வீட்டில், தோட்டத்தில் எறும்பு தொல்லை அதிகமாக இருக்கிறதா? 1 ரூபாய்க்கு இதை மட்டும் வாங்கி தெளித்தால் ஒரு எறும்பு கூட பக்கத்தில் இனி வரவே வராது!

erumbu-mookku-podi
- Advertisement -

வீட்டில் ஏராளமான எறும்புகள் நடமாடிக் கொண்டே இருக்கும் என்றால், அதை எப்படி விரட்டி அடிப்பது? என்று நமக்கு தெரியாது. என்னதான் நீங்கள் எறும்பு சாக் பீஸை கிழித்து வைத்தாலும் மீண்டும் எறும்புகள் வரத்தான் செய்யும். இதுபோல கெமிக்கல் கலந்த பொருட்கள் எதுவும் பயன்படுத்தாமல், இயற்கையாக எப்படி எறும்புகளை விரட்டி எடுப்பது? தோட்டத்தில் இருக்கக்கூடிய எறும்புகளையும் துரத்துவது எப்படி? என்பதை தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டில் அதிகம் எறும்புகள் வந்து கொண்டே இருந்தால், அதற்கு பலவிதமான காரணங்களும் கூறப்படுகிறது. எறும்புகள் அதிகம் வந்தால் வீட்டில் உறவினர்கள் வரக்கூடும் என்ற ஒரு சகுன பலன்கள் உண்டு. காலையிலேயே வீட்டில் உட்கார்ந்து காக்கை கரைந்தாலும் இப்படித்தான் கூறுவார்கள்.

- Advertisement -

கடிக்கும் எறும்பு அதிகம் வந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் கூறப்படுவது உண்டு. கடிக்கும் எறும்பு வீட்டில் இருந்தால் சிறு குழந்தைகள் நோய்வாய் படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால், இது போன்ற எறும்புகள் தொந்தரவு வரப் போவதில்லை! சுத்தம் இல்லை என்றால் அங்கு ஆரோக்கிய குறைவும் இயல்பாக ஏற்படுகிறது எனவே இதை கொண்டு இந்த பலன் கூறப்படுகிறது.

கட்டெறும்பு என்று சொல்லக்கூடிய பெரிய பெரிய கருப்பு எறும்புகள் வீட்டை சுற்றிலும் வந்து கொண்டே இருந்தால் வீட்டில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். வீட்டின் கதவு, ஜன்னல்கள் திறந்து வெயில் உள்ளே வருமாறு செய்ய வேண்டும். அதை விடுத்து எல்லா ஜன்னல்களையும் அடைத்து காற்று புகாதபடி வைத்திருந்தால், இது போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும்.

- Advertisement -

எறும்புகளை விரட்டி அடிக்க ஒரு ரூபாய்க்கு மூக்குப்பொடி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை தண்ணீரில் கரைத்து எறும்பு வரும் இடங்களில் மட்டும் அல்லாமல் எல்லா விதமான மூலை, முடுக்குகளிலும் லேசாக தெளித்து விடுங்கள். அவ்வளவுதான், கொஞ்ச நேரத்தில் எறும்பு எல்லாம் உங்கள் வீட்டை விட்டு எங்கேயோ ஓடி சென்றுவிடும். மூக்கு பொடி வாடை அதற்கு சுத்தமாக பிடிக்காது.

வீட்டில் மட்டுமல்லாமல், தோட்டத்திலும் எறும்பு தொல்லை உள்ளவர்கள், செடிகளில் எறும்பு பிரச்சனை உள்ளவர்களும் இது போல மூக்கு பொடியை தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்து விடலாம். இதனால் எறும்புகள் மாயமாய் மறையும். மாதம் ஒரு முறையாவது உங்கள் சமையலறையில் செல்ஃப்களில் புதிய பேப்பரை மாற்றி போட வேண்டும். செல்ஃப்களில் பேப்பர் போடும் முன்பு ஆங்காங்கே சிறிதளவு மூக்கு பொடியை தூவி விட்டு, அதன் மேலே புதிய பேப்பரை விரித்து பொருட்களை அடுக்கி வைக்கலாம். இதனால் பொருட்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாது பாதுகாக்கலாம். எறும்பு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

இதையும் படிக்கலாமே:
இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா இனி நீங்க வாங்கும் மளிகை பொருட்கள் ஒரு வருடம் ஆனால் கூட கெட்டுப் போகாம பாத்துக்கலாம்.

இதை விடுத்து எறும்பு சாக் ஆங்காங்கே போட்டு வைப்பதால், அதில் கை வைக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து வரலாம். புதிதாக வீடு குடியேறி செல்பவர்கள், வாடகை வீட்டுக்கு மாறுபவர்கள் பரண் மீது சிறிதளவு மூக்கு பொடியை தூவி விட்டு பின்பு பொருட்களை அடுக்குங்கள். இதனால் பல்லி, எறும்புகள், எலி தொந்தரவு கூட இருக்காது. இரவு பாத்திரம் கழுவி முடித்ததும் அடியில் தண்ணீர் செல்லும் குழாய் பக்கத்தில் மூக்கு பொடியை தூவி விடுங்கள், கரப்பான் பிரச்சனை ஒழியும். அல் இன் ஒன் போல செயல்படும் இந்த மூக்கு பொடியை மூக்கில் மட்டும் போடாதீர்கள்.

- Advertisement -