருந்தாலும், அந்த சங்கடங்களை உடனடியாக தீர்க்கும் சக்தியும் அந்த விநாயகருக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. நாளை சங்கடஹர சதுர்த்தி! விநாயகரை நினைத்து விநாயகர் கோவிலுக்கு சென்று ஒரே ஒரு தேங்காயை உங்களுடைய சங்கடங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, சிதறு தேங்காய் உடைத்தாலும் அந்த சங்கடங்கள், ஒரு நொடிப்பொழுதில் சிதறி நொறுங்கிப் போய் விடும். அனைவருடைய சங்கடங்களும் சீக்கிரமே தீரவேண்டும் என்று, அந்த விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை தொடருவோம்.

erukan-ilai

விநாயகருக்கு மிகவும் உகந்த இந்த ஒரு தீபத்தை உங்களுடைய வீட்டில் 3 முறை ஏற்ற வேண்டும். மாதம்தோறும் வரக்கூடிய சங்கட சதுர்த்தி தினத்தன்று இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யலாம். தேய்பிறையில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி, வளர்பிறையில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி இரண்டு உள்ளது. சங்கட சதுர்த்தி அன்று இந்த தீபத்தை ஏற்ற முடியாதவர்கள், வாரம் வரக்கூடிய திங்கட் கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றலாம்.

வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் கரைந்து போக வேண்டும் என்றால், தேய்பிறை சங்கட சதுர்த்தி வழிபாடு சிறந்தது. வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும், வீட்டில் சுப காரியங்கள் நடக்க வேண்டும், எனும் பட்சத்தில் வளர்பிறை சங்கட சதுர்த்தி வழிபாடு மிகவும் சிறப்பானது.

deepam

ஆக மொத்தத்தில் மூன்று முறை இந்த தீப வழிபாட்டினை உங்களுடைய வீட்டில் செய்து விட வேண்டும். விநாயகருக்கு மிகவும் உகந்தது எருக்கன் இலை, எருக்கன் பூ. இந்த பரிகார தீபத்திற்கு கட்டாயம் ஒரு எருக்கன் இலை, கொஞ்சமாக எருக்கன் பூ தேவை. உங்களுடைய வீட்டில் விநாயகரது சிலை இருந்தால் அந்த விநாயகர் சிலைக்கு அபிஷேகம் செய்து, அந்த விநாயகருக்கு சந்தனம் குங்குமப்பொட்டு வைத்து, எருக்கன் பூமாலை சூட்டி, அருகம்புல் மாலை சூட்டி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

விநாயகரது சிலை இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் வீட்டில் கட்டாயம் விநாயகரின் திருவுருவப்படம் இருக்கும். அந்த பிள்ளையாரின் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்கு ஒரு குங்குமப் பொட்டு வைத்து, அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

manjal-pillaiyar3

விநாயகரின் திருவுருவப் படத்திற்கு முன்பாக தயாராக எடுத்து வைத்திருக்கும் எருக்கன் இலையை வைத்து, அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, இந்த தீபத்தை விநாயகரை பார்த்தவாறு வைக்க வேண்டும். தீபச்சுடர் நம்மை நோக்கியவாறு எறியக்கூடாது. விநாயகரை பார்த்தவாறு அந்த எருக்கன் இலை தீபம் ஒளிர வேண்டும்.

erukan-malai

இந்த தீபச் சுடரின் ஒளியில் விநாயகரை தரிசனம் செய்து, விநாயகரிடம் உங்களுக்கு இருக்கும் சங்கடங்களை சொல்லி அந்த சங்கடங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும். உங்கள் வாழ்நாளில் இருந்த எப்படிப்பட்ட சங்கடங்களாக இருந்தாலும் அது கூடிய விரைவில் நீங்கும்.

vinayagar

உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தில் எந்த கஷ்டமும் வரக்கூடாது என்பதற்காகவும், இந்த தீப வழிபாட்டினை செய்து பலன் பெறலாம். வீட்டில் சுப காரிய தடை இருந்தாலும், பண கஷ்டம், மன கஷ்டம், கடன் கஷ்டம் என்று எந்த பிரச்சனை இருந்தாலும் அதை சரி செய்வதற்கு இந்த வழிபாடு உங்களுக்கு கைமேல் பலனை கொடுக்கும். நல்ல வேலை கிடைக்க வேண்டும், உடலில் இருக்கக்கூடிய உபாதைகள் தீர வேண்டும் என்று கூட இந்த வேண்டுதலை மேற்கொள்ளலாம். விநாயகரின் இந்த வழிபாட்டை மேற்கொண்டு அனைவரும் வாழ்க்கையில் வளமான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.