எப்பேர்ப்பட்ட எதிர்மறை ஆற்றலும் உங்களை நெருங்காமல் இருக்க வீட்டின் நிலைவாசலில் இந்த ஒரு தீபத்தை மட்டும் ஏற்றினால் போதும். இனி கெட்ட எண்ணத்துடன் கூட யாரும் உங்களை நெருங்க முடியாது.

vasal
- Advertisement -

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கத் தான் செய்கிறது. அவை மனிதனுக்கு நல்லது செய்தால் அதை நல்ல சக்தி என்றும், கெடுதல் செய்தால் தீய சக்தி என்றும் சொல்கிறோம். ஒரு மனிதன் முன்னேறக் கூடாது என்றும், அவன் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்றும் மற்றொரு மனிதனால் செய்யக் கூடிய செயல்களையே நாம் எதிர்மறை ஆற்றல் என்கிறோம். கெடுதலை செய்யக்கூடிய துர்சக்திகள் நம் வீட்டில் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்வதற்கு நம் அன்றாட வாழ்வில் சாதாரணமாக நிகழக்கூடிய சில செயல்கள் இருக்கின்றன. அந்த செயல்கள் என்னவென்றும், அவ்வாறு இருப்பின் அதை சரி செய்யும் முறைகள் என்ன என்றும் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் பார்ப்போம்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு திசை நடந்தாலோ அல்லது ராகுவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலோ அவருக்கு மிகவும் எளிதில் தீய சக்திகளால் பாதிப்பு ஏற்படும். மேலும் வீட்டின் வடகிழக்கு மூலையில் விரிசல்கள் இருந்தால் அதுவும் ஒரு அறிகுறி தான். இது மட்டும் இல்லாமல் வீட்டு சுவரில் கிறுக்கல்கள் இருப்பதும் ஒரு அறிகுறி தான். கண்ணாடியோ அல்லது பிற பொருட்களோ வீட்டில் அடிக்கடி உடைகிறது என்றாலும் அல்லது மின் சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைகிறது என்றாலும் தீய சக்தியின் தாக்கம் இருப்பதாக அர்த்தம். வீட்டில் யாராவது அடிக்கடி வழுக்கி விழுந்து அடிபடுவதும் ஒரு அறிகுறி தான். மேலும் வீட்டை என்னதான் சுத்தம் செய்தாலும், அது சிறிது நேரத்திலேயே அசுத்தம் அடைகிறது என்றாலும், வீட்டிற்குள் வவ்வால் வந்தாலும் தீய சக்திகள் இருப்பதாக அர்த்தம்.

- Advertisement -

தீய சக்தி நம்மை பாதிக்காமல் இருக்க
வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டிற்கு வண்ணம் பூச வேண்டும். அதனால் தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு பொங்கலுக்கும் வீட்டை சுத்தம் செய்து வண்ணம் தீட்டுவார்கள். அவ்வாறு வண்ணம் பூசும் பொழுது மஞ்சள் நிறத்தை உபயோகப்படுத்தினால், அது வீட்டிற்குள் எந்தவித தீய சக்தியையும் விடாது. ஏனென்றால் மஞ்சள் நிறம் குரு பகவானுக்குரிய நிறமாக இருப்பதே காரணம். நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், அந்த தெய்வத்தை முழு மனதோடு வணங்க வேண்டும். மேலும் அந்த தெய்வத்திற்குரிய சின்னங்களை நம் வீட்டின் நிலை வாசலில் வரைந்து அதற்கும் பூஜைகள் செய்ய வேண்டும்.

தினமும் வீட்டில் காலையும் மாலையும் நெய் தீபம் ஏற்றி, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் தீய சக்திகள் அணுகாது. மேலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை கோவிலுக்கு சென்று வாங்கி வந்து, வீட்டில் அவ்வப்போது தெளித்தாலும் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் வெளியேறும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமைகளில் கோமியத்தை வீட்டில் தெளித்தாலும் தீய சக்திகள் வெளியேறி மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெண் கடுகை உபயோகப்படுத்தி சாம்பிராணி தூபம் காட்டுவதால் கெட்ட சக்திகள் வீட்டிலிருந்து வெளியேறும்.

இதையும் படிக்கலாமே: எதிர்பாராத தீடீர் அதிர்ஷ்டங்கள் வந்து எட்டு திக்கிலும் இருந்து வற்றாத பண வரவு வர தினமும் இந்த இரண்டு மந்திரத்தை மட்டும் ஜெபித்து வாருங்கள்.
தீய சக்திகளின் பாதிப்பில் இருந்து மீள பரிகாரம்:
வீட்டின் தலைவாசலுக்கு முன்பாக அதாவது வீட்டிற்கு வெளியில் ஒரு அகல் விளக்கில் வேப்ப எண்ணையை ஊற்றி அதில் மஞ்சள் வண்ண திரியை போட்டு (வெள்ளைத்திரியை மஞ்சளில் நனைத்து காய வைத்து எடுக்க வேண்டும்) விளக்கேற்ற வேண்டும். இந்த விளக்கை நாம் பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று மட்டுமே ஏற்ற வேண்டும்.

மேலும் இந்த விளக்கை காலையில் ஏற்றலாம் அல்லது மாலையில் ஏற்றலாம் முடிந்தால் இரண்டு வேலையும் ஏற்றலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் அகன்று நல்ல சக்திகள் ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக நீங்கி நமக்கு நன்மைகள் நடை பெறும்.

- Advertisement -