எதிரிகள் விலகி ஓட பைரவர் வழிபாடு.

bhairavar sangu
- Advertisement -

நம் முன்னேற்றத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்களை செய்பவர்களை நாம் எதிரிகள் என்று கூறுவோம். அந்த எதிரிகள் நம் கண்ணிற்கு தெரிந்தவர்களாகவும் இருக்கலாம். தெரியாதவர்களாகவும் இருக்கலாம். நம் முன்னேற்றத்தை தடுப்பதற்காக எந்த செயல்களில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். அப்படிப்பட்ட எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பதற்கு கால பைரவர் உதவி புரிகிறார். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எதிரிகள் நம்மை விட்டு விலகவும், அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கவும் காலபைரவரை வலம்புரி சங்கை வைத்து எப்படி வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

சிவபெருமானின் அவதாரமாக திகழக் கூடியவர் தான் கால பைரவர். அதே சமயம் அவர் காக்கும் கடவுளாக திகழ்கிறார். மேலும் தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குகிறார். சிவாலயங்களில் கண்டிப்பான முறையில் காலபைரவருக்கு என்று ஒரு சந்நிதி இருக்கும். சிவன் கோவில் நடை சாத்திய பிறகு கோவிலின் சாவியை கால பைரவர் இடம் ஒப்படைத்துவிட்டு தான் அன்றைய காலத்தில் வீட்டிற்கு சென்றார்களாம்.

- Advertisement -

தவறான எண்ணத்துடன் சாவியை நெருங்கும் நபர்களை காலபைரவர் தண்டித்து விடுவார். இன்றளவும் சில கோவில்களில் அவர் முன்பு சாவியை சிறிது நேரம் வைத்து விட்டு தான் எடுத்துச் செல்கிறார்கள். நம்முடைய கஷ்டங்கள் தீரவும், செல்வ செழிப்பு ஏற்படவும் அவரை வழிபடுவோம். அதோடு எதிரிகள் நம்மை விட்டு விலகி ஓடவும் காலபைரவர் உதவுகிறார்.

இந்த காலபைரவர் வழிபாட்டை நாம் தேய்பிறை அஷ்டமி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வரும் ராகு காலத்தில் மேற்கொள்ளலாம். முடிந்த அளவிற்கு தேய்பிறை அஷ்டமியில் செய்வது சிறப்பு அதிலும் குறிப்பாக புதன்கிழமையில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி ஆக இருந்தால் அது மேலும் சிறப்பு மிகுந்ததாக இருக்கும். நம்முடைய உள்ளங்கை அளவில் இருக்கக்கூடிய ஒரு வலம்புரி சங்கை வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

காலபைரவரின் சன்னதிக்கு சென்று அங்கு கால பைரவருக்கு தீபம் ஏற்றிய பிறகு ஒரு எலுமிச்சம் கனியை அவருடைய பாதத்தில் வைத்து விட வேண்டும். சிறிது உதிரியான செவ்வரளி பூக்களை காலபைரவருக்கு முன்பாக பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கையில் வலம்புரி சங்கை வைத்துக் கொண்டு மற்றொரு கையில் வலம்புரி சங்கில் கல் உப்பை போட்டு நிரப்ப வேண்டும். அதற்கு மேல் 48 மிளகை போட வேண்டும்.

பிறகு இரண்டு கைகளிலும் அந்த வலம்புரி சங்கை வைத்துக்கொண்டு காலபைரவரை பார்த்து நமக்கு எதிரியாக யார் இருக்கிறார்களோ நமக்கு எதிராக என்ன வேலை செய்கிறார்களோ அதை கூறி மனதார வழிபட வேண்டும். வழிபட்ட பிறகு நாம் பரப்பி வைத்திருக்கும் செவ்வரளி பூக்களுக்கு மேல் அந்த வலம்புரி சங்கை வைத்துவிட்டு காலபைரவரின் பாதத்தில் வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வர வேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு இந்த எலுமிச்சம் பழத்தை நம் வீட்டின் நிலை வாசலில் கட்டிவிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வளமான வாழ்க்கை அருளும் துர்க்கை அம்மன் வழிபாடு.

இவ்வாறு செய்வதன் மூலம் நம் எதிரிகள் விலகி ஓடுவார்கள் மேலும் எலுமிச்சம் பழத்தின் அருளால் வீட்டில் இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை சக்திகளும் வீட்டை விட்டு விலகி ஓடும்.

- Advertisement -