- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரி தொந்தரவிலிருந்து விடுபட சின்னம்

எதிரி தொந்தரவிலிருந்து விடுபட சின்னம்

- Advertisement -

எதிரிகளை சமாளித்து, போராடி வாழ்வதற்கே வாழ்க்கையில் ஒரு பாதி நேரம் கழிந்து விடுகிறது. வேலையில் எதிரி, தொழில் செய்யும் இடத்தில் எதிரி, வீட்டில் அக்கம் பக்கம் இருப்பவர்களின் தொந்தரவு, இப்படி நான்கு பக்கத்தில் இருந்தும் பிரச்சனைகள் நம்மை சூழ்கிறது. இதில் சில பேரை சமாளித்து விடலாம். சில பேரை சமாளிக்கவே முடியாது. சில பேர் நம்மை குறை கூறி கொண்டே இருப்பார்கள். நம்மை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள்.

நாம் முன்னேறினால் அவர்களுக்கு பிடிக்காது. சில பேர் நமக்கு கஷ்டம் இருக்கும்போது நம்மோடு சகஜமாக பேசிப் பழகுவார்கள். ஆனால் நாம் கொஞ்சம் தலை தூக்கி, அவர்களை விட கொஞ்சம் உயர்ந்த நிலைக்கு சென்று விட்டால், நம் மீது அவர்களுக்கு பொறாமை வந்துவிடும். நம்முடனே இருந்து திடீரென்று, நம்மைவிட பெரிய ஆள் ஆகி விட்டான், என்ற எண்ணம் தோன்றி நம்மை எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.

- Advertisement -

இப்படிப்பட்டவர்களிடமிருந்து நீங்கள் ஒதுங்கி இருங்கள்.  இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து எல்லாம் வெளிவர சில சூட்சம வித்தைகளை இந்த காலத்தில் நாம் செய்துதான் ஆக வேண்டும். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்தவுடன், வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது, வேலைக்கு செல்லும் போது பள்ளிக்கூடம் காலேஜ் வியாபாரம் செய்றீங்க, கடைக்குப் போகும் போது, எங்க போனாலும் சரி குல தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, மகாலட்சுமியை மனதார வேண்டிக்கொண்டு, உங்களுடைய உள்ளங்கையில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும்.

ஒரு பேனாவில் வரைந்து கொள்ளலாம். தவறு கிடையாது. தினமும் இந்த சின்னம் உங்கள் உள்ளங்கைகளில் இருந்தால் எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வீர்கள். அதேபோல, வாரத்தில் ஒரு நாள் ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வார நாட்களில் இதை செய்ய முடியாது என்றாலும், ஞாயிற்றுக்கிழமையில் காலை எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு, கொஞ்சம் மஞ்சளை எடுத்து கரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த மஞ்சளை தொட்டு உங்களுடைய உள்ளங் கைகளில் இந்த சுவஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும். பூஜையறையில் குலதெய்வத்தை சூரிய பகவானை, மகாலட்சுமியை வேண்டி, உங்களுக்கு தொல்லை கொடுக்கும் எதிரிகள் உங்களை விட்டு விலக வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தால், உங்களுடனே இருந்து உங்களுக்கு பின்னால் குழி பறிக்கும் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள்.

இதையும் படிக்கலாமே: சனிக்கிழமை உச்சரிக்க வேண்டிய பெருமாள் மந்திரம்

அது மட்டுமல்லாமல் கண்ணுக்கு தெரிந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளும் உங்களை விட்டு விலகுவார்கள், உங்கள் முன்னேற்றத்தை தடையாக உங்களுடனே இருந்து வேலை செய்யும் எதிரிகள் விலகுவார்கள், நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த ஆன்மீகம் பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்