இந்த சின்ன பரிகாரம் ஏழரைச்சனியின் பாதிப்பை எப்படி குறைக்கும்? சித்தர்கள் கூறிய ரகசியம்.

sani-bhagavan

ஒருவருக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தும் காலம் என்பது ‘கஷ்ட காலம்’ தான். இந்த கஷ்ட காலம் என்பது ஏழரைச்சனியின் போதுதான் நமக்கு வரும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு. ஏழரை சனியில் கூட நமக்கு நல்லது நடக்கும் காலம் இருக்கிறது. அந்த சனிபகவான் நமக்கு கஷ்டத்தை மட்டுமே தொடர்ந்து தரமாட்டார். கஷ்டத்தோடு சேர்த்து நன்மைகளையும் நமக்கு வழங்கத்தான் செய்வார். இதனால் சனி பகவானை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். எல்லா இறைவனும் எப்படி அவரவர் கடமைகளை செய்கின்றார்களோ, அப்படித்தான் சனிபகவானும் தன் கடமையை தொடர்ந்து செய்கின்றார். சனிபகவான் கஷ்டத்தை கொடுப்பது தவறு என்றால், எமதர்மராஜா உயிரை எடுப்பதும் தவறுதானே. ஒருவருக்கு மரணம் ஏற்படுவது எப்படி விதியாக கருதப்படுகின்றதோ, அப்படித்தான் ஏழரைச் சனியும் நமது விதி. இதையும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நமக்கு ஏழரைச்சனி ஆரம்பித்துவிட்டது என்று நினைத்துக்கொண்டே இருக்கும்பட்சத்தில் ஏழரைச்சனி நம்மை விட்டு நீங்க போவதும் இல்லை. நமக்கு உண்டாகும் கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்கப் போவதுமில்லை. ஆனால் நமக்கு ஏற்படும் பாதிப்பின் தாக்கத்தை நம்மால் குறைத்துக்கொள்ள முடியும். இதற்கான பரிகாரங்களும் நமக்கு சித்தர்களால் குறிப்பிட்டுள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

sani-baghavan

நம்முடைய முன் ஜென்மங்களில் செய்த பாவங்களுக்கெல்லாம், தண்டனையானது இந்த ஏழரைச் சனிக் காலத்தில்தான் நமக்கு கிடைக்கும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே முடிந்த வரை பாவங்கள் செய்வதை நாம் தவிர்த்துக் கொள்ளலாம். அடுத்த ஜென்மத்திலாவது ஏழரைச் சனியின் பாதிப்பு குறைவாக இருக்கட்டும் என்பதற்காக.

ஏழரைச்சனி காலத்தில் முதலில் நேர்மையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். எப்பொழுதும் நேர்மையாக இருப்பது நல்லது. ஆனால் ஏழரைச்சனி காலத்தில் தவறு செய்தால் உடனே மாற்றிக் கொள்கிறீர்கள். அனாவசியமாக யாரிடமும் கோபப்படாதீர்கள். கஷ்டங்கள் ஏற்படும் சமயத்திலும், தோல்விகள் ஏற்படும் சமயத்தில் முதலில் நமக்கு வருவது கோபம் தான். இயலாமை ஒருவருக்கு வந்துவிட்டது என்றால் அதனுடன் சேர்த்து கோபமும் வந்துவிடும். இந்த கோபத்தை கட்டுப் படுத்தினால் போதும் நாம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

Sani baghavan

சனிபகவானை சாந்தப்படுத்த வேண்டும் என்றால் நாம் பல புண்ணிய காரியங்களில் ஈடுபட வேண்டும். புண்ணிய காரியங்கள் என்பதில் பல பரிகாரங்கள் இருந்தாலும், முதல் இடத்தில் இருப்பது எறும்புக்கு உணவு தருவதுதான். அதாவது சனியின் பாதிப்பு உடையவர்கள் வன்னி மரத்தடி பிள்ளையாரை வணங்குவது மிகவும் சிறந்தது. முதலில் பச்சரிசியை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு நன்றாக நுணுக்கி கொள்ள வேண்டும். அதை நம் இரண்டு கைகளிலும் சேர்த்து வைத்து அந்த இறைவனை மனதார நினைத்து வணங்கி, மூன்று முறை விநாயகரை வலம் வந்து, வன்னி மரத்தடியில் தூவ வேண்டும். இப்படி நாம் தூவப்படும் பச்சரிசி துகள்களை எறும்புகள் வந்து சாப்பிட்டு விட்டு, குளிர் காலங்களுக்கு தேவையான அரிசி பருக்கைகளை கொண்டுபோய் சேமித்து வைத்துக் கொள்ளும். அப்படி சேமித்து வைத்த உணவினை எரும்புகள் எப்போதெல்லாம் சாப்பிடுகின்றதோ, அப்போதெல்லாம் நமது கஷ்டங்களானது படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

praying god

ஒரு எரும்பு நீங்கள் போட்ட அரிசி பருக்கையை ஒரு முறை சாப்பிட்டால், 108 ஏழைகளுக்கு சாப்பாடு போட்ட பலனை நமக்கு தரும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்வதோடு விட்டுவிடக்கூடாது. அந்த எறும்புகளுக்கு உணவானது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதனால் வாரம் ஒரு முறை சனிக்கிழமை அன்று இப்படி செய்து வாருங்கள். அந்த சனிபகவானின் தாக்கத்திலிருந்து நிச்சயம் தப்பித்துக்கொள்ளலாம்.

உங்களால் நிச்சயம் நம்ப முடியாது. இந்த பரிகாரத்தை செய்து விட்டால் ஏழரைச் சனியின் பாதிப்பு குறைந்து விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் மனதில் இருக்கும். வன்னி மரத்தடி பிள்ளையார் உங்களது வீட்டின் அருகில் இல்லை என்றால், கோவில்களில் இருக்கும் மரத்தடியில் இந்த பரிகாரத்தை செய்து வரலாம். ஒரு சில வாரங்கள் இந்த பரிகாரத்தை மனப்பூர்வமாக அந்த விநாயகரை நினைத்து தொடர்ந்து செய்து வாருங்கள் உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே
ஜோதிடம்: இந்த வார ராசிபலன் – ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ezharai sani pariharam in tamil. Ezharai sani parigaaram. Ezharai sani effects. Sani parigarangal Tamil.