கார்த்திகை தீபத்தன்று கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்.

shivan
- Advertisement -

கோவிலுக்கு வாங்கி கொடுக்க வேண்டிய அந்த இரண்டு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நம்முடைய புராணம் சொல்லும் ஒரு சின்ன கதையையும் இன்று பார்த்து விடுவோம். இது நமக்கு இந்த தீபத்திருநாளில் மனநிறைவை கொடுக்கக்கூடிய ஆன்மீகம் சார்ந்த கதை ஆக அமையும்.

ஒரு மகா பாவி, ரொம்ப ரொம்ப கெட்டவன். இந்த உலகத்தில் மனிதர்களாக பிறந்தவர்கள் செய்யவே கூடாத பாவத்தை எல்லாம் இவன் செய்து விட்டான். ஊரே இவனை தூற்றி பேசுகின்றது. தாய் தந்தையால் இவனை வீட்டில் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஊரில் இருப்பவர்கள் இவனை ஊரை விட்டு தள்ளி வைக்க முடிவு செய்துவிட்டார்கள். அவ்வளவு மகா பாவியான ஒருவன், ஊரிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றான்.

- Advertisement -

அதாவது இவன் ஊருக்குள் வரக்கூடாது என்று ஊர் பெரியவர்கள் சேர்ந்து முடிவு செய்து விட்டார்கள். இவனுக்கு சாப்பாடு தண்ணீர் எதுவுமே கொடுக்க கூடாது என்று அந்த ஊரின் பெரியவர்கள் தீர்மானித்து விட்டார்கள். ராஜாவின் கட்டளை என்று கூட வைத்துக் கொள்ளுங்களேன். அதை மீறி யாரும் அவனுக்கு உதவி செய்ய மாட்டார்கள்.

இப்படி தனியாக ஊரை விட்டு ஒதுக்கி விட்டவனுக்கு ஒரு நாள் சாப்பிடாமல் இருக்க முடியும். இரண்டு நாள் சாப்பிடாமல் இருக்க முடியும். மூன்றாவது நாள் முடியுமா? உயிர் வாழ சாப்பாடு முக்கியம் தானே. இவன் சாப்பாடு தேடி அலைகின்றான். அப்போது ஒரு சிவன் கோவிலில், சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

அந்த பூஜைக்கு நிவேதனத்தை எல்லாம் எம்பெருமானுக்கு படைத்துவிட்டு, பூஜையை முடித்துவிட்டு, பக்தர்கள் வெளியே இருக்கிறார்கள். அப்போதெல்லாம் இறைவனை நாம் தீப ஒளியில் தான் காண வேண்டும். மின்விளக்குகள் எல்லாம் கிடையாது. அப்போது இந்த கெட்டவன் திருட்டுத்தனமாக அந்த ஈசனின் ஆலயத்திற்குள் நுழைகின்றான்.

எம்பெருமானுக்கு நிவேதனங்களாக வைத்திருக்கும் பக்ஷணங்களை எல்லாம் எடுக்க செல்கிறான். அப்போது சிவபெருமானுக்கு பக்கத்தில் ஏற்றி வைத்திருக்கும் விளக்குத்திரி எரிந்து எரிந்து உள்ளே போகிறது. வெளிச்சம் குறைகிறது. முழு இருட்டாக மாறக்கூடிய சமயம். முழுசாக இருட்டாயிட்டா வெளிச்சம் இல்லை என்றால் அந்த பலகாரங்களை திருட முடியாது அல்லவா.

- Advertisement -

பலகாரங்களை திருட வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வேட்டியை எடுத்து அதை கிழித்து அந்த வேட்டியை திரியாக மாற்றி, அந்த எண்ணெயில் நனைத்து தீபத்தை ஏற்றி ஒளியை வரவைத்து விட்டு அந்த பட்சணங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடுகின்றான் அந்த கெட்டவன். அவன் சாமி கும்பிடவும் இல்லை. எம்பெருமாலை பார்க்கவும் இல்லை.

திருடன் ஓடுவதை மக்கள் பார்த்து விட்டார்கள். அவனை துன்புறுத்தி அடித்ததில் அவனுக்கு மரணமும் நேர்ந்தது. இவனுடைய ஆத்மா மேலோகத்தை அடைந்தது. இவன் செய்த பாவத்திற்கு இவன் நிச்சயம் நரகத்திற்கு தான் போக வேண்டும்‌. நரகத்திற்கு செல்லப் போகின்றான். ஆனால், அந்த சமயத்தில் சிவனின் பூதகணங்கள் வந்து இவனை சிவபெருமான் அழைப்பதாக கூறுகிறார்கள்.

இவனும் சிவலோகத்தை சென்றடைகின்றான். எம்பெருமானை பார்த்த அந்த கெட்டவன் கேட்கின்றான். ‘நான் செய்த தவறுக்கு எனக்கு நரகம் தான் கிடைக்கும் என்பது நன்றாக தெரியும். ஆனால் எனக்கு எப்படி சிவலோகத்தில் இடம் கிடைக்கும். நான் பாவி தானே. என்னைய் எதற்காக இங்கு அழைத்து வந்தார்கள்’ என்று.

அதற்கு எம்பெருமான் சொல்கின்றார். ‘நீ கெட்டவன் தான். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய ஆலயத்தில் அணைய இருந்த விளக்கை உன் துணியை கிழித்துப் போட்டு ஏற்றி, என்னுடைய ஆலயத்திற்கு வெளிச்சத்தை, பிரகாசத்தை கொடுத்ததால் உன்னுடைய பாவக் கணக்குகள் அழைக்கப்பட்டது. புண்ணிய கணக்குகள் கூடிவிட்டது. நீ இருக்க வேண்டிய இடம் நரகம் அல்ல’. சிவலோகம் தான் என்று, முத்தி கொடுத்து எம்பெருமான் அந்த கெட்டவனை சிவலோகத்திலேயே வைத்துக் கொண்டாராம்.

உங்களுக்கு புரிந்ததா. இது புராண கதையாகவே இருந்தாலும், இதில் மறைந்திருக்கும் உண்மை எக்கச்சக்கம். சிவாலயங்களுக்கு என்று மட்டும் கிடையாது. உங்கள் வீட்டில் அருகில் எந்த கோவில் இருந்தாலும் சரி, விஷ்ணு கோவில் இருந்தாலும், பிள்ளையார் கோவில் இருந்தாலும், அம்மன் கோவில் இருந்தாலும் சரி, அந்த கோவிலுக்கு திருக்கார்த்திகை தீபத்தன்று (26-11-2023) உங்கள் கையால் விளக்கு ஏற்றுவதற்கு உங்களால் முடிந்த நல்லெண்ணெயையும் விளக்கு திரியையும் வாங்கி கொடுங்க.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை தீபத்தன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம்

அது உங்களுடைய குடும்பத்திற்கு நல்ல பலனை கொடுக்கும். செய்த பாவங்களை தொலையும். நீங்கள் கொடுத்த எண்ணெய்யை ஊற்றி திரியை போட்டு அந்த கோவிலுக்கு வெளிச்சத்தை கொடுக்கும் சமயத்தில் உங்கள் குடும்பமே பிரகாசமாக ஜொலிக்கும் என்பதுதான் நம்பிக்கை. மேல் சொன்ன வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். ஓம் நமசிவாய.

- Advertisement -