ஆஸ்திரேலிய அணியை கேலி செய்யாதீர்கள் சேவாக். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஓரங்கட்டப்படுவார்கள் – ஹெய்டன் சவால்

Hayden

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துள்ளது. இதில், ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வென்றும், டி20 தொடரை (2-1) என்ற கணக்கில் பறிகொடுத்தது இந்திய அணி. இதற்கடுத்து இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Team

இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி உலகம் முழுவதும் ஒளிபரப்ப உள்ளது. இந்த தொடர் சம்பந்தமான ஒரு விளம்பரத்தில் நடித்த சேவாக் ஆஸ்திரேலிய அணியை கேலி செய்யும் விதமாக ஆஸ்திரேலிய உடை அணிந்த குழந்தைகளை பார்த்துக்கொள்ளும்படி நடித்திருந்தார். இந்த விளம்பரத்தினை கண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் அதற்கு தற்போது பதிலளித்துள்ளார்.

மேத்யூ ஹெய்டன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது : ஆஸ்திரேலிய அணியை கேலி செய்யாதீர்கள் சேவாக். மேலும், ஆஸ்திரேலிய அணியை காமெடியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பார்க்கத்தானே போகிறீர்கள் உலகக்கோப்பை தொடரில் யார் குழந்தைகளை பார்த்துக்கொள்ள போகிறீர்கள் என்று இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பதிவிட்டுள்ளார். இதோ அவரின் ட்வீட் :

ஆனால், இந்த பதிவானது ஒரு சராசரி நகைச்சுவையாக போடபட்டதே ஏனெனில், சேவாக் மற்றும் ஹெய்டன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் மேலும், ஹெய்டன் கமெண்ட்ரி, பயிற்சியாளர் என இந்தியாவிலே அதிக நேரம் கழிக்கிறார். எனவே, இந்திய வீரர்களுக்கும் அவருக்குமான பிணைப்பு என்பது மிக நெருக்கமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தல தோனியின் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் – இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்