இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சிருச்சுன்னா இனி நீங்க வாங்கும் மளிகை பொருட்கள் ஒரு வருடம் ஆனால் கூட கெட்டுப் போகாம பாத்துக்கலாம்.

kitchen lemon
- Advertisement -

வீட்டு வேலைகளை நாளெல்லாம் செய்தால் கூட அது போய்க் கொண்டே தான் இருக்கும் நம்முடைய அதிகப்படியான நேரத்தை கிச்சன் வேளையிலே செலவழித்து விடுவோம். இந்த வீட்டுக் குறிப்பில் உள்ள சின்ன சின்ன குறிப்புகள் உங்களின் அதிகபட்ச வேலை நேரத்தை குறைக்க உதவியாக இருக்கும். அது எந்த மாதிரியான குறிப்புகள் என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

சமைக்கும் போது சமைக்க பயன்படுத்தும் குழம்பு கரண்டி, சாதக் கரண்டிகளை அப்படியே அடுப்பின் மீதும் அடுப்பின் மேடை மீதும் வைத்து விடுவோம். இதனால் கிச்சன் அழுக்காவதுடன், பூச்சிகள் அதிகம் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இனி சமைக்கும் போது சமையல் மேடையில் ஒரு சின்ன தட்டை வைத்துக் கொண்டு கரண்டிகளை அதில் வைத்து எடுத்து பழகுங்கள். இதனால் வேலையும் மிச்சமாகும் அடிக்கடி ஸ்டவ் துடைக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதே நேரத்தில் பூச்சிகளும் வராது.

- Advertisement -

சமையல் கட்டில் அதிகம் குப்பையாக கூடிய விஷயம். நாம் காய்கறி, வெங்காயம், தக்காளி போன்றவற்றை நறுக்கும் போது ஆகும் கிச்சன் வேஸ்ட் தான். இந்த வேலையை தொடங்கும் பொழுது ஒரு பிளாஸ்டிக் பேப்பர், அல்லது பிளாஸ்டிக் டப்பா, என ஏதாவது ஒன்றில் இதையெல்லாம் போட்டு விட்டு முடிந்த பிறகு அதை அப்படியே கொண்டு டஸ்பினில் போட்டு விட்டால் சுத்தம் செய்யும் வேலை குறைந்து விடும்.

அனைவருக்கும் உள்ள மிகப் பெரிய கவலை எண்ணெய் பாட்டில் வைக்கும்  இடத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகள். இதற்கு எண்ணெய் பாட்டில் மூடும் இடத்திற்கு அருகில் ஒரு டிஷ்யூ பேப்பரை சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு விடுங்கள். அதே போல் அடிப்புரத்தில் வீட்டில் இருக்கும் பழைய சாக்கை போட்டு வைத்து விடுங்கள். இந்த முறையில் கண்ணாடி சில்வர் பாட்டிலை பயன்படுத்தும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் பாட்டில் எடுக்கும் போது கை வழிக்கி கீழே விழாது. சமையல் மேடையில் ஒரு சொட்டு எண்ணெய் கூட வடிந்து கிச்சன் மேடை அழுக்காது.

- Advertisement -

வீட்டில் பருப்பு மளிகை சாமான்களை போட்டு வைக்கும் டப்பாக்களை அடிக்கடி துடைத்துக் கொண்டு இருக்க முடியாது. அதற்கு ஒரு பாட்டிலில் கொஞ்சம் ஷாம்பு தண்ணீர் கலந்து அதை ஒரு டிஷ்யூ பேப்பரிலோ அல்லது காட்டன் துணியிலோ ஸ்பிரே செய்து அதை வைத்து பாட்டில்களின் மேலே எல்லாம் துடைத்து விட்டால் இந்த வாடைக்கு பூச்சும் வராது. அதே நேரத்தில் நம் கைபட்டு பாட்டிலில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு கறையும் போய் விடும். இந்த பொருட்களை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தால் கூட போதும். இந்த ஷாம்பு வாடைக்கு பூச்சிகளும் வராது, பொருட்களும் எத்தனை நாள் ஆனாலும் கெட்டு போகாது.

அதைப் போல் கிச்சனில் பயன்படுத்தும் கைப்பிடி துணி எப்போதும் அழுக்காகவே எண்ணெய் பிசுக்கு வாடையுடன் இருக்கும். அதை எப்படி துவைத்தாலும் இந்த வாடை போகாது. அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் எந்த டிடர்ஜென்ட் ஆக இருந்தாலும் கொஞ்சம் சேர்த்த பிறகு அதில் அரை எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து விடுங்கள். அதன் பிறகு இந்த துணிகளை அதில் ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து லேசாக கை வைத்து கசக்கிய பிறகு வெயிலில் உலர்த்தி விடுங்கள். எப்பொழுதும் இந்த கிச்சன் துணிகள் புதிது போல இருக்கும்.

- Advertisement -

நிறைய பேருக்கு கிச்சனில் பாத்திரங்கள் மொத்தமாக சேர்ந்த பிறகு தேய்க்கும் பழக்கம் உண்டு. ஆனால் சமைக்கும் போது அழுக்காகும் ஒன்று இரண்டு பாத்திரங்களை அப்படியே சுத்தம் செய்து வைத்து விட்டால் பாத்திரம் தேய்ப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அப்படி தேய்த்த பாத்திரங்களை உடனே ஒரு துணி வைத்து துடைத்து வைத்து விட்டால் இன்னமும் சுத்தமாக இருக்கும்.

அதே போல் சமைத்து முடித்த பிறகு பாத்திரங்களை தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள். சில வீடுகளில் பாத்திரங்கள் தேய்க்க வேலை ஆட்கள் இருப்பார்கள். இந்த வேலை நாம் செய்தாலும் சரி அவர்கள் செய்தாலும் சரி தேய்க்கும் போது அதிக சிரமம் இல்லாமல் வேலை இன்னும் சுலபமாக முடியும்.

இதையும் படிக்கலாமே: இனிமே நீங்க வாரம் முழுவதும் அசைவம் சமைச்சாலும் கொஞ்சம் கூட அதன் வாடையே வராது. நீங்களே அசைவம் சமைச்சேன்னு சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க. வீடு அவ்வளவு நறுமணமா இருக்கும். இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்.

அதே போல் இப்பொழுதெல்லாம் எல்லோர் வீட்டிலும் டஸ்பின் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. டஸ்பின் பயன்படுத்தும் போது அதில் கவர் போட்டு பயன்படுத்தினால் குப்பைகளை அப்படியே கொட்டாமல் நமக்கும் சிரமம் குறையும்.  குப்பைகளை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கும் சுத்தம் செய்ய சுலபமாக இருக்கும். இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -