உங்களது வீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை அறிந்துகொள்ள 1 தேங்காய் போதும்.

Theeya sakthi arikuri

நம்முடைய வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றால் அதனைத் தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் பிரச்சினைகள் அனைத்தும் பெரிதாகாமல் சரியாக, இறைவனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இயற்கையாக எல்லோரும் செய்யும் ஒரு விஷயம் தான் இது. இதை தவிர்த்து தீர்க்கமுடியாத கஷ்டங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்றால், நாம் விஷயம் தெரிந்த சில மனிதர்களை நாடி தான் ஆகவேண்டும். அவர்கள் கூறும் பரிகாரங்களை செய்து பலனளிக்காமல், வீட்டில் சதாகாலமும் பிரச்சனை, சதாகாலமும் சண்டை, இருக்கிறது என்றால், அதற்கு நம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் தான் காரணம். முதலில் நம் வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்பு அதை சரி செய்ய சுலபமான பரிகாரத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் நாம் செய்யப்படும் பரிகாரத்தின் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட இரண்டு விஷயங்களைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

family fight

முதலில் வீட்டில் கெட்ட சக்தி இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க காலைவேளையில் ஒரு நல்ல தேங்காயை எடுத்து இரண்டாக உடைத்து நம் நில வாசற்படிக்கு வெளிப்புறத்தில் இரண்டு பக்கமும் இரண்டு முடிச்சுகளை வைத்துவிட வேண்டும். மாலை வரை அது அங்கேயே இருக்கட்டும். தேங்காயை உடைத்து வெளியில் ஒரு நாள் முழுவதும் வைத்தால் கெட்டுப்போக வாய்ப்பு இல்லை. ஆனால் உங்களது வீட்டில் கெட்ட சக்தி இருந்தால் அந்த தேங்காய்யானது மாலை நேரத்திற்குள் வழுவழு தன்மையாக கெட்டுப்போன நிலையில் மாறிவிடும். அதாவது அழகிய நிலைக்குச் செல்லாது. அதைத் தொடும்போது கொழகொழப்பு தன்மை இருக்கும். இப்படி இருந்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் கண்ணுக்கு தெரியாத கேட்ட சக்தியோ, கண்திருஷ்டியோ இருக்கிறது என்பதை குறிக்கும். தேங்காய் நன்றாக காய்ந்து உலர்ந்த படி இருந்தால் உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள் இல்லை என்பதை குறிக்கும்.

தேங்காய் கெட்டுப் போய் இருந்தாலும், கெட்டுப்போகாமல் இருந்தாலும் அந்த தேங்காயை உங்கள் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு போய் கால் படாத இடத்தில் தூக்கிப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விடுங்கள். தேங்காய் கெடாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை அப்படியே விட்டு விடலாம். ஆனால் தேங்காய் கெட்டுப்போய் இருந்தால், கட்டாயமாக ஒரு பரிகாரத்தை செய்தாக வேண்டும்.

coconut-broken

எப்படிப்பட்ட கெட்ட சக்தியாக இருந்தாலும், கண்திருஷ்டியாக இருந்தாலும் அதை நவகிரக வழிபாட்டின் மூலம் நம்மால் சரி செய்து முடியும். சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதிக்கு சென்று ஒரு சிறிய பூஜையை செய்வதன் மூலம் கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

- Advertisement -

Masani Amman Temple

சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதிக்கு செல்லும் போது ஒன்பது தேங்காய் 9, நாட்டு வாழைப்பழம் 18, கொட்டைப்பாக்கு 18, வெற்றிலை 18, கதம்பம் 9 முழம். அதாவது ஒவ்வொரு கிரகத்திற்க்கும் இரண்டு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு, இரண்டு வாழைப்பழம், இதனால் 18 என்று கூறப்பட்டுள்ளது. நகரத்துக்கும் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும், கெட்ட சக்தியாக இருந்தாலும், கண்திருஷ்டியாக இருந்தாலும் நம்மை விட்டு நீங்கி விடும். இஷ்டம் உள்ளவர்கள் இந்த பிரசாதத்தை எல்லாம் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இஷ்டம் இல்லாதவர்கள் அங்கு இருக்கும் புரோகிதருக்கு தானமாக கொடுப்பதில் எந்த தவறும் இல்லை. இந்த நவகிரக பரிகாரத்தை ஒருமுறை செய்தாலே நம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருப்பதை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே
பெரிய யாகம் நடத்திய பலனை பெற வேண்டுமா? உங்களது வீட்டில் இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have veetil ketta sakthi. ketta sakthi. seivinai neenga vali. seivinai neenga