உங்களுக்கு வேண்டாத எதிரிகள், உங்களை பற்றி வேண்டாத வதந்திகளை பேசிக்கொண்டே இருக்கிறார்களா? எதிரிகளின் வாயை மூட 1 வசம்பு போதுமே!

enemies-vasambu

நாம நல்லா இருந்தா சில பேருக்கு புடிக்கவே புடிக்காது! நாம் அவர்களுக்கு எவ்வளவுதான் நல்லது செய்தாலும் நம்மை பற்றி புறம் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். சில பேருக்கு இதே தான் வேலை. அப்படிப்பட்டவர்களின் பேச்சு சில சமயம் நம்மை தாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் நம்முடைய சொந்தக்காரர்களாகவும் இருக்கலாம். நமக்கு தெரிந்தவர்களாகவும் இருக்கலாம். நம்முடன் தொழில்செய்யும் பங்குதாரராகவும் இருக்கலாம். இல்லை உங்களுடைய எதிரியாகவும் கூட இருக்கலாம்.

chess-enemies

இப்படி உங்களை பற்றி புறம் பேசிக் கொண்டே இருக்கும் அந்த மனிதரின் வாயை அடைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? சிலபேர், சிலருடைய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சபித்துக் கொண்டும் இருப்பார்கள். இதற்கு என்ன செய்வது? நமக்கு தீமை நினைப்பவர்கள் பேசும் வார்த்தைகளையும் தடுத்து நிறுத்தவேண்டும். நமக்கு தீமை நினைப்பவர்களுக்கும், தீங்கு ஏற்படக்கூடாது. அப்படி ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரே ஒரு வசம்பு, ஒரே ஒரு மஞ்சள் இழைக்கின்ற கல் மட்டுமே போதும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். உங்களது குளியல் அறையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டியது மிக அவசியம். இரவு நேரம் 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் எப்போது வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

நீங்கள் வாங்கி வைத்திருக்கும் வசம்பை மஞ்சள் இழைக்கின்ற கல்லில், வட பக்கத்திலிருந்து இடப்பக்கமாக, 12 முறையும், இடது பக்கத்தில் இருந்து வட பக்கமாக 12 முறையும் நன்றாக இழைக்க வேண்டும். லேசாக தண்ணீர் விட்டு இழைக்க வேண்டும். இப்படி உங்களது கைகள் 12 முறை சுற்றும்போது, உங்களுக்கு பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கும் அந்த நபரின் பெயரை உச்சரித்துக் கொண்டு, ‘அவர் இனி உங்களைப்பற்றி தேவையில்லாத விஷயங்களைப் பேச கூடாது’ என்று மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நீங்கள் அந்தக் கல்லில், வசம்பினை  கொண்டு சுழற்றும் போது, சிறிதளவு வசம்பு, தேய்ந்து வந்திருக்கும். அந்த வசம்பை தண்ணீர் ஊற்றி, தண்ணீரில் கரைத்து கழுவி விடுங்கள். அதன் பின்பு உங்களது கை, கால், முகம் கழுவிக்கொண்டு சிறிதளவு தண்ணீரை எடுத்து உங்கள் தலையில் தெளித்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை ஒரே நாளில் செய்த உடனேயே பலனை எதிர்பார்க்க வேண்டாம். 48 நாட்கள் தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த நபர் உங்கள் பக்கம் கட்டாயம் வர மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் எந்தவிதமான மந்திர தந்திர வித்தைகளும் இல்லை. உங்களுக்கு தொல்லை கொடுக்கும் அந்த நபரின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் வராது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் சொல்லுவார்கள்! யாராவது ஒரு நபர், வாயை மூடாமல் பேசிக்கொண்டே இருந்தால் ‘அந்த வசம்பை எடுத்து, அவன் வாயில் திணி’ என்று! பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். அப்போது வசம்பை எடுத்து ஒருவர் வாயில் வைத்தால் அவன் வாயை மூடிக் கொள்வான். அதாவது அதனுடைய கசப்புத்தன்மை தாங்காமல் அவனால் பேச முடியாமல் போய்விடும். இந்த சூத்திரம் தான் இங்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே தவிர, இதில் பயப்படுவதற்கு எதுவுமில்லை.

இறுதியாக ஒரு விஷயத்தை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். இந்த வசம்பை வைத்து தேய்க்கும் பொழுது, உங்கள் எதிரிகளை பற்றி தவறாக எதுவும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அதாவது, அவர்கள் ‘உங்களைப் பற்றிய பேச்சு மட்டும்தான் பேசக்கூடாது’ என்று நினைக்க வேண்டுமே தவிர, அந்த எதிரி ‘அப்படிப் போக வேண்டும்! இப்படி போக வேண்டும்’ என்று தவறாக நினைத்துக் கொண்டெல்லாம், இந்த வசம்பை பயன்படுத்தக் கூடாது. அப்படி கெட்ட எண்ணத்தோடு ஏதேனும் செய்தால், அந்த எண்ணம் உங்களையே தாக்கிவிடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கெட்ட எண்ணம் கூடாது! கெட்ட எண்ணம் கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் தொழில், வியாபாரம் வளரவில்லையா? அப்போ நீங்க இந்த 7 வழிகளை பின்பற்றவில்லை என்று தான் அர்த்தம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ethirigal thollai neenga Tamil. Ethirigal vilaga Tamil. Ethirigal azhiya Tamil. Ethirigal oliya Tamil.

நின்றி – தாந்த்ரீக ஜோதிடர் ஸ்ரீகுரு. வாமனன் சேஷாத்ரி (9840130156)