அட, எக்ஸாஸ்ட் ஃபேனை சுத்தம் செய்ய இவ்வளவு ஈசியான ஐடியா இருக்கா? செம்ம ஐடியா இது! மிஸ் பண்ணிடாதீங்க.

exhaust-fan
- Advertisement -

எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய கஷ்டமான வேலைகளில் இதுவும் ஒன்று. சமயலறையில் இருக்கக்கூடிய எக்ஸாஸ்ட் ஃபேனை யார் சுத்தம் செய்வது. சமையல் அறையை வீட்டில் இருக்கும் பெண்கள் சுலபமாக சுத்தம் செய்து கொண்டாலும், கொஞ்சம் உயரத்தில் இருக்கக்கூடிய எண்ணெய் பிசுபிசுப்பு படிந்த எக்ஸாஸ்ட் ஃபேனை சுத்தம் செய்வது கஷ்டம்தான். ஆண்களின் துணையை நாடுவார்கள். ஆண்களாகவே இருந்தாலும், அந்த எக்ஸாஸ்ட் ஃபேனில் இருக்கக்கூடிய தூசிகளை அவ்வளவு எளிதில் சுத்தம் செய்து விட முடியாது. சிலபேர் இதனால் எக்ஸாஸ்ட் ஃபேனை வருடத்திற்கு ஒரு முறைதான் சுவற்றில் இருந்து கழட்டி எலக்ட்ரிஷனை வைத்து சுத்தம் செய்து மாட்டுவார்கள்.

exhaust-fan1

அப்பப்பா! இந்த ஒரு எக்ஸாஸ்ட் ஃபேனை சுத்தம் செய்வதற்குள் எத்தனை கஷ்டங்கள். எக்ஸாஸ்ட் ஃபேனில் எண்ணெய் பிசுபிசுப்பும் தூசும் படிந்து விட்டால், சமையலறையில் உள்ளே இருக்கும் புகையையும் அது சரியாக இழுத்து வெளியே விடாது. சுலபமான முறையில் எக்ஸாஸ்ட் ஃபேனை சுத்தம் செய்ய ஒரு வழி உள்ளது. அது என்ன என்பதை பற்றிதான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

- Advertisement -

நம் எல்லோர் வீட்டிலும் இருக்கும் முகத்திற்கு போடக்கூடிய பவுடரை வைத்து எக்ஸாஸ்ட் ஃபேனை சுலபமாக சுத்தம் செய்துவிடலாம். பவுடர் டப்பாவை எடுத்து கொள்ளுங்கள். எக்ஸாஸ்ட் ஃபேன் மீது அப்படியே தூவி கொட்டி விடுங்கள். அழுக்கு நிறைந்த பிசுபிசுப்பு நிறைந்த இடங்களில் அப்படியே பவுடர் ஒட்டிக்கொள்ளும்.

powder1

உடனடியாக ஒரு நல்ல காட்டன் துணியை வைத்து உங்களுடைய எக்ஸாஸ்ட் ஃபேனை துடைத்துப் பாருங்கள். எப்படி சுத்தமாகும் என்று உங்களுக்கே தெரியும். எக்ஸாஸ்ட் ஃபேனுக்கும் மட்டும் இந்த டிப்ஸ் அல்ல. உங்கள் வீட்டு சமையலறையில் சீலிங் ஃபேன் மாட்டி வைத்து இருந்தாலும், எந்த இடத்தில் ஃபேன் மாட்டி வைத்து இருந்து, அதில் எண்ணெய் பிசுபிசுப்பு ஒட்டியிருந்ததாலும் அதன் மேலே இந்த பவுடரைக் கொட்டி சுத்தம் செய்தால் சுலபமாக எண்ணெய் பிசுபிசுப்பையும் ஒட்டடையும் துடைத்து எடுத்து விடலாம்.

- Advertisement -

உதராணமாக சீலிங் ஃபேனில் மாட்டியிருக்கும் ரெக்கைகளில் ஓரங்களில் எண்ணெய் பிசுபிசுப்பில் ஒட்டடை ஒட்டி இருக்கும். இதை சாதாரணமாக துடைத்து எடுத்தோம் என்றால் அவ்வளவு சுலபத்தில் வராது. அந்த இடங்களில் பவுடரை கொட்டி விட்டு அதன் பின்பு அந்த ஓட்டையை சுத்தம் செய்து பாருங்கள். சுலபமாக தூசு ஒட்டாமல் நீங்கிவிடும்.

exhaust-fan2

சமையலறையில், டைல்ஸ் ஒட்டியிருக்கும் மேல் பக்கத்தில் இப்படி எண்ணெய் பிசுபிசுப்பு நிறையவே படிந்திருக்கும். அந்த இடத்திலும் கொஞ்சமாக பவுடரை கொட்டி விட்டு, காட்டன் துணியில் துடைத்து எடுத்து விட்டால், அந்த இடம் சுத்தமாக மாறிவிடும். பவுடரைக் கொட்டி சுத்தம் செய்தால் எண்ணெய் பிசுபிசுப்பு போய்விடுமா என்று சந்தேகப் படாதீர்கள். உங்கள் வீட்டு எக்ஸாஸ்ட் ஃபேனில் ஒரே ஒருமுறை மட்டும் இதை ட்ரை பண்ணி பாருங்க.

exhaust-fan3

ஆனால் மிக மிக முக்கியமான ஒரு விஷயம். எக்ஸாஸ்ட் ஃபேன் ஸ்விச் ஆப் செய்து இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் வீட்டு மெயினை ஆஃப் செய்துவிட்டு அதன் பின்பு, இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பார்ப்பது தான் நல்லது. மிஸ் பண்ணாதீங்க. வீட்டில் இருக்கும் பெண்களே கூட சுலபமான முறையில் இனி எக்ஸாஸ்ட் ஃபேனை சுத்தம் செய்துவிடலாம்.

- Advertisement -