வளமான வாழ்க்கை அருளும் துர்க்கை அம்மன் வழிபாடு.

durgai valipadu
- Advertisement -

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த கிழமையாக சில கிழமைகள் திகழும். அந்த கிழமையில் அந்த தெய்வத்தை சென்று நாம் வழிபடும் பொழுது நமக்கு அளவில்லா நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையே. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் துர்க்கை அம்மனை எந்த நாளில் எப்படி வழிபட்டால் வளமான வாழ்க்கையை பெற முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பெண் தெய்வங்களில் முக்கியமான தெய்வமாக கருதப்படுபவர் துர்க்கை அம்மன். பொதுவாக துர்க்கை அம்மன் என்றதும் ராகு காலம் தான் நம் நினைவிற்கு வரும். ராகுவால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு துர்க்கை அம்மன் அருள் புரிவார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. மேலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மன் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி பெண்கள் வழிபடுவார்கள்.

- Advertisement -

அன்றைய தினம் மட்டும்தான் சிறப்பு என்று இல்லை தினமும் வரக்கூடிய ராகு காலம் துர்க்கை அம்மனுக்கு சிறப்பான காலமாக திகழ்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட்டால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு வழிபடும் பொழுது அகல்விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

வெளிநாடு தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு திங்கட்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். அதாவது ஒரு சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இன்னும் சிலரோ வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் திங்கட்கிழமை அன்று ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு வெண்ணை சாற்றி வெண்பொங்கலை நெய்வேத்தியமாக படைத்து வழிபட்டு வர வேண்டும் இவ்வாறு வழிப்படுவதன் மூலம் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களும் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மாங்கல்ய தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் செவ்வாய்க்கிழமை வரும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் தீபம் ஏற்றும் பொழுது தீபம் வடக்கு திசை நோக்கி இருப்பது போல் இருக்க வேண்டும். நெய்வேத்தியமாக தக்காளி சாதத்தை படைக்கலாம். பதவி உயர்வு பெற விரும்புவோர் புதன்கிழமை அன்று வரக்கூடிய ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் ரத்த சம்பந்தமான நோய்களும் நிபர்த்தியாகும்.

தொழில் செய்பவர்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதற்கு வியாழக்கிழமை வரும் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் எலுமிச்சை சாதத்தை நெய்வேத்தியமாக படிக்க வேண்டும். இவ்வாறு வழிப்படுவதன் மூலம் இதய நோயில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

எதிரிகளின் தொல்லை நீங்கவும், மாங்கல்ய பலம் பெறவும், தீராத துன்பம் தீரவும் வெள்ளிக்கிழமை வரக்கூடிய ராகு காலத்தில் எலுமிச்சம் பழ தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் தேங்காய் சாதம் அல்லது பால் பாயாசம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம். நல்ல வேலை கிடைப்பதற்கும், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கவும் சனிக்கிழமை அன்று வரக்கூடிய ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் நிறத் திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் அரசியலில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். கலவை சாதம் என்று சொல்லக்கூடிய அனைத்து காய்கறிகளையும் போட்டு செய்யப்படும் சாதத்தை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

இதையும் படைக்கலாமே: தொட்ட காரியம் எல்லாம் வெற்றி அடைய பரிகாரம்.

துர்க்கை அம்மனை வழிபடுவதற்கு முன்பாக எந்த நாட்களில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்துகொண்டு நம்முடைய தேவைக்கேற்றவாறு துர்க்கை அம்மனை வழிபட்டு வளமான வாழ்க்கையை பெறுவோம்.

- Advertisement -