உங்களை ஏளனமாக எதிர்த்து எதிர்த்து பேசிய எதிரிகளை கூட எட்டாத தூரத்திற்கு துரத்தி அடிக்க, அவருடைய பெயரை ஒருமுறை இப்படி எழுதினால் போதும்.

- Advertisement -

கண்ணுக்குத் தெரிந்த எதிரி, கண்ணுக்கு தெரியாது எதிரி, நம் உடனே இருந்து நாம் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு எல்லாம் எதிர்த்து எதிர்த்து பேசக்கூடிய எதிரி, எதைச் செய்தாலும் குற்றம் குறை கண்டுபிடிக்க கூடிய அக்கம் பக்கம் வீட்டில் இருக்கும் எதிரி, கூட இருந்தே குழி தோண்டும் எதிரி, கண் முன்னே இருந்தும் கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருக்கக்கூடிய எதிரி, மேலதிகாரிகளாக உட்கார்ந்து ஆட்டிப்பதிர்க்கும் எதிரி, சொந்த பந்தங்களுடனே கலந்திருக்கும் எதிரி என்று இப்படி உங்களுக்கு எந்த வகையில் எதிகள் இருந்தாலும் அந்த எதிரியை உங்கள் பக்கம் வரவிடாமல் செய்ய, உங்களை பற்றி பேச விடாமல் செய்ய ஒரு சூப்பரான பரிகாரம் உள்ளது.

இவர்களை எனக்கு பிடிக்கல. அந்த நபர் என் பக்கம் தலை வைத்து கூட படுக்கக் கூடாது. என்னுடைய நல்லது கெட்டதில் அனாவசியமாக இவர் தலையிடக்கூடாது என்பவர்கள் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எதிரியின் உயிருக்கு பாதிப்பு வந்து விடுமோ என்றெல்லாம் நினைக்காதீங்க. யாரை நினைத்து நீங்கள் இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ அந்த நபர், உங்களைப் பற்றி சிந்திக்க மாட்டார். சரி, இவன் எப்படியோ போகட்டும் என்று உங்களை விட்டு, அவரே தூர விலகி சென்று விடுவார்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள். வேப்பெண்ணெய், பிறகு ஒரு அகல் விளக்கு அல்லது மெழுகுவத்தி ஏதாவது ஒன்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். (அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.) கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி, வரவேற்பறையில் இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி, தவறு கிடையாது.

வேப்பெண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரலால் அந்த வேப்பெண்ணெயை தொட்டு உங்களுடைய எதிரியின் பெயரை அந்த வெள்ளை காகிதத்தில் எழுதி குறிப்பிட்ட இந்த எதிரி, எண்ணெய் விட்டு தூர செல்ல வேண்டும். அந்த எதிரியின் தொல்லை நீங்க வேண்டும் என்று பேப்பரில் எழுத வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு ‘ரமேஷ் எதிரி தொல்லை நீங்க வேண்டும்’ இப்படி எழுதலாம். கண்ணுக்கே தெரியாத எதிரி பெயர் தெரியாத எதிரி என்றால், கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தொல்லை நீங்க வேண்டும் என்று அந்த பேப்பரில் எழுதிக் கூட அந்த பேப்பரை நான்காக மடித்து உங்களுடைய தலையை 9 முறை சுற்றி உங்கள் முன்னே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் அந்த பேப்பரை பொசுக்கி விடுங்கள். சாம்பலை தண்ணீரில் கரைத்து விடுங்கள் அவ்வளவுதான்.

தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய வாழ்க்கையில் தொல்லை கொடுத்து வரும் எதிரி உங்களை விட்டு தூர சென்று விடுவார். எதிரியின் மூலம் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரவே வராது. எதிரியாகவே இருந்தாலும் அந்த எதிரி அழிந்து போக வேண்டும் என்று என்றைக்குமே நாம் நினைக்கக் கூடாது. நமக்கு அந்த எதிரியால் தொல்லை வராமல் இருக்க வேண்டும் அதற்கு தான் வழிமுறைகளை தேட வேண்டும்.

எல்லாராலும் எல்லோருக்கும் நல்லவர்களாக இருக்க முடியாது அல்லவா. பூமியில் வாழக்கூடிய மனிதர்களுக்கு எதிரி தொல்லை இருப்பது என்பது இயல்புதான். ஆக எதிரியை அழிக்க வேண்டும் என்று நினைக்காதீங்க. வாழ்க்கையில் எதிரியே இல்லை என்றாலும் ஒரு சுவாரசியமும் இருக்காது. ரொம்பவும் பிரச்சனை கொடுக்கக்கூடிய எதிரியை இப்படி தள்ளி வைத்து விடுங்கள். மோதிப் பார்க்க முடிந்தால் நேரடியாக எதிரியோடு மோதிப் பார்த்து வெற்றியோ தோல்வியோ இறைவன் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -