சில சமயம் சில இடங்களுக்கு சென்று, சில மனிதர்களை சந்திப்பதற்கு முன்பு, நமக்கு பல யோசனைகள் மண்டைக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். ‘இவனை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. இன்றைக்கு இவனிடம் பேசி தான் ஆக வேண்டும். இவனுடைய பிரச்சனை பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
இந்த ஒரு எதிரியை சமாளிப்பதற்குள்ளையே எனக்கு வயதாகி விடும் போல. இவனை நம்மிடம் சரண்டர் ஆக்க ஏதாவது பரிகாரம் இருக்கிறதா’ என்று தேடுபவர்களுக்காக இந்த பதிவு. நிஜமாகவே உங்களுடைய எதிரி ரொம்ப பொல்லாதவன். உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறான் என்றால் அவனை வீழ்த்த இந்த பரிகாரத்தை செய்யுங்கள் போதும்.
எதிரியை வீழ்த்த பரிகாரம்
முதலில் எந்த பிரச்சனையில் நாம் ஜெயிக்க வேண்டும் என்றாலும் நாம் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் பிள்ளையார். ஒரு வெற்றிலையில் எதிரியை வெல்ல வேண்டும் என்று எழுதிக் கொள்ளுங்கள். அந்த வெற்றிலையை சுருட்டி பிள்ளையாரின் பாதத்தில் வைத்து விட்டு செல்ல வேண்டும். எந்த பிள்ளையார் பாதத்தில் வைப்பது. வீட்டு பக்கத்தில் அரச மரத்தடி பிள்ளையாக இருந்தால் அவர் பாதத்தில் வைக்கலாம். சில கோவில்களில் வாசலிலேயே பிள்ளையார் இருப்பார்.
பிள்ளையாரை தரிசனம் செய்துவிட்டு தான் கோவிலுக்குள் செல்ல முடியும் அல்லவா. அந்தப் பிள்ளையார் திறந்த நிலையில்தான் இருப்பார். அந்தப் பிள்ளையாரின் பாதங்களில் பூ வைப்பது போல இந்த வெற்றிலையையும் வைத்து விடவும். எதுவுமே முடியாது என்றால் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பிள்ளையாரின் பாதத்தில் இந்த வெற்றிலையை வையுங்கள்.
இப்படி செய்தால் உங்களுடைய எதிரியை வெல்லக்கூடிய சக்தியை கடவுள் உங்களுக்கு கொடுப்பான். உங்களுடைய எதிரியும் உங்களை வெல்ல வேண்டும் என்று நினைப்பான் அல்லவா. ஆகவே நியாயம் உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் இதை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். பார்த்துக்கோங்க.
அடுத்தபடியாக எதிரியைப் பார்க்க செல்வதற்கு முன்பாக ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொண்டு ‘எதிரியை நான் வெல்ல வேண்டும்’ என்று முழு மனதோடு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இந்த எலுமிச்சம் பழத்தை கையோடு எடுத்து வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டும்.
எதிரியை பார்க்க செல்லும் போது, வழியில் வீதியில் இந்த எலுமிச்சம் பழத்தை தரையில் வைத்து இடது காலில் நசுக்கி மிதித்து விட்டு, எதிரியை பார்க்கச் சென்றால் எதிரியை நீங்கள் வென்று விடலாம். எதிரியோடு சண்டை போடக்கூடிய சூழ்நிலை இருந்தாலும் சரி, ஏதாவது பஞ்சாயத்துக்கு போறீங்க, தகராறு போறீங்க என்றாலும் சரி இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். எதிரி உங்களிடம் தானாக சரண்டர் ஆகி விடுவான்.
இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம்
இதுவே ஒரு நல்ல காரியத்துக்கு போறீங்க. உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும். காரிய தலைவரக்கூடாது என்றால், இதே எலுமிச்சம் பழத்தை வலது காலில் மிதிக்க வேண்டும். உதாரணத்திற்கு நல்ல வேலைக்கு இன்டர்வியூக்கு போறீங்க, திருமணத்திற்கு பெண் பார்க்க போறீங்க, ஸ்கூல் அட்மிஷனுக்கு சீட்டு கிடைக்க வேண்டும் என்று போறீங்க, காண்ட்ராக்ட் ஒப்பந்தம் உங்கள் பக்கம் கையெழுத்தாக வேண்டும் என்று போறீங்க, இப்படி நல்ல காரியங்கள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்றால் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொண்டு, எனக்கு காரியதடை வரக்கூடாது என்று நன்றாக பிரார்த்தனை செய்து கொண்டு அந்த எலுமிச்சம் பழத்தை வலது காலில் மிதித்து விட்டு செல்லவும். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.