எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்க

manjal kappu
- Advertisement -

படிப்பு, வேலை, தொழில், குடும்பம் என்று எந்த விஷயங்களில் நமக்கு முன்னேற்றம் ஏற்படுகிறதோ அந்த விஷயங்களில் நம்மை அறியாமலேயே நமக்கு எதிரிகள் தோன்றி விடுவார்கள். நமக்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தால் சில செயல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். அந்த செயல்களால் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் நம்மை அணுகாமல் இருப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய கடின உழைப்பினால் நம் வாழ்க்கையில் நாம் முன்னேறுவோம். அப்படி முன்னேறும் பொழுது இவ்வளவு விரைவில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை அடைந்து விட்டார்களா என்று நினைத்தால் கூட அதனால் நமக்கு பிரச்சனைகள் தடைகள் ஏற்படும். இதோட இல்லாமல் முன்னேற கூடாது என்பதற்காக நேர்முகமாகவும் அதே சமயம் மறைமுகமாகவும் சிலர் சில செயல்களில் ஈடுபடுவார்கள். அந்த செயல் எப்படிப்பட்ட செயலாக இருந்தாலும் அதனால் நமக்கு எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும் அந்த தடைகள் அனைத்தையும் நீக்குவதற்கு அம்மன் அருள் புரிவார்.

- Advertisement -

யாருடைய வாழ்க்கையில் யாருக்கு எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படுகிறது என்ற எண்ணம் தோன்றுகிறதோ அல்லது தங்களை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கிறது என்ற எண்ணம் வருகிறதோ அல்லது அவர்களின் முன்னேற்றத்தில் திடீரென்று தடைகளும் தடங்கல்களும் ஏற்படுகிறதோ அவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் தினமானது வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் அந்த தினத்தில் அவர்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் அந்த வெள்ளிக்கிழமை வளர்பிறை வெள்ளிக்கிழமையாக இருந்தால் அது மிகவும் விசேஷமாக இருக்கும்.

அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வெள்ளிக்கிழமை அன்று காலையில் அர்ச்சகர் இடம் கூறி அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்ய வேண்டும். பிறகு அம்மனிடம் மனதார தங்களுக்கு ஏற்பட்ட தடைகளையும் தடங்கல்களையும் கூறி அது நிவர்த்தி ஆக வேண்டும் என்று வழிபட வேண்டும். அன்று மாலை அதாவது மஞ்சள் காப்பை கலைக்கும் பொழுது மறுபடியும் ஆலயத்திற்கு சென்று கலைத்த அந்த மஞ்சள் காப்பை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும்.

- Advertisement -

வாங்கி வந்த மஞ்சள் காப்பை வெயிலில் நன்றாக காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த பொடியை வீட்டை சுற்றி தூவி விட வேண்டும். தொழில் செய்பவராக இருந்தால் அவர்கள் தொழில் செய்யும் இடத்தை சுற்றி தூவி விட வேண்டும். இவ்வாறு தூவுவதன் மூலம் அந்த மஞ்சள் காப்பானது எதிரிகளிடமிருந்து நம்மை காப்பாற்றும். அதுமட்டுமல்லாமல் தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு பூஜை செய்த பிறகு இந்த மஞ்சளை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் இந்த மஞ்சளானது பெரிய பாதுகாப்பை கொடுத்து எதிரிகளிடமிருந்து வரக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும் விரட்டி அடிக்கும் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை தீபத்தன்று கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்.

நம்மை பாதுகாக்கும் தெய்வமாக இருக்கக் கூடிய அம்பாளின் உடலில் சாற்றப்பட்ட மஞ்சள் காப்பு நம்மை பாதுகாக்கும் அறங்காவலாக விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -