இரும்புக்கம்பி, ஹாக்கி ஸ்டிக்கால் தர்மஅடி. கால் கணுவில் முறிவு, 7 இடத்தில தையல் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர். அணியில் தேர்வாகாத வீரர்கள் தாக்கியதாக வழக்கு

Bhandari

டெல்லி மாநிலத்தின் மாவட்டங்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக்குழு தலைவராக இருப்பவர் அமித் பண்டாரி. டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். தற்போது அவர் 23 வயதுக்கு உட்பட்டோர் அணியை தேர்வு செய்யும் குழுவிற்கு தலைவராக உள்ளார்.

Amit

இந்நிலையில் டெல்லியில் நேற்று (11-02-2019) திங்கள் கிழமை அன்று டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இரும்பு கம்பிகள் மற்றும் ஹாக்கி ஸ்டிக் போன்றவைகளால் பலமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காலில் பலத்தகாயமும், உடலில் 7 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. இவரை தாக்கியவர்கள் போலீஸ் வருவதை அறிந்து அவரை அடித்துவிட்டு சம்பவ இடத்தினை விட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீஸ் அவசரமாக நடவடிக்கை தொடர்ந்தது. அதன்படி 23 வயதுக்கு உட்பட்டோர் அணியில் தேர்வாகாத சில வீரர்கள் கோபப்பட்டு அவரை பழிவாங்கும் விதமாகவே அவரை தாக்கியிருப்பதை போலீஸ் கண்டறிந்தனர்.

Amit-1

இருப்பினும் சரியான நபர்களை அவர்கள் இன்னும் பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் வீரர்கள் பலரும் விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினரை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய அணியை கேலி செய்யாதீர்கள் சேவாக். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஓரங்கட்டப்படுவார்கள் – ஹெய்டன் சவால்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்