எதிர்மறை சக்திகள் விலக, மனக்குழப்பம் தீர 1 பக்கெட் தண்ணீரும் 1 கைப்பிடி கல் உப்பும் இருந்தால் போதுமே!

salt-water-lakshmi

ஒரு சில சமயங்களில் மனம் விரக்தியை ஆட்கொள்ளும். ச்சே! என்னடா இது வாழ்க்கை! என்கிற ஒரு உணர்வு தோன்றும். நாம் செய்வது சரியா? தவறா? என்று நமக்கு தெரியவே செய்யாது. மனதில் ஒருவிதமான பயம் குடிகொண்டு இருக்கும். அதுபோல் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளும் நம்மை சரியாக சிந்திக்க விடாது தடுக்கும். இது போன்ற சமயங்களில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் ஒன்று உள்ளது. அதை மட்டும் செய்தால் உங்களுடைய பாதம் வழியாக அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேறிவிடும். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sad

நீங்கள் ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க விரும்பும் பொழுது உங்களுடைய புத்தி சரியாக இதை செய்! இதை செய்யாதே! என்று கூறிவிடும். ஆனால் மனமோ! அதனை ஏற்க மறுத்து விடும். இது போன்ற தவிப்பான சூழ்நிலையில் மற்றவர்களிடம் நம்மால் முகம் கொடுத்து பேச கூட முடியாது. எதற்கெடுத்தாலும் கோபம், எதற்கெடுத்தாலும் வெறுப்பு என்று நம்மை நாமே இழந்து காணப்படுவோம். உங்களுடைய உள்மனம் சொல்வதை கேளுங்கள். உள்மனம் உங்களுக்கு ஆணி அடித்தது போல் உரக்க கூறி சரியான தீர்வைக் கொடுக்கும். ஆனால் மனமோ தடைபோடும், குழப்பம் அடைய செய்யும். எப்பொழுதும் மனம், புத்தி இரண்டுமே போராடும் பொழுது மனமே ஜெயிக்கும். ஆனால் புத்தி ஜெயிக்கும் பொழுது நாமும் ஜெய்க்கிறோம் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும், கெட்ட சக்திகளும் நம்மை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதை தடை செய்கிறது. இது போன்ற சூழ்நிலையில் இந்த எளிய பரிகாரத்தை நீங்கள் செய்து பார்த்தால் நல்ல ஒரு பலன் கிடைக்கும். மனதிற்கும், உடம்பிற்கும் ஓய்வு கொடுக்க கூடிய வகையில் பரிகாரம் அமையும்.

salt-water-bath

ஒரு பக்கெட் நிறைய சூடு பொறுக்கும் அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு கரைந்ததும் கால்களை தண்ணீரில் மூழ்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்படியாக தண்ணீர் சூடு குறைவதற்குள் உங்கள் பாதம், விரல்கள், நகங்கள் என்று அனைத்தையும் நன்கு கைகளை கொண்டு கழுவி விடுங்கள். பின்னர் அப்படியே சில நிமிடங்கள் அமைதியாக கண்களை மூடி உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்கள் தண்ணீருக்குள்ளேயே இருக்கட்டும். 15 நிமிடம் கழித்து, இரண்டு கால்களும் நன்கு ஒன்றோடு ஒன்றாக உரசி தேய்த்துக் கொள்ளுங்கள். பின்னர் கண்களை திறந்து பார்த்தால் தண்ணீரின் நிறம் ஒருவித துர்நாற்றத்துடன் கருப்பாக மாறி இருந்தால் உங்களிடம் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி இருப்பதாக அர்த்தம் ஆகிறது.

உங்களிடம் எதிர்மறை ஆற்றல்களும், கெட்ட சக்திகளும் இருக்கும் பொழுது நிச்சயமாக தண்ணீரினுடைய நிறம் மாறி இருக்கும். நீங்கள் கால்களை இப்படி செய்வதற்கு முன்பே நன்கு கழுவிவிட்டு கூட செய்யுங்கள். இப்படி செய்த பின்னர் உங்களுக்கு ஒருவிதமான சோர்வு உண்டாகும். ஆனால் விரைவில் அதிலிருந்து மீண்டு புதுவிதமான புத்துணர்வுடன். பொலிவாக காணப்படுவீர்கள்.

salt-water

உங்கள் மனமும், உடலும் தோல்வியில் இருந்து மீண்டு உற்சாகத்துடன் இருக்கும். எதையும் தெளிவாக யோசிக்கக் கூடிய அறிவாற்றல், எனர்ஜி கிடைக்கும். அது போல கல் உப்பு சேர்த்த தண்ணீரை கொண்டு வீடு முழுவதும் துடைத்தால் வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வுகள் அனைத்தும் வெளியேறிவிடும். அறிவியல் ரீதியாக வீட்டின் தரையில் இருக்கும் கிருமிகளும் அகன்று ஆரோக்கியம் பேண வழிவகுக்கும். இவற்றை முயற்சி செய்து நீங்களும் பயனடையலாமே.